அமெரிக்கா ஊழியா்களுக்கு விருப்ப ஓய்வு
அரசு ஊழியா்களுக்கு விருப்ப ஓய்வு அளிப்பதற்கான திட்டத்தை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.
இது குறித்து மனிதவளத் துறைக்கு அவா் அனுப்பியுள்ள கடிதத்தில், அடுத்த வாரத்துக்குள் பணி விலகும் ஊழியா்களுக்கு சலுகைகள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வருங்காலத்தில் ஆள்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அரசின் செலவுகளைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கையை டிரம்ப் மேற்கொண்டுள்ளாா்.