செய்திகள் :

US Plane Crash: மோதி வெடித்த விமானம் - ஹெலிகாப்டர்; கண்ணிமைக்கும் நேரத்தில் விபரீதம்.. என்ன நடந்தது?

post image
அமெரிக்காவின் அமெரிக்கன் ஏர்லைன்ஸின் பாம்பார்டியர் CRJ700 என்ற விமானம், ஹெலிகாப்டருடன் மோதி வெடித்துச் சிதறியது. இந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், என்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம்.

பயணிகள் விமானம்:

அமெரிக்காவின் அமெரிக்கன் ஏர்லைன்ஸ், பாம்பார்டியர் CRJ700 விமானம், கன்சாஸின் விச்சிட்டாவிலிருந்து புறப்பட்டது. விமானத்தில் 60 பயணிகள், 4 பணியாளர்கள் என மொத்தம் 64 பேர் பயணித்தனர். அந்தப் பயணிகளில் அமெரிக்காவைச் சேர்ந்த ஃபிகர் ஸ்கேட்டிங் (பனிச் சறுக்குகளில் நடனமாடும் விளையாட்டு) வீரர்கள் சிலர் இருந்ததாகக் கூறப்படுகிறது. அமெரிக்க ராணுவத்தின் பயிற்சி ஹெலிகாப்டரில் மூன்று வீரர்கள் இருந்ததாக வாஷிங்டன் DC மேயர் முரியல் பவுசர் தெரிவித்திருக்கிறார். விமானமும், ஹெலிகாப்டரும் உள்ளூர் நேரப்படி, 11 மணியளவில் வாஷிங்டன் டிசி விமான நிலையத்தை நெருங்கும்போது மோதி, வெடித்துச் சிதறி போடோமாக் ஆற்றில் விழுந்திருக்கின்றன.

விமான விபத்து - வாஷிங்டன் டிசி

என்ன நடந்தது?

விமானம் புறப்பட்டு வந்துகொண்டிருந்த அதே நேரத்தில் வர்ஜீனியாவின் ஃபோர்ட் பெல்வோயரில் இருந்து புறப்பட்ட சிகோர்ஸ்கி H-60 ​​என்ற ராணுவ ஹெலிகாப்டர் வாஷிங்டன் டிசி விமான நிலையத்தை நோக்கி வந்திருக்கிறது. அப்போது இரண்டும் மோதிக்கொண்டதால் இந்த விபத்து நடந்திருக்கிறது. விமானம் பல துண்டுகளாகச் சிதறி ஆற்றில் மூழ்கியிருக்கிறது. அதே நேரத்தில் ஹெலிகாப்டர் தண்ணீரில் தலைகீழாக விழுந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் சிக்கியவர்களில் 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன.

உறைபனி காலம் என்பதால், தொடர்ந்து மீட்புப் பணிகளில் சற்று தொய்வு தெரிகிறது. மற்ற பயணிகளின் உடல்களைத் தேடும் பணியில் 300 மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட நடவடிக்கையாக ரொனால்ட் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்துடன் (NTSB) இணைந்து இந்தச் சம்பவம் குறித்து விசாரிப்பதாக FAA தெரிவித்துள்ளது.

உயிரிழப்புகள்:

தற்போதுவரை 19 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க ஃபிகர் ஸ்கேட்டிங் துறையைச் சேர்ந்தப் பலர் இந்த விமான விபத்தில் உயிரிழந்ததாகத் தெரிகிறது. அமெரிக்க ஃபிகர் ஸ்கேட்டிங் மேம்பாட்டுக் குழுவைச் சேர்ந்தவர்கள், ``கன்சாஸில் உள்ள மேம்பாட்டு முகாமிலிருந்து வீடு திரும்பும் வீரர்கள், பயிற்சியாளர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என எங்கள் ஸ்கேட்டிங் குழுவைச் சேர்ந்த பலர் துரதிஷ்டவசமாக விமானத்திலிருந்தனர். ரஷ்யாவைச் சேர்ந்த ஐஸ் ஸ்கேட்டிங் பயிற்சியாளர்கள், முன்னாள் உலக சாம்பியன்களான யெவ்ஜீனியா ஷிஷ்கோவா, வாடிம் நௌமோவ் ஆகியோரும் விமானத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது" என்றனர்.

