செய்திகள் :

"பெரியாரை இழிவுபடுத்தும் கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் செய்யும் சூழல் உள்ளது" - கனிமொழி எம்.பி

post image
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் நடைபெற்றது.

இந்தப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கலந்துகொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார். பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி பேசும்போது, "திராவிடம், திராவிட மாடல் என்று கேட்டாலே அவர்களைக் கலங்கவைக்கும் ஒரு மாடலாக இந்த ஆட்சி உள்ளது.

கனிமொழி

திராவிட மாடலை எதிர்க்கக் கூடியவர்கள் யாருக்கும் எதுவும் கிடைக்கக்கூடாது என்று நினைக்க கூடியவர்கள். நிறுவனங்கள் தொழிற்சாலைகள், சின்ன சின்ன நிறுவனங்களை உள்ளிட்டவற்றை நிறுத்திவிட்டு இந்தியாவில் இரண்டு பேர் மட்டுந்தான் தொழில் செய்கிறார்கள். அவர்களின் எண்ணப்படி செயல்படக்கூடியது தான் மத்திய பா.ஜ.க ஆட்சி.

யாருக்கெல்லாம் கல்வி, வேலைவாய்ப்பில் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் வாய்ப்பு மறுக்கப்பட்டதோ அவர்களுக்கெல்லாம் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கித் தந்தது திராவிட இயக்கம். தந்தை பெரியார் அவர்கள் மிகப் பெரிய செல்வந்தர்.

பேச்சு

ஆனால், பெரியார் மக்களுக்காகப் போராடி எத்தனை முறை சிறைசென்றாலும் ஒரு முறை கூட நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்காதவர். டங்ஸ்டன் திட்டம் தி.மு.க முயற்சியால் கைவிடப்பட்டுள்ளது. மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தையும் கைக்கட்டி ஆதரித்தது அ.தி.மு.க அரசு. சட்டமன்றத் தேர்தலுக்கு மட்டுமே எடப்பாடி வருவார் பின்னர் அவர் எங்குபோவார் எனத் தெரியாது. இப்படித்தான் இவர்கள் அரசியல் செய்கிறார்கள்.

'தமிழ், தமிழ்' எனக் கூறிக்கொண்டு தமிழையும், தமிழர்களையும் கொச்சைப்படுத்தக்கூடிய, பெரியாரை இழிவுப்படுத்தக்கூடிய சில கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய சூழலுக்கு நம் முதல்வர் தள்ளப்பட்டிருக்கிறார்.

கூட்டம்

தமிழகத்திற்கு பொழுதுபோக்கிற்காக ஒரு ஆளுநர் இருக்கிறார். அவர் ஆளுநராக இல்லை, அரசியல்வாதியாக செயல்படுகிறார். மக்களுக்குத் தேவையான திட்டங்களை செய்வதற்கு எந்தவித நிதியையும் ஒன்றிய அரசு கொடுப்பதில்லை. பல்கலைக்கழகங்களுக்கு நிர்வாகிகளைக்கூட நியமிக்க முடியாமல் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என நீதிமன்றம் கேட்கும் அளவிற்கு ஒரு ஆளுநர் தமிழ்நாட்டில் உள்ளார்" என பேசினார்.

கடலூர்: `அய்யோ என் புள்ளைங்க போகுதே!’ - ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்திய அரசு... கதறித் துடித்த பெண்கள்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட வானமாதேவி, கொடுக்கன்பாளையம், தெத்தங்குப்பம், கட்டாரா சாவடி உள்ளிட்ட கிராமங்களில் அரசுக்கு சொந்தமாக 65.75 ஹெக்டேர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில் அப்பக... மேலும் பார்க்க

'சீமான் சொன்னதை நம்பி ஏராளமான பணம் கொடுத்து ஏமாந்தோம்' - கொளத்தூர் மணி வேதனை

திராவிடர் விடுதலை கழகம் தலைவர் கொளத்தூர் மணி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், " ஈழப் போராட்டம் ஆயுத போராட்டமாக மாறியபோது, அந்த போராளி குழுக்களுக்கு தமிழகத்தில் ஆயுதப் பய... மேலும் பார்க்க

20 கிலோ தங்கம், 300 கேள்விகள்; தாம்பரம் ரூ.4 கோடி விவகாரத்தில் புதுச்சேரி பாஜக எம்.பி-யிடம் விசாரணை!

கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனையில் இருந்த பறக்கும் படையினர், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடியைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்தப் பணத்... மேலும் பார்க்க

'தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிடங்கள்!' - கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 37ஆவது கூட்டம் இன்று கூடியது. டெல்லியில் உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் பிற்பகல் 2:30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே... மேலும் பார்க்க

Mana Mitra: இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்... வாட்ஸ்அப் போதும்; ஆந்திர அரசின் புது திட்டம்

பொதுமக்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலையாமல் இருந்த இடத்திலிருந்தே அரசு சேவைகளைப் பெரும் வகையில், வாட்ஸ்அப் கவர்னன்ஸ் (WhatsApp Governance) என்ற முறையில் புதிய திட்டத்தை ஆந்திர அரசு இன்று (ஜனவரி 30) த... மேலும் பார்க்க