செய்திகள் :

கேரளம்: சபரிமலை செல்லும் பேருந்தில் திடீர் தீவிபத்து

post image

கேரளத்தில் சபரிமலை பக்தர்களை ஏற்றிச் செல்வதற்காக சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு நிலவியது.

கேரள மாநிலம், சபரிமலை பக்தர்களை ஏற்றிச் செல்வதற்காக பம்பையில் இருந்து நிலக்கல்லை நோக்கி அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புறப்பட்டது. இந்த பேருந்து சாலக்காயத்துக்கும் நிலக்கல்லுக்கும் இடைப்பட்ட வனப்பகுதியில் 30வது ஹேர்பின் வளைவில் அதிகாலை 5.30 மணியளவில் வந்துகொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்தது. \

தில்லி காற்று மாசு: 107 விமானங்கள் தாமதம்! 3 விமானங்கள் ரத்து!

பேருந்தில் இருந்து புகை வருவதை கவனித்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார். தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்துக்கு பம்பை மற்றும் நிலக்கல்லில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பேருந்து பகுதியளவில் சேதமடைந்த போதிலும், காலியாக சென்ற பேருந்து என்பதால் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

தீவிபத்தைத் தொடர்ந்து தேவசம்போர்டு உறுப்பினர் அஜிகுமார் சம்பவ இடத்தை பார்வையிட்டார். தீவிபத்துக்கான காரணம் உடனடியாக தெரிவரவில்லை. மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நாக்பூரில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக கங்கனா ரோட் ஷோ

நாக்பூர் மத்திய சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக கங்கனா ரணாவத் ரோட் ஷோ பிரசாரம் நடத்தினார். 288 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெ... மேலும் பார்க்க

மோடி அரசியலில் விலகுவாரா? சித்தராமையா சவால்!

கர்நாடக காங்கிரஸ் மீதான பொய்க் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், பிரதமர் அரசியலில் இருந்து விலக கர்நாடக முதல்வர் சித்தராமையா சவால் விடுத்துள்ளார்.மகாராஷ்டிரத்தில் வருகிற நவம்பர் 20 ஆம் தேதியில் சட்டப்... மேலும் பார்க்க

ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய வரலாற்றில் முதல்முறை

நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. ஹைப்பர்சோனிக் ஏவுகணை முதல் சோதனை ஒடிஸா கடற்கரையில் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது.1,500 கி.மீ. தொலைவுக... மேலும் பார்க்க

தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் திடீர் ராஜிநாமா

தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான கைலாஷ் கெலாட் தனது ராஜிநாமா கடிதத்தில், கட்சி எதிர்கொள்ளும் சமீபத்திய சர்... மேலும் பார்க்க

வீட்டுக்குள் இறைச்சி வேண்டாம்! தம்பியைக் கொன்ற சகோதரர்கள்!

மத்தியப் பிரதேசத்தில் மதுபோதையிலிருந்த சகோதரர்களுக்கு இடையேயான மோதலில் ஒருவர் பலியானார்.மத்தியப் பிரதேசத்தின் போபால் மாவட்டத்தில் இந்திரா நகரில் சகோதரர்களான குல்தீப், அன்ஷுல் யாதவ், அமன் மூவரும் கடந்த... மேலும் பார்க்க

கார் தீப்பற்றி ஒருவர் பலி!

பெங்களூருவில் கார் தீப்பற்றி, தொழிலதிபர் பலியான சம்பவத்தில் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.பெங்களூருவின் முதீன்பால்யா அருகே கார் ஒன்று தீப்பிடித்து எரிவதாக, சனிக்கிழமையில் (ந... மேலும் பார்க்க