செய்திகள் :

ஆண்மை குறைவை கண்டுபிடிக்க வீட்டிலேயே ஒரு டெஸ்ட்! | காமத்துக்கு மரியாதை - 212

post image

ஆண்களில் சிலருக்கு, ’தங்களுக்கு ஆண்மை குறைவு இருக்கிறதோ’ என்கிற சந்தேகம் இருக்கும். அவர்களில் சிலர் போலி மருத்துவர்களிடம் சிக்கிக் கொள்ளலாம். அப்படி நிகழாமல் இருக்க, ஆண்மை குறைவு என்றால் என்ன; அதை எப்படி வீட்டிலேயே தெரிந்துகொள்ளலாம் என்பது குறித்து  விளக்குகிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.

4 grade/ Dr. kamaraj

’’சில வருடங்களுக்கு முன்னால் வரைக்கும், ’உச்சகட்டம் அடையும் வரைக்கும் ஓர் ஆணால் தாம்பத்திய உறவில் மகிழ்ச்சியாக ஈடுபட முடியவில்லை’ என்றால் அதை ஆண்மை குறைவு என்று உலக அளவில் சொல்லி வந்தார்கள். ஆனால், மகிழ்ச்சி என்பதின் அளவுகோல் நபருக்கு நபர் மாறுபடும் என்பதால், இப்படி வரையறுக்க முடியாது என்று தீர்மானிக்கப்பட்டது. தவிர, இதை ஆராய்ச்சிகளுக்கும் உட்படுத்த முடியவில்லை. அதனால், ஆண்மை குறைவை கண்டறிய வேறு ஒரு வழி கண்டறியப்பட்டது. அதுதான் நான்கு கிரேடுகள். 

நான்கு கிரேடுகள்

விறைப்பு தன்மையில் நான்கு கிரேடுகள் இருக்கின்றன.

கிரேடு நான்கில், ஆணுறுப்பானது விறைக்கும் போது வாழைக்காய் அல்லது வெள்ளரிக்காய் போல ஸ்ட்ராங்காக இருக்கும். 

கிரேட் மூன்றில் தோலுடன் இருக்கிற வாழைப்பழம் போன்ற அளவுக்கு மட்டுமே ஸ்ட்ராங்காக இருக்கும். இந்த இரண்டு கிரேடிலுமே தாம்பத்திய உறவில் ஈடுபட முடியும்.

கிரேட் இரண்டில், விறைக்கும்போது ஆணுறுப்பானது உரித்த வாழைப்பழம் போல சாஃப்ட் ஆக இருக்கும். இந்த ஆண்களுக்கு தாம்பத்திய உறவு கொள்ள இயலாது. கிரேடு ஒன்றில், ஆணுறுப்பு பெரிதாக இருக்கும். ஆனால், விறைப்பு தன்மை சுத்தமாக இருக்காது. இதை அழுகிய வாழைப்பழத்திற்கு ஒப்பிடுவோம்.

ஆண்மை குறைவு

கிரேடு நான்கில் இருக்கிற ஆண்கள்தான், விறைப்பு தன்மையில் ஆரோக்கியமாக இருப்பவர்கள். கிரேடு மூன்றில் இருப்பவர்களும் கிட்டத்தட்ட விறைப்பு தன்மையில் ஆரோக்கியமாக இருப்பவர்கள் என சேர்த்துக் கொள்ளலாம். கிரேடு இரண்டு அல்லது ஒன்றில் இருப்பவர்களுக்கு ஆண்மை குறைபாடு இருக்கிறது என்று அர்த்தம். 

