செய்திகள் :

20 கிலோ தங்கம், 300 கேள்விகள்; தாம்பரம் ரூ.4 கோடி விவகாரத்தில் புதுச்சேரி பாஜக எம்.பி-யிடம் விசாரணை!

post image

கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனையில் இருந்த பறக்கும் படையினர், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடியைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்தப் பணத்தை எடுத்துச் சென்ற பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் மேலாளர் உள்ளிட்ட நான்கு பேரைக் கைதுசெய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமானது என்று அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

சி.பி.சி.ஐ.டி

அதையடுத்து வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காகவே நயினார் நாகேந்திரன் அந்தப் பணத்தை எடுத்துச் சென்றிருக்கிறார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன், பா.ஜ.க-வின் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்டவர்களிடம் விசாரணை செய்தது சி.பி.சி.ஐ.டி.

அதையடுத்து சென்னை சௌகார்பேட்டையைச் சேர்ந்த சூரஜ் மற்றும் பங்கஜ் லால்வானியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ``புதுச்சேரி பா.ஜ.க-வின் தலைவரும், ராஜ்ய சபா எம்.பி-யுமான செல்வகணபதி 20 கிலோ தங்கக் கட்டிகளை எங்களிடம் கொடுத்து விற்றுத் தருமாறு கூறினார். அதன்படி சென்னை என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள ஒரு தங்க வியாபாரியிடம் 15 கிலோ தங்கத்தையும், புதுச்சேரியில் 5 கிலோ தங்கத்தையும் கமிஷன் அடிப்படையில் விற்றுக் கொடுத்தோம்” என்று வாக்குமூலம் அளித்தனர்.

நயினார் நாகேந்திரன்

அதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு செல்வகணபதிக்கு சம்மன் அனுப்பியது சி.பி.சி.ஐ.டி. ஆனால் உடல் நிலையைக் காரணம் காட்டி அப்போது தட்டிக்கழித்த செல்வகணபதி சி.பி.சி.ஐ.டி கொடுத்த அழுத்தத்தால், எழும்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆஜரானார். சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில், அவரிடம் 300-க்கும் மேற்பட்ட கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கடலூர்: `அய்யோ என் புள்ளைங்க போகுதே!’ - ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்திய அரசு... கதறித் துடித்த பெண்கள்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட வானமாதேவி, கொடுக்கன்பாளையம், தெத்தங்குப்பம், கட்டாரா சாவடி உள்ளிட்ட கிராமங்களில் அரசுக்கு சொந்தமாக 65.75 ஹெக்டேர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில் அப்பக... மேலும் பார்க்க

'சீமான் சொன்னதை நம்பி ஏராளமான பணம் கொடுத்து ஏமாந்தோம்' - கொளத்தூர் மணி வேதனை

திராவிடர் விடுதலை கழகம் தலைவர் கொளத்தூர் மணி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், " ஈழப் போராட்டம் ஆயுத போராட்டமாக மாறியபோது, அந்த போராளி குழுக்களுக்கு தமிழகத்தில் ஆயுதப் பய... மேலும் பார்க்க

"பெரியாரை இழிவுபடுத்தும் கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் செய்யும் சூழல் உள்ளது" - கனிமொழி எம்.பி

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் நடைபெற்றது.இந்தப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க துணைப் பொதுச் செயல... மேலும் பார்க்க

'தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிடங்கள்!' - கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 37ஆவது கூட்டம் இன்று கூடியது. டெல்லியில் உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் பிற்பகல் 2:30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே... மேலும் பார்க்க

Mana Mitra: இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்... வாட்ஸ்அப் போதும்; ஆந்திர அரசின் புது திட்டம்

பொதுமக்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலையாமல் இருந்த இடத்திலிருந்தே அரசு சேவைகளைப் பெரும் வகையில், வாட்ஸ்அப் கவர்னன்ஸ் (WhatsApp Governance) என்ற முறையில் புதிய திட்டத்தை ஆந்திர அரசு இன்று (ஜனவரி 30) த... மேலும் பார்க்க