செய்திகள் :

Doctor Vikatan: 'பிக் பாஸ்' போட்டியாளர் சௌந்தர்யாவின் குரல் பிரச்னை... தீர்வு உண்டா?

post image

Doctor Vikatan: விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் சௌந்தர்யா என்பவருக்கு குரல் தொடர்பான பிரச்னை இருக்கிறது. அவர் இருவிதமான குரல்களில் பேசுகிறார். சிறுவயதில் தன் குரலை வைத்து அதிக கேலி, கிண்டல்களுக்கு உள்ளானதையும் அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்திருந்தார். குரல் தொடர்பான இந்தப் பிரச்னை நிறைய பேருக்கு இருப்பதைப் பார்க்கிறோம். பெண்களுக்கு ஆண் தன்மையோடும் ஆண்களுக்கு பெண் தன்மையோடும் குரல் இருப்பதைப் பார்க்கிறோம். இவர்களுக்கெல்லாம் மருத்துவத்தில் தீர்வு உண்டா? குரலை மாற்ற சிகிச்சைகள் உள்ளனவா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இ.என்.டி மருத்துவர் பி.நட்ராஜ்

மருத்துவர் பி.நட்ராஜ்

பொதுவாகவே சிறு குழந்தைகளுக்கு (ஆண் குழந்தைகளுக்கும்) குரல்  மென்மையானதாக இருக்கும். பதின் வயதுகளில் ஆண் குழந்தைகளுக்கு குரல் கரகரப்பாக மாறும். குரல் உடைவது என்று இதைச் சொல்லக் கேட்டிருப்போம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 'பிக் பாஸ்' போட்டியாளருக்கு குரல் மாற என்ன பிரச்னை, எப்போதிலிருந்து அந்தப் பிரச்னை இருக்கிறது என்ற விவரங்கள் தெரிந்தால்தான் அது குறித்து விளக்கமாகப் பேச முடியும்.

குரலின் தன்மைக்கு பல காரணிகள் உள்ளன. குரலுக்கு மிகவும் அடிப்படையானது குரல் நாண் (vocal cord). குரலின் தன்மையில் முக்கியமான பங்கு வகிப்பது குரல் வளையின் (larynx) வடிவம் மற்றும் அளவு.  அதேபோல தொண்டையின் நீள, அகலம்,  வாய் மற்றும் பற்களின் அமைப்பு , மூக்கு மற்றும் முக எலும்புகளில் உள்ள (காற்று நிறைந்துள்ள) இடைவெளி (sinus) ஆகியவற்றுக்கும் இதில் சிறு பங்கு உண்டு. பெண்களுக்கு குரலில் வரும் கரகரப்பு தன்மை, பெரும்பாலும் குரல் நாணில் வரும் சிறிய கட்டி (vocal nodule) அல்லது வீக்கத்தால் ஏற்படுகிறது. 

குரல்

இதற்கு பிரதான காரணம்  குரலை உயர்த்திப் பேசி, குரல் நாணை  கொள்வதுதான்.. பணி நிமித்தமாக குரலை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு இந்தப் பிரச்னை வர வாய்ப்புகள் அதிகம். உதாரணத்துக்கு, ஆசிரியர்கள், மேடை பேச்சாளர்கள் போன்றோர். குரலில் மாற்றங்களை உணர்பவர்கள், இஎன்டி மருத்துவரை அணுகினால், குரல் மாற்றத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை பரிந்துரை செய்வார். ஏறக்குறைய அனைத்து குரல் பிரச்னைகளுக்கும் தீர்வு உள்ளது. தீர்வு இல்லா பிரச்னைகள் மிகச் சில அல்லது மிக அரிதானவை. ஆனால், எந்தப் பிரச்னைக்கும் நீண்ட நாள்களாக மருத்துவ ஆலோசனை பெறாமல் இருந்தால், தீர்வு காண்பது  சற்று கடினம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

பிளாஸ்டிக் தோல் குழந்தைகள்: காரணம் என்ன? தீர்வு இருக்கிறதா? - நிபுணர் விளக்கம்

கடந்த சில தினங்களுக்கு முன்னாள், ராஜஸ்தானின் பிகானரிலுள்ள மருத்துவமனையில் பிளாஸ்டிக் போன்ற கடினமான தோலுடன் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததை அனைவரும் அறிவோம். ஹார்லெக்வின் வகை இக்தியோசிஸ் (Harlequin-type i... மேலும் பார்க்க

MIOT: அறுவை சிகிச்சை மீதான அச்சத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி; ரோபோடிக் அறுவை சிகிச்சை

மியாட் மருத்துவமனை அறிவியலில் சமீபத்திய முன்னேற்றங்களை ஒருங்கிணைத்து நோயாளிகளுக்குச் சிறந்த பராமரிப்பை வழங்குவதற்கும், அவர்களது விளைவுகளை மேம்படுத்துவதற்கும் தன்னை அர்ப்பணித்துள்ளது.இன்றைய உலகில் அதிந... மேலும் பார்க்க

தும்மல், காய்ச்சல், உடல் வலி... பயப்பட வேண்டுமா? - மருத்துவர் சொல்வதென்ன?

ஊரெங்கும் ஒரே தும்மலும், காய்ச்சலுமாக இருக்கிறது. சிலர், 'உடலெல்லாம் வலிக்கிறது' என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் 'காய்ச்சல் விட்டு விட்டு வருகிறது' என டெங்கு பரிசோதனை செய்துகொள்கிறார... மேலும் பார்க்க

Health: மல்டி வைட்டமின் மாத்திரைகள்... யார், எவ்வளவு நாள்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?!

பொதுவாக நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் உணவில் இருந்தே கிடைக்கும். அப்படி உடலுக்கு தேவையான சத்துக்கள் உணவில் இருந்து கிடைக்காதபட்சத்தில் மல்டி வைட்டமின் மாத்திரைகளை சிலர் எடுத்துக்கொள்வார்கள். மல்டி ... மேலும் பார்க்க

புற்றுநோய்கள் வராமல் தடுக்குமா கொழுப்பு அமிலங்கள்? - ஆய்வு முடிவு சொல்வதென்ன?

ஆரோக்கியமான கொழுப்புகள் என்று அழைக்கப்படும் ஒமேகா 6 மற்றும் ஒமேகா 3 ஆகிய கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ள உணவுகள் மனிதனின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அவசியம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தவிர,... மேலும் பார்க்க

`எக்ஸ்ரே ஃபிலிம் இல்லாமல் பேப்பரில் ஜெராக்ஸ்; இதுவே சாட்சி’ - சாடும் அதிமுக மருத்துவரணி

"தென்காசியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் எலும்பு முறிவுக்கு ஒருவர் எக்ஸ்ரே எடுத்ததற்கு, எக்ஸ்ரே ஃபிலிம் இல்லாமல் பேப்பரில் ஜெராக்ஸ் எடுத்து கொடுத்துள்ளனர். அந்தளவுக்கு சுகாதாரத் துறை உள்ளது" என்ற... மேலும் பார்க்க