வீட்டிலேயே கண்டுபிடிக்கலாம்

வாழைக்காய், வெள்ளரிக்காய் என்று பயமுறுத்தாதீர்கள் என்பவர்களுக்கு, இந்த கிரேடுகளை இன்னொரு வகையாகவும் சொல்லலாம். உங்கள் நெற்றியை தொடும்போது நீங்கள் உணரும் அந்த கடினத்தன்மை, ஆணுறுப்பு விறைக்கும்போது இருக்க வேண்டும். இதுதான் நான்காவது கிரேடு. மூக்கை தொடும்போது உணர்கிற கடினத்தன்மை விறைக்கும்போது ஆணுறுப்பில் இருந்தால் அது மூன்றாவது கிரேடு.  மேல் உதட்டை தொடும்போது உணர்கிற மென்மை தன்மைபோல விறைக்கும்போது ஆணுறுப்பு இருந்தால் அது இரண்டாவது கிரேடு. கீழ் உதட்டை தொடும் போது உணர்கிற மென்மைத்தன்மையை விறைத்த ஆணுறுப்பில் உணர்கிறீர்கள் என்றால் அது முதல் கிரேடு. ஆணுறுப்பு விறைக்கும் போது இரண்டாவது அல்லது முதல் கிரேடு நிலையில்தான் இருக்கிறது என்றால், சம்பந்தப்பட்ட ஆண்களுக்கு ஆண்மை குறைவு இருக்கிறது என்று அர்த்தம். இதை சம்பந்தப்பட்டவர்களே பரிசோதனை செய்து தங்களுக்கு ஆண்மை குறைவு இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஆண்மை குறைவு

ஆண்மை குறைவுக்கான காரணங்கள்

விந்தணுக்கள் இல்லாமை, விந்தணுக்கள் குறைவாக இருப்பது இவை இரண்டும் ஆண்மை குறைவுக்குள் வராது. இது குழந்தையின்மை பிரச்னையாக மட்டுமே பார்க்கப்படும்’’ என்றவர், ஆண்மை குறைவுக்கான காரணங்களையும் விவரித்தார். 

’’ஆண்மை குறைவுக்கு முக்கியமான காரணம், ஆணுறுப்பில் இருக்கிற ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் குறைவாக இருப்பதுதான். 

இரண்டாவது காரணம் நீரழிவு, தைராய்டு போன்ற பிரச்னைகள். நீரிழிவு பிரச்னை இருப்பவர்களில் 60 சதவிகித ஆண்களுக்கு ஆண்மை குறைவு இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கும் அதற்கான மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும், வலிப்பு நோய் இருப்பவர்களுக்கும் அதற்காக மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும், மனநல நோய்கள் இருந்தாலும் மற்றும் அதற்காக மருந்துகள் சாப்பிட்டாலும் ஆண்மை குறைபாடு வரலாம். தூக்க மாத்திரை சாப்பிட்டாலும் அல்லது அலர்ஜி மாத்திரை சாப்பிட்டாலும் அல்லது முடி உதிர்வுக்காக சாப்பிடுகிற சில மாத்திரைகளாலும் ஆண்மை குறைவு வரலாம். 

Tablets (Representational Image)

ஒரு மனிதன் காலையில் பல் தேய்க்கிற பேஸ்ட்டில் ஆரம்பித்து அவன் பயன்படுத்துகிற அத்தனை பொருள்களிலும் அத்தனை உணவுகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 3000 கெமிக்கல்ஸை உள்ளுக்குள் எடுத்துக் கொள்கிறான். இதில் பல கெமிக்கல்ஸ் ஆண்மை குறைவை ஏற்படுத்தலாம். 

ஆணுக்கான ஹார்மோன்கள் சரியாக சுரக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட ஆணுக்கு செக்ஸில் ஆர்வம், விறைப்புத்தன்மை, விந்து வெளியேறுதல் என அனைத்திலுமே பிரச்னை இருக்கும். 

நரம்பு பலவீனமாக இருந்தால் ஆண்மை குறைபாடு வரலாம். 

ஆண்மை குறைவு பிரச்னை இருக்கிற ஆண்களில் 20 சதவிகித ஆண்களுக்கு, அவர்களுடைய மனமே காரணமாக இருக்கிறது. 

