செய்திகள் :

நோயாளியின் கண்ணைச் சாப்பிட்ட எலி? மருத்துவர்கள் அலட்சியம்!

post image

பாட்னாவில் சடலத்தின் கண்ணை எலி கடித்து விட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் கூறியதால், உயிரிழந்தவரின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்.

பாட்னாவில் ஃபண்டுஷ் என்பவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக நாளந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி, ஃபண்டுஷ் வெள்ளிக்கிழமை (நவ. 15) உயிரிழந்தார்.

இரவு வேளை ஆனதால், அவரது உடலை உடற்கூறாய்வு செய்யாமல், தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே வைத்தனர். இதனையடுத்து, மறுநாள் சனிக்கிழமை காலையில், ஃபண்டுஷின் இடது கண் காணாமல் போய்விட்டது. இந்த சம்பவத்தையடுத்து, ஃபண்டுஷின் குடும்பத்தினர் மருத்துவமனை வளாகத்திற்குள் போராட்டம் நடத்தினர்.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... அரசு மருத்துவமனைகளின் இன்னொரு பக்கம்!

தொடர்ந்து, நாளந்தா மருத்துவமனை கண்காணிப்பாளர் வினோத் குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், அவரும் விசாரணை மேற்கொண்டார். ஃபண்டுஷ் கண் காணாமல் போனது குறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஃபண்டுஷின் கண்ணில் ஒரு எலி இருந்ததாகவும், கண்ணை எலி கடித்திருக்கலாம் என்றும் கூறினர்.

இருப்பினும், ஃபண்டுஷ் படுக்கையின் அருகே ஒரு கத்தி இருந்ததாகவும், மருத்துவர்கள்தான் அவரது கண்ணை திருடியுள்ளதாகவும் ஃபண்டுஷின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, கண்காணிப்பாளர் வினோத் குமார் ``கண்ணை வெளியே எடுத்திருந்தாலும் சரி, எலி கடித்திருந்தாலும் சரி. அது நம்முடைய தவறுதான். சிசிடிவி காட்சிகளை மதிப்பாய்வு செய்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

கேரளம்: சபரிமலை செல்லும் பேருந்தில் திடீர் தீவிபத்து

கேரளத்தில் சபரிமலை பக்தர்களை ஏற்றிச் செல்வதற்காக சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு நிலவியது. கேரள மாநிலம், சபரிமலை பக்தர்களை ஏற்றிச் செல்வதற்காக பம்பையில் இருந்து நிலக... மேலும் பார்க்க

கார் தீப்பற்றி ஒருவர் பலி!

பெங்களூருவில் கார் தீப்பற்றி, தொழிலதிபர் பலியான சம்பவத்தில் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.பெங்களூருவின் முதீன்பால்யா அருகே கார் ஒன்று தீப்பிடித்து எரிவதாக, சனிக்கிழமையில் (ந... மேலும் பார்க்க

பால் தாக்கரேவின் நினைவு நாள்: உத்தவ் தாக்கரே, அரசியல் தலைவர்கள் அஞ்சலி

சிவசேனை நிறுவனர் பால் தாக்கரேவின் 12வது நினைவு நாளையொட்டி மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.இதையொட்டி மும்பை சிவாஜ... மேலும் பார்க்க

தில்லி காற்று மாசு: 107 விமானங்கள் தாமதம்! 3 விமானங்கள் ரத்து!

தில்லியில் தொடர்ந்து வரும் காற்று மாசால் 107 விமானங்கள் தாமதமாகவும், 3 விமானங்கள் ரத்தும் செய்யப்பட்டன.தில்லியில் தொடர்ந்து 5-வது நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் (நவ. 17) காற்றின் தரம் மோசமான நிலையில், கா... மேலும் பார்க்க

மணிப்பூா்: எம்எல்ஏ-க்களின் வீடுகள் சூறை -முழு விவரம்

இம்பால்: மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 6 போ் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் எம்எல்ஏ-க்களின் வீடுகள் சூறையாடப்பட்டன.கொலை செய்யப்பட்டவா... மேலும் பார்க்க

சத்தீஸ்கா்: 5 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கா் மாநிலம், பஸ்தா் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் சனிக்கிழமை நடந்த மோதலில் ஐந்து நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். பாதுகாப்புப் படையினா் இருவா் காயமடைந்தனா். பஸ்தா் பகுதியில் உள்ள வடக்கு ... மேலும் பார்க்க