ரூ.1,40,000 சம்பளத்தில் தேசிய விதைகள் கழகத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
முதலிரவு ஃபீல் குட் ஆக இருக்க 7 பாயின்ட் ! | காமத்துக்கு மரியாதை - 216
இந்த டென்ஷன் வேண்டாம்
அது பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமணம் என்றாலும் சரி, காதல் திருமணம் என்றாலும் சரி, அல்லது பெற்றோர் நிச்சயித்து அதன் பிறகு காதல் வந்து நடைபெற்ற திருமணம் என்றாலும் சரி... அன்றைய இரவு, அதாவது முதலிரவு ஆண், பெண் இருவருக்குமே வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறக்க காத்திருக்கும் ஓர் இரவு தான். என்ன நடக்குமோ, எப்படி நடக்குமோ என்று பெண்ணும்... எப்படி நடந்துக்கிட்டா சரியா இருக்கும், மனைவிக்கு பிடிக்கும் என்று ஆணும்... உடல், மனம் இரண்டிலும் ஹார்மோன்கள் ஹார்ட்டின் விட காத்திருக்கும் அந்த ஒரு நாள்தான் முதலிரவு. அந்த இரவு ஆண், பெண் இருவருக்கும் ஃபீல் குட் இரவாக அமைய டாக்டர் காமராஜ் தரும் 7 டிப்ஸ் இதோ உங்களுக்காக...
பொழுது விடிந்தால் திருமணம். அந்தப் பதட்டத்திலேயே இரவெல்லாம் கண் விழித்திருப்பார்கள் மணமக்கள். இதனால் மறுநாள் திருமணத்தன்று கிட்டத்தட்ட மாலை நெருங்கும்போது இருவருமே சோர்ந்துதான் இருப்பார்கள். அன்றைய இரவே முதல் இரவு நடந்தாக வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தினால், மகிழ்ச்சி ஒரு பக்கம் சோர்வு மறுபக்கமுமாக தலையாட்டுவார்கள். இந்த நிலையில் நீங்கள் இருந்தால், முடிந்தவரை முதல் இரவை அனுபவியுங்கள். முடியவில்லை என்றால், இருவரும் பேசி வைத்துக்கொண்டு நிம்மதியாக தூங்குங்கள். அடுத்த நாள் இரவு உங்களுக்கு முதலிரவாக இருக்கட்டும். முதலிரவு அன்று தாம்பத்திய உறவு கொண்டே ஆக வேண்டும் என்று டென்ஷனை மனதுக்குள் ஏற்றிக்கொண்டீர்கள் என்றால், அந்த இரவு இருவருக்குமே ஃபீல் குட் நினைவாக அமையாமலும் போகலாம்.
உடல் பகிர்தலில் இது முக்கியம்
அன்றைய இரவு இருவரும் சுத்தமாக இருங்கள். அது உடலில் ஆரம்பித்து உங்கள் வாய் வரை சுத்தமாக இருக்கட்டும். பரஸ்பர உடல் பகிர்தலில் சுத்தத்துக்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது. முதல் நாளே தன் வாழ்க்கை துணை சுத்தமாக இல்லை என்று உணர்ந்து விட்டால், ஃபீல் குட் உணர்வில் நிச்சயம் முகச்சுளிப்பு ஏற்படும்.
சீக்கிரம் சென்று விடுங்கள்
இந்த இரவுக்குத்தான் நாங்கள் பல வருடங்களாக காத்திருந்தோம் என்கிற நீண்ட நாள் காதலர்கள், சரியான நேரத்துக்குள் ரிசப்ஷனை முடித்துவிட்டு உங்கள் முதலிரவை தொடங்கலாம். இது காலையில் திருமணம், மாலையில் ரிசப்ஷன் என்று திட்டமிடுபவர்களுக்கு சரியாக இருக்கும். முதல் நாள் இரவு ரிசப்ஷன், மறுநாள் காலை திருமணம் என்று திட்டமிடுபவர்கள் இரவு உணவை சீக்கிரமாக முடித்துவிட்டு, சோர்வாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு முதலிரவு அறைக்குள் சென்று விடுங்கள். கொஞ்ச நேரம் ஓய்வு, அதன் பிறகு ஃபோர் ப்ளே, பிறகு தாம்பத்ய உறவு என்று முதல் இரவை ஃபீல் குட் ஆக்க இந்த வழிமுறை உங்களுக்கு உதவும்.