ஆணுறுப்பில் ஏதாவது நோய்கள் வந்தாலோ அல்லது அடிபட்டாலோ சம்பந்தப்பட்ட ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு வரும். 

மேலே சொன்ன பிரச்னைகளில் எது உங்களுடைய ஆண்மை குறைவுக்கு காரணமாக இருக்கிறது என்பதை கண்டறிந்து சிகிச்சை தர வேண்டும்’’ என்கிறார் டாக்டர் காமராஜ்.

விந்து முந்துதல்... தடுக்கும் A, B, C, D, E, F டெக்னிக்! | காமத்துக்கு மரியாதை

தாம்பத்யம்`விந்து முந்துதல்' பிரச்னை உலகத்திலிருக்கிற 70 சதவிகித ஆண்களுக்கு இருக்கிறது. இவர்களுக்கு உறவில் 2 நிமிடத்திலேயே விந்து வெளியேறிவிடும். அதனால், உச்சக்கட்டம் அடைந்து விடுவார்கள். ஆனால், அவர்க... மேலும் பார்க்க

முதலிரவு அப்போ பீரியட்ஸ்; உறவு வெச்சுக்கலாமா? | காமத்துக்கு மரியாதை - 217

அந்த மணமக்களுக்கு முதல் நாள் இரவு ரிசப்ஷன்; மறுநாள் காலையில் திருமணம். திருமணம் நிச்சயம் நடந்ததோ இரண்டு மாதங்களுக்கு முன்னால். நிச்சயமான நாளிலிருந்தே எக்கச்சக்க லவ் டயலாக்களுடன் திருமண நாளை எதிர்பார்த... மேலும் பார்க்க

முதலிரவு ஃபீல் குட் ஆக இருக்க 7 பாயின்ட் ! | காமத்துக்கு மரியாதை - 216

இந்த டென்ஷன் வேண்டாம்செக்ஸ் வாழ்க்கைஅது பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமணம் என்றாலும் சரி, காதல் திருமணம் என்றாலும் சரி, அல்லது பெற்றோர் நிச்சயித்து அதன் பிறகு காதல் வந்து நடைபெற்ற திருமணம் என்றால... மேலும் பார்க்க

கருத்தரிப்பை Pull Out முறை 100 சதவிகிதம் தடுக்குமா? | காமத்துக்கு மரியாதை - 215

எனக்குத் திருமணம் ஆகி சில மாதங்கள்தான் ஆகியிருக்கின்றன. தற்போதைக்கு எங்களுக்குக் குழந்தை வேண்டாம் என்று தீர்மானித்திருக்கிறோம். என் மனைவிக்குக் கருத்தடை மாத்திரை சாப்பிடுவதில் விருப்பமில்லை. எனக்கோ, க... மேலும் பார்க்க

உண்மையாகவே ஆணுறுப்பை பெரிதாக்க முடியுமா? | காமத்துக்கு மரியாதை - 214

''ஆண்களின் தன்னம்பிக்கையை குறைக்கும் ஒரு முக்கியமான பிரச்னை அவர்களுடையஆணுறுப்பின் அளவு. இவர்கள் தனியாக இருப்பார்கள், நண்பர்களுடன் நீச்சல் குளத்துக்கு சென்றால்கூட குளிப்பதற்கு கூச்சப்பட்டு ஒதுங்கி இருப... மேலும் பார்க்க

கர்ப்ப காலத்துக்கான செக்ஸ் பொசிஷன்ஸ்... விவரிக்கும் மருத்துவர் | காமத்துக்கு மரியாதை - 211

திருமணமான புதிதிலேயே கருத்தரித்துவிட்ட தம்பதியருக்கு, தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளும் ஆசையும் இருக்கும்; கூடவே, வைத்துக்கொண்டால் கரு கலைந்து விடுமோ என்கிற பயமும் இருக்கும். இவர்களுக்கு, எந்தெந்த டிரை... மேலும் பார்க்க