Seeman: ``இது ஒரு பெரிய குற்றமா?'' - நடிகை கஸ்தூரி கைதுக்கு சீமான் கண்டனம்!
நேற்றிரவு நடிகை கஸ்தூரி ஹைத்ராபாத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர் சந்திப்பில், கஸ்தூரி கைது குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
"இந்த கைது அவசியமற்றது. திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கை. கஸ்தூரி பேசியதால் காயம்பட்டதாக சொல்கிறார்கள். இதில் காயம்படவும் வேதனைபடவும் ஒன்றுமில்லை.
நூறு ஆண்டுகளாக தமிழ பேரினத்தை திராவிடர் எனக் கூறுவதால் நாங்கள் எவ்வளவு காயம்பட்டிருப்போம்? என் அடையாளத்தை மறைத்து என் இனத்துக்கு வேறு பெயர் வைக்க நீங்கள் யார்?
நாங்கள் எவ்வளவு காயம்பட்டிருக்கிறோம். ஆனால் இதெல்லாம் சிறையில் வைக்கும் அளவு பெரிய குற்றமா? என்பதுதான் என் கேள்வி.
திமுகவினருடைய வாடகை வாய்கள், வலையொலிகாரர்கள், கட்சிக்காரர்கள் பேசுவதை அவர்கள் கேட்கிறார்களா, இல்லையா?
கருத்தியல் ரீதியாக சண்டையிடுவது, அரசியல் ரீதியாக மோதுவது வேறு, திமுகவினர் தனிப்பட்ட முறையில் பேசுவது, தாய்தந்தையர், குடும்பத்தினர் பற்றி தவறாக பேசுகின்றனர். அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? அதை ஒரு வழக்காக கொடுத்தால் வழக்காவது எடுப்பீர்களா?
நீங்கள் அவசர அவசரமாக சென்று கைது செய்யும் அளவு கஸ்தூரி பேசியது பெரிய குற்றமா என்ன? அவர் பேசியது தவறுதான், நீங்கள் காயப்பட்டிருந்தாலும் வருத்தம் தெரிவித்தப்பிறகு விடவேண்டியதுதானே... இதற்காக ஒரு பெண்ணை அவசர அவசரமாக வேறு மாநிலத்துக்குச் சென்று கைது செய்யும் அளவு இது ஒரு பெரிய குற்றமா?
இந்த நாட்டில் மலைகளை வெட்டி விற்பவர்கள், மண்ணைத் தின்பவர்கள், லட்சலட்சமாக ஊழல் செய்து ஊறித் திளைப்பவர்கள், பெண்களை வன்புணர்வு செய்து கொலை செய்பவர்கள், கொள்ளையடிப்பவர்கள் எல்லாரும் வெளியில்தானே இருக்கிறார்கள்." எனப் பேசினார் சீமான்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb