செய்திகள் :

Doctor Vikatan: புளிப்பு நெல்லிக்காய், துவர்ப்பு நெல்லிக்காய்... இரண்டில் எது பெஸ்ட்?

post image

Doctor Vikatan: புளிப்புச் சுவையுள்ள குட்டி நெல்லிக்காய், துவர்ப்புச் சுவையுள்ள பெரிய நெல்லிக்காய் என இரண்டு கிடைக்கிறது. இவற்றில் எது அதிக ஆரோக்கியமானது... எதை, எப்படிப் பயன்படுத்தலாம்... ஒருவர் ஒரு நாளைக்கு எத்தனை நெல்லிக்காய் சாப்பிடலாம்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவர் யோ. தீபா

இயற்கை மருத்துவர் யோ. தீபா

புளிப்பான சிறிய நெல்லிக்காய், துவர்ப்பான பெரிய நெல்லிக்காய் என எதுவாக இருந்தாலும் ஆரோக்கியத்தில் புரட்சியை ஏற்படுத்தக்கூடியது அது என்றே சொல்லலாம். 'ஊட்டச்சத்துகளின் பவர் ஹவுஸ்' என்றும் நெல்லிக்காயைச் சொல்லலாம். அந்த அளவுக்கு இதில் அபரிமிதமான சத்துகள் நிறைந்துள்ளன.

உப்பும் காரமும் தூவி விற்கப்படும் புளிப்பு நெல்லிக்காயை வாங்கி ருசித்த அனுபவம் பள்ளிக்காலத்தில் அனேகம் பேருக்கு இருக்கும். அளவில் சிறியதாக இருந்தாலும் இதில் வைட்டமின் சி சத்து மிக அதிகம். நெல்லிக்காய் என்றாலே ஊறுகாய்தான் பலருக்கும் தெரியும். ஆனால், இதை பழைய சாதத்தில் ஊறவைத்துச் சாப்பிடலாம். மோரில் ஊறவைத்தும் சாப்பிடலாம். நெல்லிக்காய்க்கு சருமத்தையும் கூந்தலையும் ஆரோக்கியமாக மாற்றும் தன்மை உண்டு. பாலிபினால், புரதம், நார்ச்சத்து, கால்சியம் என எல்லாம் கொண்டது நெல்லிக்காய். வைட்டமின் சியானது நோய் எதிர்ப்பாற்றலுக்கு உதவி, பார்வையையும் கூர்மையாக்கும்.

இயற்கை மருத்துவத்தில் கூந்தல் எண்ணெய் தயாரிப்பில் தேங்காய் எண்ணெயுடன் நெல்லிக்காய், கறிவேப்பிலை, செம்பருத்தி போன்றவற்றைச் சேர்த்துக் காய்ச்சுவார்கள். அது கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்தும்.

இயற்கை மருத்துவத்தில் கூந்தல்  எண்ணெய் தயாரிப்பில் தேங்காய் எண்ணெயுடன் நெல்லிக்காய், கறிவேப்பிலை, செம்பருத்தி போன்றவற்றைச் சேர்த்துக் காய்ச்சுவார்கள். அது கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்தும். பொடுகுப் பிரச்னை நீங்கும். இரும்புச்சத்து உடலில் உட்கிரகிக்கப்பட வேண்டும் என்றால், அதற்கு வைட்டமின் சி சத்தும் அவசியம். அந்த வகையில் இரும்புச்சத்துள்ள உணவுகளோடு நெல்லிக்காயையும் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். உடலின் சூட்டைத் தணிப்பதிலும் நெல்லிக்காய் சிறப்பானது.

நெல்லிக்காய் நல்லது என்பதற்காக அதை அளவுக்கு அதிகமாகவும் எடுத்துக்கொள்ளக்கூடாது.  கலோரியும் இனிப்பும் குறைவு என்பதால், தினமும் ஒரு நெல்லிக்காய் எடுத்துக்கொண்டாலே போதுமான சத்துகள் நமக்குக் கிடைத்துவிடும். குழந்தைகளுக்கு தினமும் நெல்லிக்காய் கொடுப்பதன் மூலம் அவர்களது நினைவாற்றல் மேம்படும். கவனம் கூடும். இதயநோய், சர்க்கரைநோய் பாதிப்புகளைக் குறைக்கும். நெல்லிக்காயுடன் சிறிது இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து தினமும் காலையில் குடிப்பதால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரித்து, எந்தத் தொற்றும் நம்மைத் தாக்காமல் பாதுகாக்கும். கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து, ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

நெல்லிக்காயில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளதால் அது கொலாஜென் உற்பத்தியைத் தூண்டி, சருமம் இளமையாக, தொய்வின்றி இருக்க உதவும்.

நம் சருமத்தின் இளமையைத் தக்கவைப்பதில் கொலாஜென் மிக முக்கியம். கொலாஜென் உற்பத்திக்கு வைட்டமின் சி அவசியம்.  நெல்லிக்காயில் அதிக அளவு  வைட்டமின் சி உள்ளதால் அது கொலாஜென் உற்பத்தியைத் தூண்டி, சருமம் இளமையாக, தொய்வின்றி இருக்க உதவும். சருமத்தில் சுருக்கங்கள் வருவது தவிர்க்கப்படும்.  செரிமானம் சீராவதால் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும். நெல்லிக்காயானது நம் கல்லீரலைக் காக்கும் கவசம் போன்றது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 10 மில்லி பெரிய நெல்லிக்காய் சாறும், 10 மில்லி பாகற்காய் சாறும் கலந்து அதில் சிறிது இஞ்சிச்சாறும் சேர்த்து தண்ணீர் விட்டு, சிட்டிகை உப்பு சேர்த்துக் குடித்து வந்தால், ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வரும். கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கும் நல்லது. உணவில் புளிக்கு பதில் நெல்லிக்காய் சேர்த்துக்கொள்ளலாம். நெல்லிக்காயை துவையலாகச் செய்து சாப்பிடலாம்.

