செய்திகள் :

Mana Mitra: இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்... வாட்ஸ்அப் போதும்; ஆந்திர அரசின் புது திட்டம்

post image

பொதுமக்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலையாமல் இருந்த இடத்திலிருந்தே அரசு சேவைகளைப் பெரும் வகையில், வாட்ஸ்அப் கவர்னன்ஸ் (WhatsApp Governance) என்ற முறையில் புதிய திட்டத்தை ஆந்திர அரசு இன்று (ஜனவரி 30) தொடங்கியிருக்கிறது. பொதுச் சேவைகளை மக்கள் எளிதில் அணுகும் வகையில் விரிவுபடுத்துவதற்காக `மன மித்ரா (Mana Mitra)' என்று பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்தத் திட்டம், கடந்த ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி மெட்டாவுடன் (Meta) மாநில அரசு ஒப்பந்தம் போட்டதைத் தொடர்ந்து, கொண்டுவரப்பட்டிருக்கிறது.

WhatsApp Governance
WhatsApp Governance

இதன் மூலம், மக்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே சான்றிதழ் பெறுதல் உள்ளிட்ட அரசு சேவைகளைப் பெற முடியும். முதல்கட்டமாக அறநிலையத்துறை, போக்குவரத்துக் கழகம், முதல்வர் நிவாரண நிதி, அண்ணா உணவகங்கள், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட 161 அரசு சேவைகளை மக்கள் வாட்ஸ்அப்பிலேயே பெறலாம். வரும் காலங்களில் கூடுதல் துறைகள் இதில் சேர்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கான, அதிகாரப்பூர்வ எண்ணாக `95523 00009' என்ற எண்ணை அரசு அறிவித்திருக்கிறது. மக்களுக்குப் பயனுள்ள இந்தத் திட்டத்தை இன்று அறிமுகப்படுத்திய மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் நாரா லோகேஷ், ``இந்தத் திட்டம் நாயுடு 2.0 மாடல் அரசில் ஒரு மைல்கல்" என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

கடலூர்: `அய்யோ என் புள்ளைங்க போகுதே!’ - ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்திய அரசு... கதறித் துடித்த பெண்கள்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட வானமாதேவி, கொடுக்கன்பாளையம், தெத்தங்குப்பம், கட்டாரா சாவடி உள்ளிட்ட கிராமங்களில் அரசுக்கு சொந்தமாக 65.75 ஹெக்டேர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில் அப்பக... மேலும் பார்க்க

'சீமான் சொன்னதை நம்பி ஏராளமான பணம் கொடுத்து ஏமாந்தோம்' - கொளத்தூர் மணி வேதனை

திராவிடர் விடுதலை கழகம் தலைவர் கொளத்தூர் மணி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், " ஈழப் போராட்டம் ஆயுத போராட்டமாக மாறியபோது, அந்த போராளி குழுக்களுக்கு தமிழகத்தில் ஆயுதப் பய... மேலும் பார்க்க

"பெரியாரை இழிவுபடுத்தும் கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் செய்யும் சூழல் உள்ளது" - கனிமொழி எம்.பி

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் நடைபெற்றது.இந்தப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க துணைப் பொதுச் செயல... மேலும் பார்க்க

20 கிலோ தங்கம், 300 கேள்விகள்; தாம்பரம் ரூ.4 கோடி விவகாரத்தில் புதுச்சேரி பாஜக எம்.பி-யிடம் விசாரணை!

கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனையில் இருந்த பறக்கும் படையினர், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடியைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்தப் பணத்... மேலும் பார்க்க

'தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிடங்கள்!' - கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 37ஆவது கூட்டம் இன்று கூடியது. டெல்லியில் உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் பிற்பகல் 2:30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே... மேலும் பார்க்க