மெஸ்ஸி உலக சாதனை..! இந்தாண்டை வெற்றியுடன் முடித்த ஆர்ஜென்டீனா!
கால்பந்து உலகக் கோப்பையின் தகுதிச் சுற்றில் ஆர்ஜென்டீனா 1-0 என வெற்றி பெற்றது.
2026ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆர்ஜென்டினா அணியும் பெரு அணியும் மோதின.
இந்தப் போட்டியில் 55ஆவது நிமிஷத்தில் மெஸ்ஸி உதவியினால் லௌடாரோ மார்டினீஸ் கோல் அடித்து அசத்தினார்.
இந்த கோல் அடிக்க மெஸ்ஸி உதவியதன் மூலம் அமெரிக்காவின் தேசிய அணியின் லெஜெண்ட் லண்டோன் டோனோவன் சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் (58) அடிக்க உதவியதை சமன்செய்துள்ளார்.
இந்த கோல் மூலம் மார்டினீஸ் தனது ஆர்ஜென்டினா அணிக்காக 35ஆவது கோலை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் லெஜெண்ட் தியாகோ மாரடோனாவுடன் சமன்செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
2026ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் மெஸ்ஸி விளையாடுவாரா எனத் தெரியவில்லை. இந்தாண்டுக்கான கடைசி போட்டியை மெஸ்ஸி விளையாடினார். இதை “மறக்க முடியாத ஆண்டு” எனக் கூறினார்.
கடைசியாக ஆர்ஜென்டினா விளையாடிய 70 போட்டிகளில் 65 போட்டிகளில் வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் மெஸ்ஸி விளையாட வருவதாக தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.