செலிபிரேஷன் எங்கே?
சில குடும்பங்களில் மணமகள் வீட்டில்தான் முதலிரவு நடக்கும். இது மணமகனுக்கு அசௌகரியமாக இருக்கலாம். சில குடும்பங்களில் மணமகன் வீட்டில்தான் முதலிரவு நடக்கும். இது மணமகளுக்கு அசௌகரியமாக இருக்கலாம். இப்படிப்பட்ட சென்சிடிவ் கப்பிளாக நீங்கள் இருப்பீர்கள் என்றால், உங்கள் முதலிரவை உங்களுக்குப் பிடித்த ஹோட்டல் அறையிலோ அல்லது ரிசார்ட்டிலோ செலிபிரேட் செய்யலாம். இப்படி செய்தால் காலத்துக்கும் இந்த நாள் உங்கள் நினைவில் நிற்கும்.
’வி ஆர் லவ்வர்ஸ்' மனநிலை
உங்களுடையது பெற்றோர்கள் பார்த்து செய்து வைத்த திருமணம் என்றால், திருமணம் முடிந்தவுடனே மணமக்கள் என்கிற எண்ணத்தை மறந்து விட்டு, ’வி ஆர் ஃப்ரெண்ட்ஸ் அல்லது வி ஆர் லவ்வர்ஸ்’ என்ற மனநிலைக்கு வந்து விடுங்கள். அப்போதுதான் இருவரும் இயல்பாக இருக்க முடியும். இயல்பாக இருந்தால் மட்டுமே இன்றைய தினமே நமக்கு முதலிரவு வேண்டுமா அல்லது பரஸ்பரம் பேம்பரிங் செய்துகொண்ட பிறகு முதலிரவைக் கொண்டாடலாமா என்று முடிவு செய்ய முடியும்.
ஃபிளர்ட்டிங்ஸ் செய்யலாம்
இந்த பாயிண்ட் காதல் திருமணம் செய்தவர்களுக்கானது. திருமணம் நெருங்க நெருங்கவே இருவருமே முதலிரவுக்காக காத்திருப்பது பரஸ்பரம் புரிந்துவிடும். இவர்கள் ரிசப்ஷன் நடக்கும்போது கண்ணுக்குள் பார்த்து சிரித்துக் கொள்வது, விரல்களை பிடித்துக் கொள்வது என சின்னச் சின்ன ஃபிளர்ட்டிங்ஸ் செய்துகொள்ளலாம். இவர்கள், முதலிரவை செலிபிரேட் செய்ய தங்களுக்கான இரவு உடைகளைகூட தயாராக வைத்திருக்கலாம். இப்படி செய்தால் இந்த நாளை அவர்கள் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது.
பேச மட்டும் செய்யுங்கள்
முழுக்க முழுக்க பெற்றோர்கள் பார்த்து செய்து வைத்த திருமணம். திருமணத்துக்கு முன்னால் இருவரும் பெரிதாக பேசிக்கொள்ளவும் இல்லை. மணமகன் திருமணத்துக்கு சில நாள்களுக்கு முன்னால்தான் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கே வந்திருக்கிறார் என்றால், அந்தத் தம்பதியினர் முதலிரவை பரஸ்பரம் தங்களைப் பற்றி பேசிக்கொள்ள பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களைப் பொறுத்தவரைக்கும் முதல் இரவை ஃபீல் குட் ஆக்க நல்ல வழி இதுதான்.