எதிா்கால உலகப் பொருளாதார வளா்ச்சியில் இந்தியா, சீனாவுக்கு முக்கியப் பங்கு: சிங்க...
Mohammed Shami: காயத்திலிருந்து மீண்டு வந்த முதல் ஆட்டத்திலேயே 4 விக்கெட்... கம்பேக் மோடில் ஷமி!
இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி இறுதிப் போட்டி வரை சென்றதில் முக்கிய பங்காற்றிய வீரர்களில் குறிப்பிடத்தக்கவர் முகமது ஷமி. வெறும் ஏழு போட்டிகளில் மட்டுமே களமிறக்கப்பட்ட ஷமி, மொத்தமாக 24 விக்கெட்டுகளை எடுத்த அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். ஆனால், முழங்கால் காயம் காரணமாக ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்குப் பின்னர் எந்தப் போட்டியிலும் ஷமி பங்கேற்கவில்லை.
மேலும், கடந்த பிப்ரவரியில் முழங்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்விலிருந்ததால், ஜூன் மாதம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஷமியால் பங்கேற்க முடியாமல் போனது. அதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் அடுத்த மதம் நடைபெறவிருக்கும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரிலும் ஷமி பங்கேற்கமாட்டார் என்று கடந்த மாதம் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவின.
அதற்கு, `பார்டர் கவாஸ்கர் தொடரிலிருந்து நான் வெளியேறியதாக பிசிசிஐயோ அல்லது நானோ குறிப்பிடவில்லை.' என ஷமி விளக்கமளித்தார். இருப்பினும், பார்டர் கவாஸ்கர் தொடருக்கு இந்த மாதம் அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ஷமியின் பெயர் இடம்பெறவில்லை. ஷமியின் பெயர் இடம்பெறாதது ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் எனப் பலரும் கூறிவருகின்றனர். ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூட, `ஷமி இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு' என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் `Back in Action' ட்வீட் செய்திருந்த ஷமி, தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ரஞ்சி டிராபி தொடரில் தனது முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியிருக்கிறார். மத்தியப்பிரதேச அணிக்கெதிரான ஆட்டத்தில் மேற்கு வங்கம் சார்பில் களமிறங்கிய ஷமி, முதல் இன்னிங்ஸில் 19 ஓவர்கள் வீசி 4 மெய்டன் ஓவர்களுடன் வெறும் 54 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார் ஷமி. இதனால், பார்டர் கவாஸ்கர் தொடரில் ஷமி இடம்பெறுவாரா, அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்ற பேச்சுகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb