செய்திகள் :

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன்!

post image

இஸ்லாமாபாத்: இம்ரான் கான் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவாரா? அல்லது அவர் எப்போது விடுவிக்கப்படுவார்? என்று அவரது பிடிஐ கட்சித் தொண்டர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், இன்று(நவ. 20) இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

அரசு கஜானாவுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக பதியப்பட்டுள்ள ‘டோஷாகானா’ வழக்கில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தால் இம்ரான் கானுக்கு இன்று ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எனினும் நிபந்தனையாக, மொத்தம் 2 ஒப்பந்தங்களின்படி தலா 1 ஒப்பந்தத்துக்கு, பாகிஸ்தான் ரூபாய் 1 மில்லியன் தொகை செலுத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜாமீன் அளிக்கப்பட்டாலும், இம்ரான் கான் நீதிமன்ற விசாரணைக்கு மேற்கொண்டு ஒத்துழைக்காவிட்டால், ஜாமீன் உத்தரவு திருப்பி பெறப்படுமெனவும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

72 வயதான இம்ரான் கான் பிரதமராக பதவி வகித்த போது, பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக அவர் மீது பதியப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தற்போது ஜாமீன் வழங்கப்பட்டாலும் இம்ரான் கான் மீது பிற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவாரா என்பதற்கான விடை கேள்விக்குறியாகவே உள்ளது.

முன்னதாக, இதே வழக்கில் கைது செய்யப்பட்ட இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபிக்கும், கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி இதே நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அவர் சிறையிலிருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டார்.

இராக்: 37 ஆண்டுகளுக்குப்பின் மக்கள் தொகை கணக்கெடுப்பு!

இஸ்லாமிய தேசமான இராக்கில் கடைசியாக கடந்த 1987-ஆம் ஆண்டு தேசிய அளவிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1997-ஆம் ஆண்டில் வடக்குப் பகுதியிலுள்ள 3 மாகாணங்களை தவிர்த்து இராக்கின் ... மேலும் பார்க்க

நியூசிலாந்து சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு! 40,000 பேர் போராட்டம்! காரணம் என்ன?

நியூசிலாந்தில் பழங்குடியின மவோரி மக்களுக்கு எதிரான சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து, சுமார் 40,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1840 ஆம் ஆண்டில் நியூசிலாந்து அரசுக்கும், மவோரி பழங்குடியின மக்களுக்கும... மேலும் பார்க்க

அமெரிக்கா ராணுவ உதவியை நிறுத்தினால் தோல்வி நிச்சயம்! -உக்ரைன் அதிபர்

ரஷியாவின் ராணுவ தாக்குதல்களை எதிர்கொள்ளவும் பதிலடி கொடுக்கவும் உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உதவியை செய்து வருகிறது. இதன்காரணமாகவே ரஷியாவை எதிர்த்து உக்ரைனால் இத்தனை நாள்கள் தாக்குப்பிடித்து போராட முடிக... மேலும் பார்க்க

அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்த ரஷியா ஆயத்தம்? உக்ரைனில் போர்ப்பதற்றம் அதிகரிப்பு!

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் நகரிலுள்ள அமெரிக்க தூதரக தலைமையகம் இன்று(நவ. 20) மூடப்பட்டுள்ளது. ரஷிய படைகள் அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தப்போவதாக தகவல் வெளியானதையடுத்து மு... மேலும் பார்க்க

பயங்கரவாதத் தாக்குதல்: பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 12 பேர் பலி

வடமேற்குப் பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்பு முகாம் மீது, வெடிமருந்துகளை ஏற்றி வந்த வாகனத்தைக்கொண்டு நிகழ்த்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 12 பேர் பலியாகினர்.பைகர் பக்துன்க்வா மா... மேலும் பார்க்க

ஆயிரம் நாள்களைக் கடந்த உக்ரைன் போா்!

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து செவ்வாய்க்கிழமையுடன் 1,000 நாள்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் அந்தப் போரின் முடிவு கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை. சோவியத் யூனியன் விரிவாக்கத்தைத் தடுப்பதற்காக உருவா... மேலும் பார்க்க