செய்திகள் :

நின்ற இதயம், 120 நிமிடங்கள் கழித்து துடித்தது... ஒடிசாவில் நடந்த மெடிக்கல் மிராக்கிள்!

post image

eCPR சிகிச்சை மூலம் இதயத்துடிப்பு நின்ற 120 நிமிடங்களுக்குப் பிறகு, நோயாளி ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. ஒடிசாவில் நாயகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரின் இதயத்துடிப்பு கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் நின்று விட்டிருக்கிறது. இந்நிலையில் அவர் ஒடிசாவின் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் கடந்த அக்டோபர் மாதம் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு சிறிது நேரத்திலேயே மாரடைப்பும் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு வழக்கமான சி.பி.ஆர் (CPR) சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், அவருடைய இதயம் துடிக்கவில்லை. இந்த நிலையில் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவர்கள் eCPR எனப்படும் சிறப்பு சிகிச்சை மூலம் அவருடைய உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்கள். ஒடிசாவில் eCPR சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது இதுவே முதன்முறையாகும். இதை மெடிக்கல் மிராக்கிள் என பல மருத்துவ உலகம் கொண்டாடி வருகிறது.

e CPR / AIIMS Bhubaneswr

eCPR (Extracorporeal cardiopulmonary Resuscitation) என்பது ஒரு மேம்படுத்தப்பட்ட மருத்துவ சிகிச்சை. இது பாரம்பரிய முதலுதவியான CPR மற்றும் ECMO தொழில்நுட்பத்தோடு இணைக்கப்பட்ட மருத்துவ முறை.

கடுமையான இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பால் அவதியுறும் நோயாளிகளுக்கு eCPR ஓர் உயிர் காக்கும் மருத்துவ அதிசயம் என்றால் அது மிகையல்ல. இந்த சிகிச்சை முறைப் பற்றி தீவிர சிகிச்சை நிபுணர் மற்றும் எக்மோ நிபுணர் மருத்துவர் ஸ்ரீகாந்த் பெகாரா கூறுகையில், "eCPR தொழில்நுட்பரீதியாக சவாலாக இருந்தாலும், ஹார்ட் அட்டாக் சிகிச்சையில் அடுத்தக்கட்ட நம்பிக்கை. இந்த வெற்றி ஒடிசாவின் மருத்துவத்துறையில் ஒரு மைல் கல்" என்றிருக்கிறார். தவிர, eCPR சிகிச்சையால் உயிர்பெற்ற அந்த ராணுவ வீரருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிவதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழகத்தின் சாதனைப் பெண்களைக் கொண்டாடும், 2024-க்கான `அவள் விருதுகள்' விழா சென்னையில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக விகடனின் புதிய முயற்சியான `Vikatan Play' (விகடன் ப்ளே) சேவை அறிமுகம் செய்யப்பட்டது.
Vikatan Play

பாரதி பாஸ்கர் நிகழ்ச்சியில் `விகடன் ப்ளே'-க்கான லோகோவை வெளியிட்டனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து உரையாடிய விகடனின் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன், `விகடன் ப்ளே'-வின் முதல் எக்ஸ்க்ளூசிவ் ஒரிஜினல் ஆடியோவாக `நீரதிகாரம்' தொடரை வெளியிட்டார்.

Vikatan Play

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக்கோடு சேர்த்து அணைக் கட்டுமானத்தில் பங்கெடுத்த ஆயிரக்கணக்கான அதிகாரிகள் மற்றும் மக்களின் உழைப்பையும் வரலாற்றையும் விரிவாகப் பதிவு செய்தது, ஆனந்த விகடனில் 122 வாரங்கள் தொடராக வந்த `நீரதிகாரம்' நாவல். நாவலாகவும், புத்தகமாகவும் விகடன் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற `நீரதிகாரம்' இன்று முதல் ஆடியோ வடிவிலும் வெளியாகியிருக்கிறது.

Health: பச்சையா, வறுத்ததா, வேக வைத்ததா... வேர்க்கடலையில் எது நல்லது?

எல்லாருக்கும் பிடிச்ச ஒரு தின்பண்டம் வேர்க்கடலை. சிலருக்கு பச்சையா சாப்பிட பிடிக்கும். சிலருக்கு ரோட்டோரங்கள்ல உப்புத்தண்ணி தெளிச்சு வறுத்து தர்ற வேர்க்கடலை பிடிக்கும். இன்னும் சிலருக்கு வேக வெச்ச வே... மேலும் பார்க்க

வாரத்துக்கு 2 நாள்கள் உடற்பயிற்சி... மூளைப் பாதுகாப்பு..! ஆய்வு முடிவு சொல்வதென்ன..?

எல்லோருமே ஜிம்முக்கு சென்று மாங்கு மாங்கென்று உடற்பயிற்சி செய்து உடலை கட்டுமஸ்தாக வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறோம்.ஆனால், அனைவருக்கும் இது சாத்தியம் இல்லை. அதனாலேயே கடுமையாக உடற்பயிற்சி செய்பவர்களை 'ஆஹோ ஓ... மேலும் பார்க்க

பிளாஸ்டிக் தோல் குழந்தைகள்: காரணம் என்ன? தீர்வு இருக்கிறதா? - நிபுணர் விளக்கம்

கடந்த சில தினங்களுக்கு முன்னாள், ராஜஸ்தானின் பிகானரிலுள்ள மருத்துவமனையில் பிளாஸ்டிக் போன்ற கடினமான தோலுடன் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததை அனைவரும் அறிவோம். ஹார்லெக்வின் வகை இக்தியோசிஸ் (Harlequin-type i... மேலும் பார்க்க

MIOT: அறுவை சிகிச்சை மீதான அச்சத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி; ரோபோடிக் அறுவை சிகிச்சை

மியாட் மருத்துவமனை அறிவியலில் சமீபத்திய முன்னேற்றங்களை ஒருங்கிணைத்து நோயாளிகளுக்குச் சிறந்த பராமரிப்பை வழங்குவதற்கும், அவர்களது விளைவுகளை மேம்படுத்துவதற்கும் தன்னை அர்ப்பணித்துள்ளது.இன்றைய உலகில் அதிந... மேலும் பார்க்க

Doctor Vikatan: 'பிக் பாஸ்' போட்டியாளர் சௌந்தர்யாவின் குரல் பிரச்னை... தீர்வு உண்டா?

Doctor Vikatan:விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் சௌந்தர்யா என்பவருக்கு குரல் தொடர்பான பிரச்னை இருக்கிறது. அவர் இருவிதமான குரல்களில் பேசுகிறார். சிறுவயதில் தன் குரலை வைத... மேலும் பார்க்க

தும்மல், காய்ச்சல், உடல் வலி... பயப்பட வேண்டுமா? - மருத்துவர் சொல்வதென்ன?

ஊரெங்கும் ஒரே தும்மலும், காய்ச்சலுமாக இருக்கிறது. சிலர், 'உடலெல்லாம் வலிக்கிறது' என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் 'காய்ச்சல் விட்டு விட்டு வருகிறது' என டெங்கு பரிசோதனை செய்துகொள்கிறார... மேலும் பார்க்க