பிக் பாஸ் 8: செளந்தர்யா மீது புகார் தெரிவிக்கும் போட்டியாளர்கள்!
எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை கஸ்தூரிஆஜர்
சென்னை அழைத்து வரப்பட்ட நடிகை கஸ்தூரி விசாரணைக்குப் பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தெலுங்கு மக்கள் குறித்த அவதூறாக பேசிய வழக்கில் ஹைதராபாத்தில் கைதான நடிகை கஸ்தூரியை காவல்துறை ஞாயிற்றுகிழமை காலை சென்னை அழைத்து வந்தது. பின்னர் சிந்தாதரிப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை முடிந்து எழும்பூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும் என முழுக்கமிட்டபடி நடிகை கஸ்தூரி காவல்துறை வாகனத்தில் ஏறினார். இந்த வழக்கில் கச்சிபௌலியில் தயாரிப்பாளர் ஒருவர் வீட்டில் பதுங்கியிருந்த அவரை தனிப்படை நேற்று கைது செய்தது.
மிஸ் யுனிவர்ஸ் ஆனார் டென்மார்க் அழகி!
சென்னையில் அண்மையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின் போது, தெலுங்கு பேசும் பெண்கள், திராவிடா்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாகப் புகாா் எழுந்தது. இதுதொடா்பாக அவா் மீது மதுரை நாயுடு மகாஜன சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருநகா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இதனிடையே, நடிகை கஸ்தூரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் முன்பிணை கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் மனுதாரரின் பேச்சில் வெறுப்புணா்வு உள்ளதால், அவரது முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.