செய்திகள் :

Sanju Samson: "தோல்வியடைந்த சமயங்களில் எனக்குப் பக்கபலமாக இருந்த இருவர்.." - நெகிழ்ந்த சஞ்சு சாம்சன்

post image

இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், 2015-ம் ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோதும், இந்திய அணியில் தொடர்ச்சியாக இடம்பிடிக்க 10 ஆண்டுகளாகப் போராடி வருகிறார். இதில், கடந்த சில ஆண்டுகளாகச் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகிறார். அவ்வப்போது இந்திய அணியில் விளையாடக் கிடைத்த குறைவான வாய்ப்புகளில் சொதப்பினாலும், அதைச் சரிசெய்யும் விதமாக ஒரு சில நல்ல இன்னிங்ஸையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

சஞ்சு சாம்சன்

இருப்பினும், கிடைக்கும் வாய்ப்புகளில் ஜொலிக்கத் தவறுகிறார் என்று ஒருபக்கம் சஞ்சு சாம்சன் மீது விமர்சனமும், மறுபக்கம் தொடர்ச்சியாக வாய்ப்புகளை வழங்காமல் புறக்கணிக்கிறார்கள் என்று சஞ்சு சாம்சனுக்கு ஆதரவும் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

சமீபத்தில் சஞ்சு சாம்சனின் தந்தை சாம்சன் விஸ்வநாத், "என் மகனின் 10 ஆண்டுக்கால வாழ்க்கையைச் சீரழித்த மூன்று கேப்டன்கள் தோனி, கோலி, ரோஹித். இவர்களுடன் பயிற்சியாளர் டிராவிட்" என்று குற்றம் சாட்டியிருந்தது பேசுபொருளாகியிருந்தது.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டு போட்டிகளில் சதம் அடித்திருக்கிறார். கடைசியாக ஆடிய 5 டி20 போட்டிகளில் 3 சதம் அடித்திருக்கும் சஞ்சு சாம்சன், டி20 போட்டிகளில் அதிக சதம் அடித்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன்களில் முதலிடத்தில் இருக்கிறார். இந்நிலையில், நேற்றைய போட்டியில் சதம் அடித்த பிறகுப் பேசியிருக்கும் சஞ்சு சாம்சன், "நான் என் கிரிக்கெட் வாழ்வில் நிறையத் தோல்விகளைச் சந்திருக்கிறேன். சதங்கள் அடித்திருக்கும் அதே நேரம், முதல் பந்திலேயே டக் அவுட்டும் ஆகியிருக்கிறேன்.

சஞ்சு சாம்சன்

எந்தவொரு சூழ்நிலையிலும் நான் என் மீதான நம்பிக்கையை இழந்துவிடாமல் தன்னம்பிக்கையுடன் இருந்தேன். அதுதான் என்னை உயர்த்திக் கொண்டே இருக்கிறது. தோல்விகளைக் குறித்து நான் மிகுந்த கவலையில் இருந்தபோதெல்லாம் அபிஷேக்கும், திலக்கும் எனக்குப் பக்கபலமாக இருந்தனர்" என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Cheteshwar Pujara: புஜாரா எனும் மாடர்ன் டிராவிட்; இந்தியாவின் வெற்றிடத்தை நிரப்பப்போவது யார்?

ஆஸ்திரேலியாவில் இன்னும் ஒரு வாரத்தில் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் தொடங்கவிருக்கிறது. இந்த முறை ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக இது நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடர், டெஸ்ட் உலக சம்பியன்ஷிப்... மேலும் பார்க்க

CT 2025: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் `டிராபி டூர்’ - BCCI எதிர்ப்பால் பின்வாங்கிய PCB

சாம்பியன்ஸ் ட்ராபி 2025 தொடர் பாகிஸ்தானால் நடத்தப்படுகிறது. பாகிஸ்தானில் நடைபெறும் எந்த போட்டியிலும் பங்கேற்பதில்லை என்பதால் இந்தியா தொடரில் விளையாடுமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. இந்நிலையில் ச... மேலும் பார்க்க

Anshul: `ஒரே இன்னிங்ஸ், 10 விக்கெட்' - ரஞ்சியில் புதிய சாதனை; கவனம் ஈர்க்கும் முன்னாள் MI வீரர்

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ரஞ்சி டிராபி தொடரில், 23 வயது இளம் வீரர் ஒருவர் ஒரு இன்னிங்ஸின் மொத்த விக்கெட்டுகளையும் சாய்த்து சாதனை படைத்திருக்கிறார்.இந்த அரிய சாதனையானது ரஞ்சி டிராபியில் மூன்றாவ... மேலும் பார்க்க

Tim Southee : 'விடை பெறுகிறேன்!' - ஓய்வை அறிவித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சௌத்தி

நியூசிலாந்து அணியின் பிரபல வேகப்பந்து வீச்சாளரான டிம் சௌத்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார். 2008 ஆம் ஆண்டு தன்னுடைய 19வது வயதில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்... மேலும் பார்க்க

CT 25: இந்தியா, பாகிஸ்தானுக்குச் செல்வதில் நீடிக்கும் குழப்பமும்... ஷாகித் அஃப்ரிடியின் விருப்பமும்!

பாகிஸ்தானில் அடுத்தாண்டு பிப்ரவரியில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கவிருக்கிறது. இதில், பாதுகாப்பு காரணங்களால் 2008-க்குப் பிறகு பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடுவதைத் தவிர்த்துவரும் இந்திய அணி, இதே கா... மேலும் பார்க்க

Mohammed Shami: காயத்திலிருந்து மீண்டு வந்த முதல் ஆட்டத்திலேயே 4 விக்கெட்... கம்பேக் மோடில் ஷமி!

இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி இறுதிப் போட்டி வரை சென்றதில் முக்கிய பங்காற்றிய வீரர்களில் குறிப்பிடத்தக்கவர் முகமது ஷமி. வெறும் ஏழு போட்டிகளில் மட... மேலும் பார்க்க