GERD எனப்படும் Gastroesophageal reflux disease பிரச்னை உள்ளவர்களுக்கு எதைச் சாப்பிட்டாலும் உணவு மேலேழும்பி வரும் அவதி இருக்கும். அவர்கள் நெல்லிக்காய் சாப்பிட்டால் இந்தப் பிரச்னை மேலும் தீவிரமாகலாம். அவர்கள் நெல்லிக்காயைத் தவிர்க்கலாம்.

GERD எனப்படும் Gastroesophageal reflux disease பிரச்னை உள்ளவர்களுக்கு எதைச் சாப்பிட்டாலும் உணவு மேலேழும்பி வரும் அவதி இருக்கும். அவர்கள் நெல்லிக்காய் சாப்பிட்டால் இந்தப் பிரச்னை மேலும் தீவிரமாகலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என்பதால் இன்சுலின் எடுத்துக்கொண்டு, கூடவே நெல்லிக்காயையும் அதிகம் சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை மிகவும் குறையவும் வாய்ப்பு உண்டு. ரத்த அழுத்தத்தைக் குறைக்கும், சர்க்கரையைக் குறைக்கும் என்பதால் சிலர், மற்ற மருந்துகளை நிறுத்திவிட்டு, வெறும் நெல்லிக்காயை மட்டுமே எடுத்துக்கொள்வதையும் பார்க்கிறோம். அது மிகவும் தவறு. மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்து, மாத்திரைகளை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்களின் ஆலோசனைப்படி, கூடுதல் பலனுக்காக நெல்லிக்காயையும் எடுத்துக்கொள்ளலாம்.

அசிடிட்டி பிரச்னை உள்ளவர்கள், நெல்லிக்காய் சாற்றை அப்படியே எடுத்துக்கொண்டால் அவர்களது பிரச்னை மேலும் தீவிரமாகலாம். எனவே, அவர்கள் மருத்துவரின் ஆலோசனையோடு நெல்லிக்காய் சாற்றில் தண்ணீர் கலந்து நீர்க்கச் செய்து எடுத்துக்கொள்ளலாம். ஒருவர் ஒருநாளைக்கு ஒரு நெல்லிக்காய் எடுத்துக்கொண்டால் போதுமானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

`ஆளுநருக்கு நடத்தை விதிகள் முதல் வக்ப் மசோதா வரை' - திமுக நிறைவேற்றிய 6 தீர்மானங்கள்!

2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் 2025 வரும் பிப்.1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள்... மேலும் பார்க்க

சிங்கள அரசு ஈழத்தில் செய்ததை seeman தமிழ்நாட்டில் செய்கிறார் - ஈழத்தமிழர் சபேசன் Interview

சமீபகாலமாக பெரியார் குறித்த உரையாடல் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பெரியாரை ஈழத்தமிழர்களும், புலம்பெயர்ந்த தமிழர்களும் எப்படியாக பார்க்கிறார்கள் என்பது குறித்த புலம்பெயர்ந்த தமிழரான ஈழத்தமிழர் ... மேலும் பார்க்க

``2047-ல் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக இருக்கும்..'' - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த வெள்ளி விழா நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “நெல்லை மண், வீரத்திற்கு பெயர் பெற்றது. ஆங்... மேலும் பார்க்க

UP: ``இந்தோனேசியாவை போல இங்கும் சிறுபான்மையினர் ராமரை மூதாதையராக ஏற்பார்களா?'' -யோகி ஆதித்யநாத்

மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்த இந்தோனேசிய அதிபா் பிரபோவோ சுபியாந்தோவுக்கு ஞாயிற்றுக்கிழமை, குடியரசுத் தலைவர் மாளிகையில் திரௌபதி முர்மு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்தார். அப்போது பேசிய அவர், ... மேலும் பார்க்க

Doctor Vikatan: கால் வலி... வெந்நீரில் பாதங்களை வைத்திருப்பது தீர்வு தருமா?

Doctor Vikatan: எனக்கு 45 வயதாகிறது. அடிக்கடி கால்களில், குறிப்பாக பாதங்களில் வலி வருகிறது. இதை பற்றி சொல்லும்போது பலரும் 'வெந்நீரில் கால்களை சிறிது நேரம் வைத்திருந்தால் சரியாகிவிடும்' என்பதையே தீர்வா... மேலும் பார்க்க

Canada PM: கனடா தேர்தல், டிரம்ப் பாணியில் இந்திய வம்சாவளி வேட்பாளர் பிரசாரம்... கை கொடுக்குமா?

இந்த மாதத் தொடக்கத்தில் கனடா பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதில் இருந்து, 'அடுத்த கனடா பிரதமர் யார்?' என்கிற கேள்வி எழுந்து வருகிறது. இந்த ரேசிலும் மூன்றுக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதில் ஒ... மேலும் பார்க்க