ஹாக்கி மகளிரணியினருக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை..! பிகார் முதல்வர் அறிவிப்பு!
பிகார் மாநில அரசு ஹாக்கி மகளிரணியினர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 லட்சம் அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்கிர் ஹாக்கி ஆடுகளத்தில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய மகளிரணி சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று அசத்தியது.
இந்திய அணி வீராங்கனை தீபிகா 31ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார்.
இந்தத் தொடர் முழுவதும் தீபிகா அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் 11 கோல்களுடன் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சீன அணியை இந்திய அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
பிகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
ராஜ்கிர் ஹாக்கி ஆடுகளத்தில் சிறப்பாக விளையாடி கோப்பையை வென்ற அணியில் உள்ள ஒவ்வொரு வீராங்கனைகளுக்கும் தலா ரூ.10 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்.
அணியின் தலைமைப் பயிற்சியாளருக்கு ரூ.10 லட்சமும் உதவி பயிற்சியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்கப்படும். வருங்காலத்திலும் சிறப்பாக செயல்பட இந்திய மகளிரணிக்கு வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.