செய்திகள் :

மகாராஷ்டிரா தேர்தல்: அஜித்பவாரை தோற்கடிக்க, குடும்பத்தோடு பிரசாரத்தில் இறங்கிய சரத்பவார்..!

post image

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கிறது. இத்தேர்தல் பிரசாரம் நாளை முடிகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மராத்வாடா மற்றும் விதர்பாவில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரியங்கா காந்தி நேற்று ஷீரடி சாய்பாபா கோயிலில் வழிபட்டுவிட்டு அங்கு பிரசாரத்தில் ஈடுபட்டார். இத்தேர்தலில் சரத்பவார் குடும்பத்தில் இருந்து இரண்டு பேர் பாராமதி தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்த காரணத்தால் அவரை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்ற வெறியோடு சரத்பவார் தேர்தல் பணியாற்றி வருகிறார். சரத்பவார் மற்ற தொகுதிகளில் பிரசாரம் செய்யவேண்டியிருப்பதால் பாராமதியில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர் யுகேந்திர பவாருக்கு ஆதரவாக பிரசாரத்தில் தனது மனைவியையும் இறக்கி விட்டிருக்கிறார்.

பேத்தி ரேவதியுடன் சரத்பவார்

சரத்பவார் மனைவி பிரதிபா பவார் வழக்கமாக அரசியலில் இருந்து ஒதுங்கியே இருப்பார். ஆனால் முதல் முறையாக இம்முறை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். தனது கனவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அஜித்பவாரை தோற்கடிக்க அவர் இப்போது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். சரத்பவார் மனைவி மட்டுமல்லாது, அவரது மகள் சுப்ரியா சுலே, பேத்தி ரேவதியும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் பாராமதி தேர்தல் பிரசாரத்தில் சரத்பவார் ஈடுபடுத்தி இருக்கிறார்.

இது குறித்து அஜித்பவார் கூறுகையில், 1991ம் ஆண்டில் இருந்து நீங்கள் என்னை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கிறீர்கள். எப்போதாவது பிரதிபா பவார் தேர்தல் பிரசாரத்திற்கு வந்திருப்பதை பார்த்திருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். இக்குற்றச்சாட்டு குறித்து சரத்பவாரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, இதற்கு பல முறை எனது மனைவி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டிருக்கிறார் என்றார்.

மகாராஷ்டிரா தேர்தல் யுத்தத்தில் பாராமதியில் கடுமையான போட்டி நிலவுகிறது. பாராமதி சரத்பவாரின் கோட்டையாக இருந்து வருகிறது. அக்கோட்டையை சரத்பவாரிடமிருந்து பறிக்க அஜித்பவார் இம்முறை பா.ஜ.கவோடு கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Seeman: ``இது ஒரு பெரிய குற்றமா?'' - நடிகை கஸ்தூரி கைதுக்கு சீமான் கண்டனம்!

நேற்றிரவு நடிகை கஸ்தூரி ஹைத்ராபாத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ப... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டுகள்... பயணிகள் அதிர்ச்சி!

நெல்லையில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து நெல்லைக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. நெல்லை சந்திப்பில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை எழும்பூ... மேலும் பார்க்க

40 ஹெலிகாப்டர், 15 விமானம்... மகாராஷ்டிரா தேர்தலில் பறந்து பறந்து பிரசாரம் செய்த தலைவர்கள்..!

மகாராஷ்டிராவில் கடந்த சில நாள்களாக நடந்து வரும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நாளையோடு முடிகிறது. இந்த முறை மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக வரும் 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து பிரசாரம் செய்... மேலும் பார்க்க

``ஆர்.எஸ்.எஸ் பலிதானியை வைத்து வாக்குகேட்கிறார்கள்'' - காங்கிரஸில் சேர்ந்த பாஜக நிர்வாகி ஆவேசம்!

கேரள மாநில பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் சந்தீப் வாரியர். பாலக்காட்டைச் சேர்ந்தவர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கையில் ஊறிய குடும்பத்தைச் சேர்ந்த சந்தீப் வாரியர் கேரள மாநில பா.ஜ.க-வில் பல்வேற... மேலும் பார்க்க

Health: உங்கள் ஆயுளை நீட்டிக்கும் உணவு ரகசியம் தெரியுமா?

பழங்களும் காய்கறிகளும் நம் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை என்பது அறிந்ததுதான். ஆனால், அவற்றை தினசரி உணவில் எந்தளவுக்கு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது பலரும் அறியாதது. இரவு வேளைகளில் சாப்பிடுகிற ஒரு வாழைப... மேலும் பார்க்க

மழைபெய்தும் நிரம்பாத ஏரிகள்; சென்னைக்கு தண்ணீர் தட்டுப்பாடு வருமா?

மழை பெய்தாலும், ஏரிகள் நிரம்பவில்லை..சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை பெய்தாலும்கூட சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக் கூடிய முக்கியமான ஏரிகள் முழுமையாக நிரம்பாமல் இருப்பதால் கோடைக... மேலும் பார்க்க