செய்திகள் :

கார் தீப்பற்றி ஒருவர் பலி!

post image

பெங்களூருவில் கார் தீப்பற்றி, தொழிலதிபர் பலியான சம்பவத்தில் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

பெங்களூருவின் முதீன்பால்யா அருகே கார் ஒன்று தீப்பிடித்து எரிவதாக, சனிக்கிழமையில் (நவ. 16) காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்தை அடைந்த காவல்துறையினர், தீப்பிடித்த காரை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் அணைத்தனர். இருப்பினும், காரினுள் இருந்த நபர் மூச்சுத் திணறல் காரணமாக பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார்.

தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உயிரிழந்தவர் 42 வயதான தொழிலதிபர் பிரதீப் என்பது தெரிய வந்தது. மேலும், பிரதீப் தானே காருக்கு தீவைத்து எரித்து, தற்கொலை செய்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். காருக்குள் இருந்து தற்கொலைக் குறிப்புகள் எதுவும் கிடைக்காத நிலையிலும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க:நோயாளியின் கண்ணைத் தின்ற எலி? மருத்துவர்கள் அலட்சியம்!

தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் திடீர் ராஜிநாமா

தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான கைலாஷ் கெலாட் தனது ராஜிநாமா கடிதத்தில், கட்சி எதிர்கொள்ளும் சமீபத்திய சர்... மேலும் பார்க்க

வீட்டுக்குள் இறைச்சி வேண்டாம்! தம்பியைக் கொன்ற சகோதரர்கள்!

மத்தியப் பிரதேசத்தில் மதுபோதையிலிருந்த சகோதரர்களுக்கு இடையேயான மோதலில் ஒருவர் பலியானார்.மத்தியப் பிரதேசத்தின் போபால் மாவட்டத்தில் இந்திரா நகரில் சகோதரர்களான குல்தீப், அன்ஷுல் யாதவ், அமன் மூவரும் கடந்த... மேலும் பார்க்க

கேரளம்: சபரிமலை செல்லும் பேருந்தில் திடீர் தீவிபத்து

கேரளத்தில் சபரிமலை பக்தர்களை ஏற்றிச் செல்வதற்காக சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு நிலவியது. கேரள மாநிலம், சபரிமலை பக்தர்களை ஏற்றிச் செல்வதற்காக பம்பையில் இருந்து நிலக... மேலும் பார்க்க

பால் தாக்கரேவின் நினைவு நாள்: உத்தவ் தாக்கரே, அரசியல் தலைவர்கள் அஞ்சலி

சிவசேனை நிறுவனர் பால் தாக்கரேவின் 12வது நினைவு நாளையொட்டி மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.இதையொட்டி மும்பை சிவாஜ... மேலும் பார்க்க

நோயாளியின் கண்ணைச் சாப்பிட்ட எலி? மருத்துவர்கள் அலட்சியம்!

பாட்னாவில் சடலத்தின் கண்ணை எலி கடித்து விட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் கூறியதால், உயிரிழந்தவரின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்.பாட்னாவில் ஃபண்டுஷ் என்பவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், சிகிச... மேலும் பார்க்க

தில்லி காற்று மாசு: 107 விமானங்கள் தாமதம்! 3 விமானங்கள் ரத்து!

தில்லியில் தொடர்ந்து வரும் காற்று மாசால் 107 விமானங்கள் தாமதமாகவும், 3 விமானங்கள் ரத்தும் செய்யப்பட்டன.தில்லியில் தொடர்ந்து 5-வது நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் (நவ. 17) காற்றின் தரம் மோசமான நிலையில், கா... மேலும் பார்க்க