ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடி...
US Plane Crash: `சடலமாக 18 உடல்கள் மீட்பு; ஒருவர் இந்தியர்..' -விமான விபத்தால் பெரும் சோகம்
அமெரிக்கா வாஷிங்டன்னில் வணிக விமானம் ஒன்று பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் மீது மோதி விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவம் ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பொட்டமாக் நதிக்கு மேல் நடந்துள்ளது.
விபத்தான ஹெலிகாப்டரில் மூன்று பேர் இருந்துள்ளனர். வணிக விமானம் ஆன CRJ7000-ல் மொத்தம் 65 சீட்டுகள் உள்ளன. ஆனால், அதில் 21 பேர் மட்டுமே பயணித்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சுடானை சேர்ந்தது ஆகும்.
இந்த விபத்தில் இதுவரை ஒரே ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இந்த விபத்தையொட்டி ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தில் புறப்படவிருந்த விமானம் எல்லாம் பயணிக்க ரத்து செய்யப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் மீட்புப் படையினர் தீவிர தேடுதலில் உள்ளனர்.
இதுவரை, இந்த விபத்தில் உயிரிழந்த 18 பேரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்னமும் சில உடல் கண்டுபிடிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதில் இந்தியர் ஒருவரின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்கா வாஷிங்டன்னில் நள்ளிரவு. விபத்து நடந்த பகுதியில் நேரம் நேரம் செல்ல செல்ல பனி கூடும். ஒருவேளை யாராவது விபத்தில் சிக்கி நதியில் விழுந்து எப்படியோ தன்னை காப்பாற்றிக் கொண்டிருந்தாலும், இந்தப் பனியினால் அவர்களுக்கு ஹைப்போதெர்மியா 20-30 நிமிடங்களில் ஏற்படலாம் என்று பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.