செய்திகள் :

மிஸ் யுனிவர்ஸ் ஆனார் டென்மார்க் அழகி!

post image

டென்மார்க்கை சேர்ந்த விக்டோரியா கெயர் தெல்விக் உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

2024 ஆம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்திற்கான போட்டி மெக்சிகோவில் கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்தது. இதன் இறுதிச்சுற்றில் டென்மார்க், வெனிசுலா, மெக்சிகோ, நைஜீரியா, தாய்லாந்து நாட்டு அழகிகள் பங்குபெற்றனர்.

ஆரம்பம் முதலே கவனம் ஈர்த்த டென்மார்க் அழகி விக்டோரியா கெயர் தெல்விக் (21) இறுதிச்சுற்றில் நடுவர்களின் கேள்விக்கு, “‘நீங்கள் எங்கிருந்து வந்தாலும், உங்கள் கடந்த காலம் எதுவாக இருந்தாலும் அதை உங்கள் பலமாக மாற்ற நீங்கள் எப்போதும் தேர்வு செய்யலாம்.” எனப் பதிலளித்துள்ளார்.

இந்த பதிலால் கவரப்பட்ட நடுவர்கள் இந்தாண்டின் உலக அழகியாக விக்டோரியா கெயர் தெல்விக்கை அறிவித்தனர்.

இவரே டென்மார்க்கிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் உலக அழகியாவார். புதிய வரலாற்று சாதனை படைத்த விக்டோரியா தொழில்முனைவராகவும் இருக்கிறார்.

இரண்டாவது இடம் நைஜீரியாவை சேர்ந்த சிடிம்மா அடெட்ஷினாவுக்கும் மூன்றாவது இடம் மெக்சிகோவை சேர்ந்த மரியா ஃபெர்னாண்டாவுக்கும் கிடைத்துள்ளது.

நடிகை கஸ்தூரிக்கு நவ. 29 வரை நீதிமன்றக் காவல்!

நடிகை கஸ்தூரிக்கு நவ. 29 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.சென்னையில் நடைபெற்ற ஆர்ப்ப்பாட்டத்தின் போது, தெலுங்கு பேசும் பெண்கள், திராவிடர்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறு கருத்துகளைத்... மேலும் பார்க்க

நவ. 28, 29-ல் விழுப்புரத்தில் ஆய்வு: முதல்வர் ஸ்டாலின்

வரும் நவம்பர் 28, 29 தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்திற்குச் செல்ல இருப்பதாக திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டால... மேலும் பார்க்க

கடைசி நாள் படப்பிடிப்பு... கண்கலங்கி அழுத சுந்தரி தொடர் நடிகர்கள்!

சுந்தரி தொடர் 2 பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.சுந்தரி தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அதே நடிகர்களை வைத்து சுந்தரி இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது.முதல் பாகத்தில் கிராம... மேலும் பார்க்க

இந்திய ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இந்திய ரிசர்வ் வங்கிக்கு வாடிக்கையாளர் சேவை எண் மூலம் மிரட்டல் விடுத்த நபரை மும்பை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணின் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்,... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.பிக் பாஸ் வீட்டில் ஆண்கள், பெண்கள் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. வைல்டு கார்ட... மேலும் பார்க்க

மழைக்கு ஒரு வாரம் பிரேக்... அடுத்து எப்போது? - தமிழ்நாடு வெதர்மேன்!

சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் ஒரு வாரத்துக்கு மழைக்கு வாய்ப்பில்லை என்று தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, ப... மேலும் பார்க்க