மீட்புப் பணிகள் குறித்துப் பேசிய வாஷிங்டன் DC தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் மைய தலைமை அதிகாரி ஜான் டோனெல்லி, ``படகுகளில் சுமார் 300 மீட்புப் பணியாளர்கள் உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் எங்களுக்குக் காற்று, பனித்துண்டாக மாறும் தண்ணீர், ஆழத்தில் இருக்கும் விமானத்தின் சிதைந்த பாகங்கள் எனச் சவால்கள் அதிகமாக இருக்கிறது" என்றார். அதிகாரப்பூர்வ உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அமெரிக்க அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்?

அதிபர் ட்ரம்ப் இந்த விபத்து குறித்துப் பேசும்போது, ``இது ஒரு மோசமான சூழ்நிலை, இது தடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த பயங்கரமான விபத்து குறித்து எனக்கு முழுமையாகத் தெரிவிக்கப்பட்டது. நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறேன். உயிரிழந்தவர்களின் ஆன்மாவைக் கடவுள் ஆசீர்வதிப்பாராக. மீட்புப் படையினருக்கு நன்றி." எனக் குறிப்பிட்டிருக்கிறார். துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், ``இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்... அவர்களின் குடும்பத்துக்கு என் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

US Plane Crash: `சடலமாக 18 உடல்கள் மீட்பு; ஒருவர் இந்தியர்..' -விமான விபத்தால் பெரும் சோகம்

அமெரிக்கா வாஷிங்டன்னில் வணிக விமானம் ஒன்று பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் மீது மோதி விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவம் ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பொட்டமாக் நதிக்கு மேல் நடந்துள்ளது.... மேலும் பார்க்க

கூடலூர்: வனவிலங்கு வேட்டைக்கு சென்றபோது இளைஞர் மர்ம மரணம்... யானை மீது பழிபோட்டு தப்பிக்க முயற்சி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள தேவர்சோலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்ததாக கடந்த சனிக்கிழமையன்று அதிகாலை வனத்துறையினருக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். கூடலூர் அரசு மருத... மேலும் பார்க்க

உத்தரப்பிரதேசத்தில் லட்டு திருவிழா: மேடை சரிந்து 6 பேர் பலி, 50 பேர் காயம்..

உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் என்ற இடத்தில் மத நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஜெயின் மதத்தினர் அங்குள்ள ஜெயின் கோயிலில் இதற்காக ஒரே இடத்தில் கூடினர். அவர்கள் ஒன்று கூடி லட்டு மஹோத்... மேலும் பார்க்க

கோவை: விபத்தில் இறந்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் - உடல் உறுப்பு தானத்தால் 5 பேருக்கு மறுவாழ்வு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, சக்தி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 54). இவர் கேரள மாநிலம் கோழிப்பாறையில் உள்ள அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவியும் அரசுப்ப... மேலும் பார்க்க

வயநாடு: துப்பாக்கிச்சூட்டில் தப்பிய புலி, சடலமாக கண்டெடுப்பு - குழப்பத்தில் வனத்துறை

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம், மானந்தவாடி அருகில் உள்ள பஞ்சாரக்கொல்லி பகுதி காப்பி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த ராதா என்ற பெண்ணை கடந்த சில தினங்களுக்கு முன்பு புலி ஒன்று தாக்கி கொன்றது. அவரின் ... மேலும் பார்க்க

Wayanad: ``புலி பாய்ந்த போது ஷீல்டு இருந்ததால் தப்பித்தேன்" -புலியைத் தேடிச் சென்ற போலீஸ் உருக்கம்

கேரள மாநிலம் வயநாடு மானந்தவாடி அருகே உள்ள பஞ்சாரக்கொல்லி பகுதியைச் சேர்ந்தவர் அச்சப்பன். இவரது மனைவி ராதா (47). இவர்களுக்கு அனிஷா, அஜிஸ் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ராதா கடந்த சில நாட்களுக்கு முன் பி... மேலும் பார்க்க