பிக் பாஸ் 8: செளந்தர்யா மீது புகார் தெரிவிக்கும் போட்டியாளர்கள்!
தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் திடீர் ராஜிநாமா
தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான கைலாஷ் கெலாட் தனது ராஜிநாமா கடிதத்தில், கட்சி எதிர்கொள்ளும் சமீபத்திய சர்ச்சைகள் மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்குப் பதிலாக, ஆம் ஆத்மி கட்சி தனது சொந்த கொள்கைக்காக போராடுவதில் மும்முரமாக இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
நோயாளியின் கண்ணைத் தின்ற எலி? மருத்துவர்கள் அலட்சியம்!
ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எழுதிய கடிதத்தில், ஆம்ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ஆம் ஆத்மியில் இருந்து விலகிய கைலாஷ் விரைவிலேயே பாஜகவில் இணையலாம் என தகவல்கள் தெரியவந்துள்ளன.
தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள நிலையில் ஆம் ஆத்மியில் இருந்து மூத்த தலைவர் கைலாஷ் கெலாட் விலகியிருப்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.