செய்திகள் :

ரவிச்சந்திரன் அஸ்வினிடம் நான் கவனமாக இருக்க வேண்டும்: மூத்த ஆஸி. வீரர்

post image

பார்டர் - கவாஸ்கர் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு எதிராக கவனமாக விளையாட வேண்டும் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கும் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கு மிக முக்கியமான தொடர் என்பதால் இரண்டு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்துக்கும் இடையேயான போட்டி மிகவும் கடுமையாக இருக்கும். கடந்த 2020-2021 ஆம் ஆண்டு பார்டர் - கவாஸ்கர் தொடரின்போது, அஸ்வின் பந்துவீச்சில் ஸ்டீவ் ஸ்மித் தடுமாறினார்.

இதையும் படிக்க: தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு நாதன் மெக்ஸ்வீனி சரியான தேர்வா? மேத்யூ ஹைடன் பதில்!

அந்த தொடரின்போது, ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டினை அஸ்வின் மூன்று முறை வீழ்த்தினார். அஸ்வினுக்கு எதிராக ஸ்மித் 22 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

கவனம் தேவை

பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் போட்டி வருகிற நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் தொடங்கவுள்ள நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு எதிராக கவனமாக விளையாட வேண்டும் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஸ்டீவ் ஸ்மித்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலிய மண்ணில் ஆஃப் ஸ்பின்னில் ஆட்டமிழப்பதை நான் விரும்பவில்லை. ஆனால், ரவிச்சந்திரன் அஸ்வின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர். அவர் பல நல்ல பந்துவீச்சு திட்டங்களுடன் வருவார். பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் சில தருணங்களில் எனக்கெதிராக அவர் சிறப்பாக பந்துவீசியுள்ளார். ஆனால், எஸ்சிஜி மைதானத்தில் அவருக்கு எதிராக நான் நன்றாக விளையாடினேன்.

இதையும் படிக்க: திலக் வர்மாவுக்கு 3-வது இடத்தை விட்டுக்கொடுக்கிறாரா சூர்யகுமார் யாதவ்?

அந்த போட்டியில் அவரது பந்துவீச்சை மிகவும் கவனமாக எதிர்கொண்டு 131 ரன்கள் மற்றும் 81 ரன்கள் எடுத்தேன். அதுவே எனது வெற்றிக்கான ரகசியம். அஸ்வினை பந்துவீச்சில் அழுத்தத்தை ஏற்படுத்த விடாமல், அவருக்கு எதிராக கவனமாக விளையாடி ரன்கள் குவிக்க விரும்புகிறேன் என்றார்.

3 மணி நேரம் வலைப்பயிற்சி; முதல் போட்டிக்கு தயாராகும் கே.எல்.ராகுல்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் போட்டிக்காக இந்திய வீரர் கே.எல்.ராகுல் தீவிரமாக தயாராகி வருகிறார்.பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வருகிற ... மேலும் பார்க்க

4-வது டி20: தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி; மே.இ.தீவுகள் வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டி செயிண்ட் லூசி... மேலும் பார்க்க

தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு நாதன் மெக்ஸ்வீனி சரியான தேர்வா? மேத்யூ ஹைடன் பதில்!

இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் நாதன் மெக்ஸ்வீனி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க சரியான தேர்வா என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் பேசியுள்ளார்... மேலும் பார்க்க

திலக் வர்மாவுக்கு 3-வது இடத்தை விட்டுக்கொடுக்கிறாரா சூர்யகுமார் யாதவ்?

இந்திய அணியில் இனிவரும் காலங்களில் 3-வது வீரராக திலக் வர்மா களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்திய அணியில் 3-வது வீரராக களமிறங்கி முத்திரை பதித்தவர் விராட் கோலி. அண்மையில் நிறைவடைந்த டி20 உலகக்... மேலும் பார்க்க

“பெருமை கொள்கிறேன்...” இளம் இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளர் பாராட்டு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை அந்த அணியின் சொந்த மண்ணில் வென்றது மிகவும் சிறப்பானது என தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் விவிஎஸ் லக்‌ஷ்மன் தெரிவித்துள... மேலும் பார்க்க

பாகிஸ்தானை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா!

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது.பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி சிட்னியில் இன்று (நவம்பர் 16) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ... மேலும் பார்க்க