செய்திகள் :

Elon Musk: இந்தியாவின் செயற்கைக்கோளை ஏவ Space X நிறுவனத்தை நாடும் இஸ்ரோ - ஏன்?

post image

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் கனமான செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தவிருக்கிறது இந்தியா.

"ஸ்பேஸ் எக்ஸின் ஃபால்கன்-9 (Falcon-9) என்ற ராக்கெட் விண்கலம் இஸ்ரோவின் Gsat-20 (GSAT N-2 என்றும் அழைக்கப்படுகிறது) என்ற 4,700 கிலோ நிறையுள்ள செயற்கைக்கோளை நவம்பர் 19ம் தேதி விண்ணில் செலுத்தவுள்ளது" என இந்த செய்தியை உறுதிபடுத்தியிருக்கிறார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்.

இஸ்ரோ தலைவர் சோம்நாத்

பாகுபலி அல்லது ஃபேட் பாய் என அழைக்கப்படக் கூடிய இஸ்ரோவின் எல்.வி.எம்-3 (LVM-3) ராக்கெட் நான்கு டன் நிறையுள்ள செயற்கைக்கோளையும் ஏவும் திறன் கொண்டது. ஆனால் Gsat-20 செயற்கைக்கோள் நான்கு டன்னுக்கும் அதிகமான நிறை கொண்டுள்ளதால் ஸ்பேஸ் எக்ஸின் உதவியை நாடியுள்ளனர். ஃபால்கன்-9 ராக்கெட் 8,300 கிலோ நிறைகொண்ட செயற்கைக்கோளை கூட GTO சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் திறன் கொண்டது.

இஸ்ரோ உருவாக்கியதிலேயே அதிக நிறை உள்ள செயற்கைக்கோள் 5,854 கிலோ உள்ள Gsat-11தான். இதனை Ariane-5 VA-246 என்ற ஐரோப்பிய ராக்கெட் மூலம் விண்ணில் ஏவினர். Gsat-20 போல இதுவும் ஒரு தகவல்தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். Gsat-20 செயற்கைக்கோளை இஸ்ரோவின் வணிகப் பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் கையாளும். இதன் ஆயுள் 14 ஆண்டுகள் என்கின்றனர்.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு தேவையான தகவல் தொடர்பு உள்கட்டமைப்பில் தரவு பரிமாற்ற திறனை (data Transfer) வழங்குவதற்காக இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விமானத்துக்குள் இணைய வசதி பெறமுடியும்.

Space

விண்வெளி அறிவியலில் பல சாதனைகள் படைத்திருந்தாலும் கனமான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த பிற நிறுவனங்களை நம்பியிருக்கிறது.

Gsat-20 செயற்கைக்கோள் முதலில் எல்.வி.எம்-3 ராக்கெட் மூலமாக ஏவப்பட இருந்தது. ஆனால் இறுதியில் 700 கிலோ அதிகரித்ததால் திட்டத்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் கனமான செயற்கைக்கோள்களையும் சுயமாக ஏவ வேண்டும் என்பதற்காக நெக்ஸ்ட் ஜெனரேஷன் லான்சிங் வெஹிக்கில் (NGLV) என்ற ராக்கெட்டை உருவாக்கி வருகின்றனர்.

NGLV ராக்கெட்டை உருவாக்குவதற்கான செலவீனம் மட்டுமே 8,240 கோடி ரூபாய். இது LVM ராக்கெட்டை விட 3 மடங்கு அதிக எடையை சுமக்கும். ஆனால் செலவோ 1.5 மடங்குதான் அதிகம்.

பூமியைப் போன்றே ஒரு கோள்: ``சூரியன் அழியும் போது மனித இனம்..." - ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?

சூரியனின் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருதல், புவி வெப்பமயமாதல், பனிப்பாறைகள் உருகுவதால் கடல் மட்டம் உயர்தல் போன்ற ஆபத்துகள் தொடர்கின்றன. அதனால் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற மற்றொரு கோளை ஆராய்ச்சியாளர்க... மேலும் பார்க்க

Gold History: நாம் அணியும் தங்கம் விண்வெளியில் இருந்து வந்ததா? அறிவியல் சொல்வதென்ன?

கடந்த சில மாதங்களில் தங்கத்தின் விலை என்றுமில்லாத அளவு சரசரவென ஏறியது. திடீரென கிராமுக்கு 160 ரூபாய் குறைந்த செய்தியே நம்மை பெருமூச்சு விட வைக்கிறது. தங்கத்தின் மேல் நமக்கு அப்படியென்ன பிணைப்பு. மற்ற ... மேலும் பார்க்க

ISS: ஒரு நாளுக்கு 16 சூரிய உதயம், அஸ்தமனம் பார்க்கும் சுனிதா வில்லியம்ஸ் -அறிவியல் பின்னணி என்ன?

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருப்பவர்களுக்கு சூரியன் தோன்றுதலும் மறைதலும் நாளுக்கு ஒருமுறை காணும் நிகழ்வன்று. இப்போது அங்கு வசிக்கும் சுனிதா வில்லியம்ஸ் ஒரு நாளுக்கு 16 முறை சூரியன் தோன்றுவதையும் மறை... மேலும் பார்க்க

பெருங்கடல் அதிசயம்: இந்தியப் பெருங்கடலில் உள்ள 'ஈர்ப்புவிசை பள்ளம்' - ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?

புவியில் ஒரு இடத்தில் சராசரியைவிட மிகவும் குறைவான ஈர்ப்புவிசை இருப்பதால் ஏற்படும் பள்ளம், இந்தியப் பெருங்கடலிலும் இருக்கிறது. புவியில் உள்ள பெரும் ஈர்ப்பு விசைப் பள்ளங்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாதா... மேலும் பார்க்க

Sunita Williams: "Happy Diwali...!" - விண்வெளியிலிருந்து வாழ்த்திய சுனிதா வில்லியம்ஸ்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் பூமியில் உள்ள மக்களுக்குத் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.அவர் பதிவு செய்துள்ள காணொளியில் அமெரிக்காவிலும் உலகின் பிற பகுதியிலும் இருந்து... மேலும் பார்க்க