செய்திகள் :

மதுரை விமான நிலையத்துக்கு நிலம் கொடுத்த கிராம மக்களின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு.!

post image

தங்கள் குடியிருப்புகளை காலி செய்யக்கூடாது என்று ஏற்கெனவே முல்லை நகர் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தற்போது சின்ன உடைப்பு கிராம மக்களும் போராட்டத்தை தொடங்கியுள்ளது மதுரையில் பரபரபை ஏற்படுத்தி வருகிறது.

போராட்டத்தில்

மதுரை விமான நிலைய விரிவாக்கதிற்காக நிலம் எடுக்கப்பட்ட சின்ன உடைப்பு கிராம மக்கள் சில கோரிக்கைகளை முன் வைத்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

சர்வதேச விமான நிலையமாக மதுரை விமான நிலையம்  தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் விரிவாக்க பணிகளுக்கு அப்பகுதியில் 610 ஏக்கர் நிலம் மாவட்ட நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்டது. இதில் சின்ன உடைப்பு கிராமத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுடன் விவசாய நிலங்களையும் சேர்த்து 300 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினர். அதற்கான இழப்பீட்டுத் தொகையும் வழங்கபட்டது.

தற்போது கையகப்படுத்தப்பட்ட நிலத்தினை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதற்காக சின்ன உடைப்பு கிராமத்திலுள்ள வீடுகளை அகற்ற வேண்டுமென்று மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கிய அலுவலர்கள், சில நாள்களுக்கு முன் பொக்லைன் எந்திரங்களுடன் அப்பகுதியுள்ள வீடுகளை இடிக்க சென்றபோது ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

போராட்டத்துக்கு ஆதரவு அளித்த ராஜன் செல்லப்பா

ஊர் நுழைவுப்பகுதியில் திறந்த வெளியில் அமர்ந்து சின்ன உடைப்பு கிராம மக்கள் சமைத்து சாப்பிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஐநூறுக்கும் மேற்பட்ட போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை போராட்டத்தில் கலந்துகொண்ட இரு பெண்கள் மயக்கமடைந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

 போராட்டத்தை முன்னெடுத்துள்ள மக்கள் கூறும்போது, "விமான நிலையத்துக்கு இடம் கொடுத்த எங்களுக்கு மாநகராட்சிப்பகுதியில் 3 சென்ட் நிலம் வழங்க வேண்டும், அங்கு  பள்ளிக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அதுவரை போராட்டம் நடத்துவோம்," என்றனர். அதிகாரிகள் பேசுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவளித்துள்ள நிலையில் திருப்பரங்குன்றம் அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா நேரில் சென்று ஆதரவு அளித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Seeman: ``இது ஒரு பெரிய குற்றமா?'' - நடிகை கஸ்தூரி கைதுக்கு சீமான் கண்டனம்!

நேற்றிரவு நடிகை கஸ்தூரி ஹைத்ராபாத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தல்: அஜித்பவாரை தோற்கடிக்க, குடும்பத்தோடு பிரசாரத்தில் இறங்கிய சரத்பவார்..!

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கிறது. இத்தேர்தல் பிரசாரம் நாளை முடிகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் பிரியங்கா காந... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டுகள்... பயணிகள் அதிர்ச்சி!

நெல்லையில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து நெல்லைக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. நெல்லை சந்திப்பில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை எழும்பூ... மேலும் பார்க்க

40 ஹெலிகாப்டர், 15 விமானம்... மகாராஷ்டிரா தேர்தலில் பறந்து பறந்து பிரசாரம் செய்த தலைவர்கள்..!

மகாராஷ்டிராவில் கடந்த சில நாள்களாக நடந்து வரும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நாளையோடு முடிகிறது. இந்த முறை மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக வரும் 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து பிரசாரம் செய்... மேலும் பார்க்க

``ஆர்.எஸ்.எஸ் பலிதானியை வைத்து வாக்குகேட்கிறார்கள்'' - காங்கிரஸில் சேர்ந்த பாஜக நிர்வாகி ஆவேசம்!

கேரள மாநில பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் சந்தீப் வாரியர். பாலக்காட்டைச் சேர்ந்தவர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கையில் ஊறிய குடும்பத்தைச் சேர்ந்த சந்தீப் வாரியர் கேரள மாநில பா.ஜ.க-வில் பல்வேற... மேலும் பார்க்க

Health: உங்கள் ஆயுளை நீட்டிக்கும் உணவு ரகசியம் தெரியுமா?

பழங்களும் காய்கறிகளும் நம் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை என்பது அறிந்ததுதான். ஆனால், அவற்றை தினசரி உணவில் எந்தளவுக்கு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது பலரும் அறியாதது. இரவு வேளைகளில் சாப்பிடுகிற ஒரு வாழைப... மேலும் பார்க்க