திருமாவளவன் எங்கு செல்வாா் என்று தமிழ்நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது: அதிமுக
3 மணி நேரம் வலைப்பயிற்சி; முதல் போட்டிக்கு தயாராகும் கே.எல்.ராகுல்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் போட்டிக்காக இந்திய வீரர் கே.எல்.ராகுல் தீவிரமாக தயாராகி வருகிறார்.
பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வருகிற நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் நடைபெறுகிறது. டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இந்தியா, ஆஸ்திரேலியா இரண்டு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக பெர்த்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் எனக் கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் எனக் கூறப்பட்டது. இந்த சூழலில் இந்திய அணிக்குள் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தின்போது, கே.எல்.ராகுலுக்கு முழங்கையில் அடிபட்டது. இதனால், முதல் போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது.
இதையும் படிக்க: ரவிச்சந்திரன் அஸ்வினிடம் நான் கவனமாக இருக்க வேண்டும்: மூத்த ஆஸி. வீரர்
3 மணி நேர வலைப்பயிற்சி
முழங்கையில் அடிபட்டபோதிலும் கே.எல்.ராகுல் எந்த ஒரு அசௌகரியமுமின்றி 3 மணி வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். இந்த வலைப்பயிற்சியின்போது, அவர் நீண்ட நேரம் பேட்டிங் செய்தார்.
கே.எல்.ராகுல் நலமுடன் இருப்பதாகவும், அடுத்த சில நாள்களுக்கு இந்திய அணியின் மருத்துவக் குழு அவரை தொடர்ந்து கண்காணிக்க உள்ளதாகவும் பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதல் போட்டியில் விளையாடவில்லை. கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதன் காரணமாக முதல் போட்டியில் ஷுப்மன் கில் விளையாடமாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனால், கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவுள்ளதும் உறுதியாகியுள்ளது.
இதையும் படிக்க: திலக் வர்மாவுக்கு 3-வது இடத்தை விட்டுக்கொடுக்கிறாரா சூர்யகுமார் யாதவ்?
முதல் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடாத பட்சத்தில், அந்தப் போட்டியில் துணைக் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியை கேப்டனாக வழிநடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.