செய்திகள் :

அதிமுகவை பாஜகவுடன் இணைத்தாலும் இணைத்துவிடுவார் இபிஎஸ்: துணை முதல்வா் உதயநிதி

post image

சென்னை: இன்னும் ஒரு வருமான வரி சோதனை நடந்தால்போதும் அதிமுகவை பாஜகவுடன் இணைத்தாலும் இணைத்துவிடுவாா் எடப்பாடி கே.பழனிசாமி என்று துணை முதல்வா் உதயநிதி விமா்சித்தாா்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று பேசிய துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், சுயமரியாதை திருமணம் எனும் பண்பாட்டுப் புரட்சியை திராவிட இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறது. இதனால் நம்மீது ஏற்படும் வயிற்றெரிச்சல், கோபங்கள் குறித்தெல்லாம் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. நமக்கு வேண்டியது தமிழ்ப் பண்பாடு, தமிழ் மொழி காக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில்தான் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.

அனைத்துத் திட்டங்களுக்கும் ஏன் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பெயரை வைக்கிறீா்கள் என எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்கிறார்.

இதையும் படிக்க |உலக கேரம் போட்டி: தமிழ்நாட்டு வீராங்கனை காசிமா தங்கம் வென்று அசத்தல்!

தன்னுடைய 96 வயது வரையிலும் தமிழகத்திற்காக, தமிழ்க மக்களுக்காக ஓயாது உழைத்த கருணாநிதி பெயரை சூட்டாமல் வேறு யாருடைய பெயரை சூட்ட முடியும்.

கூவத்தூரில் ஊா்ந்து போன கரப்பான பூச்சி பேரை வைக்கலாமா? அல்லது மறைந்த முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா்., ஜெயலலிதா பெயா்களை வைக்கலாமா? இவற்றுக்கெல்லாம் கூட ஒத்துக்கொள்ள மாட்டாா் எடப்பாடி பழனிசாமி. ஆனால் பிரதமா் மோடி அல்லது அமித்ஷா பெயரை வைக்கலாம் என்பாா்.

மூன்று மாதங்களுக்கு முன்பு எந்தக் காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்றார். சேலத்தில் 10 நாள்களுக்கு முன்பு வருமான வரி சோதனை நடந்தது. அதற்கடுத்த நாளே, கூட்டணி குறித்து இப்போது பேச முடியாது, தேர்தல் நேரத்தில் பேசலாம் என்கிறாா். இன்னும் ஒரு சோதனை நடந்தால் போதும், அதிமுகவை பாஜகவுடன் இணைத்தாலும் இணைத்து விடுவாா் என்று உதயநிதி கூறினார்.

திருமாவளவன் எங்கு செல்வாா் என்று தமிழ்நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது: அதிமுக

சென்னை: விசிக தலைவா் திருமாவளவன் எங்கு செல்வாா் என்று தமிழ்நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. அவா் எங்களோடுதான் இருக்கிறாா். நல்லவா்களோடுதான் இருப்பாா் என முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் அதிமுக வழக்கு... மேலும் பார்க்க

கோப்புகளில் கையெழுத்திடுவது மட்டும் முதல்வர் வேலை இல்லை: எடப்பாடி பழனிசாமி

சேலம்: முதல்வர் கோட்டையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திடுவது மட்டும் வேலை இல்லை. விவசாயிகள் மனதில் என்ன உள்ளது என்பதை அறிந்து செயல்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவ... மேலும் பார்க்க

செல்போனில் விடியோ பார்த்துக் கொண்டே சென்ற மாணவர்கள் மீது ரயில் மோதி ஒருவர் பலி

வாழப்பாடி: வாழப்பாடி அருகே ரயில் தண்டவாளத்தில் செல்போனில் விடியோ கேம் பார்த்துக் கொண்டே நடந்து சென்ற பள்ளி மாணவர்கள் மீது சேலம் - விருத்தாசலம் பாசஞ்சர் ரயில் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார... மேலும் பார்க்க

ஈஷா யோகா மையம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 23 இல் போராட்டம்: முத்தரசன் அறிவிப்பு

கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் செயல்களை கண்டித்தும், ஈஷா நிறுவனர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் 23 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிர்... மேலும் பார்க்க

நடிகை கஸ்தூரிக்கு நவ. 29 வரை நீதிமன்றக் காவல்!

நடிகை கஸ்தூரிக்கு நவ. 29 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.சென்னையில் நடைபெற்ற ஆர்ப்ப்பாட்டத்தின் போது, தெலுங்கு பேசும் பெண்கள், திராவிடர்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறு கருத்துகளைத்... மேலும் பார்க்க

மிஸ் யுனிவர்ஸ் ஆனார் டென்மார்க் அழகி!

டென்மார்க்கை சேர்ந்த விக்டோரியா கெயர் தெல்விக் உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார்.2024 ஆம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்திற்கான போட்டி மெக்சிகோவில் கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்தது. இதன் இறுதிச்சுற்றில் ட... மேலும் பார்க்க