செய்திகள் :

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டுகள்... பயணிகள் அதிர்ச்சி!

post image

நெல்லையில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து நெல்லைக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. நெல்லை சந்திப்பில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைகிறது. இந்த ரயிலில் பயணிகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இதற்காக பயணச்சீட்டில் உணவிற்காக ரூ.200 வசூலிக்கப்படுகிறது.

சாம்பாரில் கிடந்த வண்டுகள்

நெல்லையில் இருந்து காலையில் சென்னை வந்தே பாரத் ரயிலில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுடலைக்கண்ணு என்பவரும், அவரது நண்பரான நாங்குநேரியைச் சேர்ந்த  முருகன் ஆகிய இருவரும் திருச்சிக்கு பயணம் செய்தனர். காலை 8 மணியளவில் ரயில் பயணிகளுகு ரயில்வே கேண்டீன் ஊழியர்கள் காலை உணவு விநியோகம் செய்தனர். அதில் 2 இட்லி, கேசரி, சாம்பார், வடை ஆகியவை வழங்கப்பட்டது.

இதனையடுத்து முருகன் சாப்பிடுவதற்காக பார்சலை திறந்து சாம்பாரை ஊற்றியபோது கருப்பாக தெரிவதைக் கூர்ந்து கவனித்ததில் வண்டுகள் கிடப்பதை பார்த்து  அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரது நண்பர், சுடலைக்கண்ணு சக பயணிகளை சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து சக பயணிகளும் சாப்பிடுவதை நிறுத்தியுள்ளனர். இதுகுறித்து சுடலைக்கண்ணு ரயில்வே அதிகாரிகளிடம் உணவில்  வண்டுகள் கிடந்ததை காண்பித்துள்ளார். அஜாக்கிரதையாக செயல்பட்ட ரயில்வே கேண்டீன் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார். 

சாம்பாரில் கிடந்த வண்டுகள்

சாம்பாரில் வண்டுகள் கிடந்தது பற்றி ரயில்வே ஊழியர்களிடம் கேட்டபோது, “அது சீரகம்” எனச் சொல்லி மழுப்பியுள்ளனர். சக பயணிகள் அனைவரும் கேள்வி எழுப்பி  உணவு பிரிவு ரயில்வே அதிகாரியிடம் காண்பிக்கவே,  வண்டுகள் கிடந்ததை ஒப்புக் கொண்டார். இதுகுறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

மகாராஷ்டிரா தேர்தல்: அஜித்பவாரை தோற்கடிக்க, குடும்பத்தோடு பிரசாரத்தில் இறங்கிய சரத்பவார்..!

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கிறது. இத்தேர்தல் பிரசாரம் நாளை முடிகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் பிரியங்கா காந... மேலும் பார்க்க

40 ஹெலிகாப்டர், 15 விமானம்... மகாராஷ்டிரா தேர்தலில் பறந்து பறந்து பிரசாரம் செய்த தலைவர்கள்..!

மகாராஷ்டிராவில் கடந்த சில நாள்களாக நடந்து வரும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நாளையோடு முடிகிறது. இந்த முறை மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக வரும் 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து பிரசாரம் செய்... மேலும் பார்க்க

``ஆர்.எஸ்.எஸ் பலிதானியை வைத்து வாக்குகேட்கிறார்கள்'' - காங்கிரஸில் சேர்ந்த பாஜக நிர்வாகி ஆவேசம்!

கேரள மாநில பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் சந்தீப் வாரியர். பாலக்காட்டைச் சேர்ந்தவர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கையில் ஊறிய குடும்பத்தைச் சேர்ந்த சந்தீப் வாரியர் கேரள மாநில பா.ஜ.க-வில் பல்வேற... மேலும் பார்க்க

Health: உங்கள் ஆயுளை நீட்டிக்கும் உணவு ரகசியம் தெரியுமா?

பழங்களும் காய்கறிகளும் நம் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை என்பது அறிந்ததுதான். ஆனால், அவற்றை தினசரி உணவில் எந்தளவுக்கு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது பலரும் அறியாதது. இரவு வேளைகளில் சாப்பிடுகிற ஒரு வாழைப... மேலும் பார்க்க

மழைபெய்தும் நிரம்பாத ஏரிகள்; சென்னைக்கு தண்ணீர் தட்டுப்பாடு வருமா?

மழை பெய்தாலும், ஏரிகள் நிரம்பவில்லை..சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை பெய்தாலும்கூட சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக் கூடிய முக்கியமான ஏரிகள் முழுமையாக நிரம்பாமல் இருப்பதால் கோடைக... மேலும் பார்க்க

``திமுகவுக்கு 12% வாக்குகள் குறையும்; அதிமுகவுக்கு 12% வாக்குகள் கூடும்" - தங்கமணி சொல்லும் கணக்கு

திருப்பரங்குன்றத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்அதிமுக ஆட்சியில் மதுரை மாநகராட்சிக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களை திமுக அரசு முடக்குவதை கண்டித்து, திருப்பரங்குன்றத்தில் கண்டன அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்... மேலும் பார்க்க