செல்போனில் விடியோ பார்த்துக் கொண்டே சென்ற மாணவர்கள் மீது ரயில் மோதி ஒருவர் பலி
ஆம் ஆத்மியில் இணைந்தார் பாஜக முன்னாள் எம்எல்ஏ அனில் ஜா
தலைநகர் தில்லியில் பாஜக முன்னாள் எம்எல்ஏ அனில் ஜா ஞாயிற்றுக்கிழமை ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துகொண்டார்.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில் அவர் ஆம் ஆத்மியில் இணைந்தார். இவர் இரண்டு முறை கிராரி சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து பாஜக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி அமைச்சருமான கைலாஷ் கெலாட் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய நிலையில் தற்போது பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார்.
அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கேஜரிவால், ஆம் ஆத்மி கட்சிக்கு அனில் ஜாவை வரவேற்கிறேன். பூர்வாஞ்சலின் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவராக அனில் ஜா கருதப்படுகிறார்.
இரு கட்சிகளும் (காங்கிரஸ் மற்றும் பாஜக) பூர்வாஞ்சல் மக்களுக்கு அநீதி இழைத்துள்ளன.
நான் முதல்வராக பதவியேற்றதும் முதன்முறையாக சட்டவிரோத காலனிகளில் சாலைகள், சாக்கடைகள், குடிநீர் குழாய்கள் அமைக்கத் தொடங்கினேன். 1750 சட்ட விரோத காலனிகளில் 1650 இடங்களில் தண்ணீர் குழாய் பதித்துள்ளோம் என்றார்.
மேலும் பூர்வாஞ்சல் சமூகத்தை மத்திய அரசு புறக்கணிப்பதாக குற்றம் சாட்டிய கேஜரிவால், சமூகத்திற்காக அவர்கள் செய்த பணிகள் குறித்து பாஜகவிடம் கேள்வி எழுப்பினார்.