செய்திகள் :

பூமியைப் போன்றே ஒரு கோள்: ``சூரியன் அழியும் போது மனித இனம்..." - ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?

post image

சூரியனின் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருதல், புவி வெப்பமயமாதல், பனிப்பாறைகள் உருகுவதால் கடல் மட்டம் உயர்தல் போன்ற ஆபத்துகள் தொடர்கின்றன. அதனால் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற மற்றொரு கோளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துவருகின்றனர். சமீபத்தில் செவ்வாய் கோளில் மனிதர்கள் வாழ முடியுமா என்ற கோணத்தில் ஆய்வுகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில், பூமியைப் போன்ற ஒரு கோளை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

பால்வெளி

சூரிய குடும்பத்திலிருந்து சுமார் 4,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு நட்சத்திரத்தை, பூமியைப் போன்ற ஒரு கோள் சுற்றிவருவதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இங்கு பூமி சூரியனை சுற்றி வருவது போல, பாறைக் கோள், பூமியின் அதே நிறையுடன் இருக்கும் அந்தப் புதிய கோள் பூமியைப் போலவே  white dwarfவிண்மீனைச் சுற்றி வருகிறது. white dwarf என்பது ஒரு நட்சத்திரத்தின் அணு எரிபொருள் தீர்ந்ததும், அதன் வெளிப்புற அடுக்குகள் உதிர்ந்து மீதமிருக்கும் எச்சமாகும்.

சூரியனும் அப்படித்தான், அதன் அணு எரிபொருள் தீர்ந்துவிட்டால், சிவப்பு நட்சத்திரமாக மாறி அப்படியே white dwarf ஆக மாறிவிடும். அப்போது ஏற்படும் அதன் விரிவாக்கத்தில் புதன், வீனஸ் கோள்கள் சூரிய நட்சத்திரத்தில் கலந்துவிடும். சூரியனுக்கு அருகில் இருக்கும் பூமியும் இதில் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இது தொடர்பாக Nature Astronomy (இயற்கை வானியல்) வெளியிட்ட ஒரு ஆய்வில், ``பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஹவாயில் உள்ள கெக் தொலைநோக்கியைப் பயன்படுத்தி ஆய்வு செய்ததில், சூரிய நட்சத்திரத்தின் சுற்றுப்பாதையில், white dwarf நட்சத்திரம் பூமியின் அளவிலான கிரகத்துடன் சுற்றி வருகிறது.

சூரியன்

அந்த நட்சத்திரம் வியாழனின் நிறையைவிட 17 மடங்கு அதிகமாகும். இந்த நிகழ்வு, சூரியன் சிகப்பு நட்சத்திரமாக மாறி உதிரும் காலத்தில், பூமி அழிவிலிருந்து தப்பிக்க காரணமாகும்." எனக் குறிப்பிட்டிருக்கிறது.

இது தொடர்பாக பெர்க்லியின் வானியல் இணைப் பேராசிரியரான ஜெசிகா லு, ``பூமி இன்னும் பில்லியன் ஆண்டுகளுக்கு மட்டுமே வாழ முடியும் கோளாக இருக்கும். சூரியன் சிகப்பு நட்சத்திரமாக மாறும் போது பூமியில் உயிர்கள் வாழ முடியுமா என்பது தெரியவில்லை. ஆனால் பூமி சூரியனால் விழுங்கப்படாது. அந்த நேரத்தில் பூமியின் பெருங்கடல்கள் 'ரன்வே கிரீன்ஹவுஸ்' விளைவால் ஆவியாகிவிடும்." என்றார்.

இந்த ஆய்வு முடிகள் மூலம், பூமி அழிவதற்கு முன்பு பூமியைப் போன்று இருக்கும் கோளைப் பற்றிய தகவல்கள் எதிர்காலத்தைப் பற்றிய ஆய்வுகளுக்கு வழிவகுத்திருக்கிறது. அதனால், நமது சூரியன் அதன் இறுதிக் கட்டத்தை எட்டும்போது, சூரிய மண்டலத்திற்கு வெளியே மனிதர்கள் இடம்பெயர்வதற்கான சாத்தியக்கூறுகளைத் ஏற்படுத்தலாம். அப்போது இந்தப் புதிய கோள், யூரோபா, காலிஸ்டோ, வியாழனைச் சுற்றியுள்ள கேனிமீட், சனிக்கு அருகிலுள்ள என்செலடஸ் போன்ற நிலவு போன்ற கோள்கள் எதிர்கால சந்ததியினருக்கு புகலிடங்களாக மாறலாம் என்றும் கருதப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Elon Musk: இந்தியாவின் செயற்கைக்கோளை ஏவ Space X நிறுவனத்தை நாடும் இஸ்ரோ - ஏன்?

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் கனமான செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தவிருக்கிறது இந்தியா. "ஸ்பேஸ் எக்ஸின் ஃபால்கன்-9 (Falcon-9) என்ற ராக்கெட் விண்கலம் இஸ்ரோவின் Gsat-20 (GSAT N-2 என்ற... மேலும் பார்க்க

Gold History: நாம் அணியும் தங்கம் விண்வெளியில் இருந்து வந்ததா? அறிவியல் சொல்வதென்ன?

கடந்த சில மாதங்களில் தங்கத்தின் விலை என்றுமில்லாத அளவு சரசரவென ஏறியது. திடீரென கிராமுக்கு 160 ரூபாய் குறைந்த செய்தியே நம்மை பெருமூச்சு விட வைக்கிறது. தங்கத்தின் மேல் நமக்கு அப்படியென்ன பிணைப்பு. மற்ற ... மேலும் பார்க்க

ISS: ஒரு நாளுக்கு 16 சூரிய உதயம், அஸ்தமனம் பார்க்கும் சுனிதா வில்லியம்ஸ் -அறிவியல் பின்னணி என்ன?

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருப்பவர்களுக்கு சூரியன் தோன்றுதலும் மறைதலும் நாளுக்கு ஒருமுறை காணும் நிகழ்வன்று. இப்போது அங்கு வசிக்கும் சுனிதா வில்லியம்ஸ் ஒரு நாளுக்கு 16 முறை சூரியன் தோன்றுவதையும் மறை... மேலும் பார்க்க

பெருங்கடல் அதிசயம்: இந்தியப் பெருங்கடலில் உள்ள 'ஈர்ப்புவிசை பள்ளம்' - ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?

புவியில் ஒரு இடத்தில் சராசரியைவிட மிகவும் குறைவான ஈர்ப்புவிசை இருப்பதால் ஏற்படும் பள்ளம், இந்தியப் பெருங்கடலிலும் இருக்கிறது. புவியில் உள்ள பெரும் ஈர்ப்பு விசைப் பள்ளங்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாதா... மேலும் பார்க்க

Sunita Williams: "Happy Diwali...!" - விண்வெளியிலிருந்து வாழ்த்திய சுனிதா வில்லியம்ஸ்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் பூமியில் உள்ள மக்களுக்குத் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.அவர் பதிவு செய்துள்ள காணொளியில் அமெரிக்காவிலும் உலகின் பிற பகுதியிலும் இருந்து... மேலும் பார்க்க