செய்திகள் :

கடலூர்: `அய்யோ என் புள்ளைங்க போகுதே!’ - ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்திய அரசு... கதறித் துடித்த பெண்கள்

post image

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட வானமாதேவி, கொடுக்கன்பாளையம், தெத்தங்குப்பம், கட்டாரா சாவடி உள்ளிட்ட கிராமங்களில் அரசுக்கு சொந்தமாக 65.75 ஹெக்டேர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வீடு கட்டியும், முந்திரி விவசாயமும் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த இடத்தில் அமையவிருக்கும் தோல் தொழிற்சாலைக்காக, நிலத்தை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறது மாவட்ட நிர்வாகம். அதற்காக `ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அரசு நிலங்களை 15 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும்’ என்று அந்த விவசாயிகளுக்கு கடந்த மாதம் நோட்டீஸ் வழங்கியது வருவாய்துறை.

கடலூர் ஆக்கிரமிப்பு

ஆனால் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், ஜனவரி 4-ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டதுடன் மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தனர். இந்த நிலையில் கடலூர் ஆர்.டி.ஓ அபிநயா நேற்று ஜே.சி.பி இயந்திரங்கள் மற்றும் வருவாய்துறை ஊழியர்களுடன் ஆக்கிரமிப்பு பகுதிகளுக்குச் சென்றார். அதேபோல பாதுகாப்புக்காக பண்ருட்டி டி.எஸ்.பி தலைமையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

அப்போது ஆக்கிரமிப்பை அகற்றச் சென்ற போலீஸாரையும், அதிகாரிகளையும் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அப்பகுதி மக்கள். அவர்களுக்கு ஆதரவாக வந்த பா.ம.க, பா.ஜ.க மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள், `விளை நிலங்களை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ என்று ஆர்.டி.ஓ-விடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, `விளை நிலமாக இருந்தாலும் இது அரசுக்குச் சொந்தமான நிலம். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கிது. முறைப்படி அவர்களுக்கு தெரிவித்த பிறகே அப்புறப்படுத்துகிறோம்’ என்ற அவர், மரங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

கடலூர் ஆக்கிரமிப்பு

அதனடிப்படையில் அங்கிருந்த பலா மற்றும் முந்திரி மரங்களை வேரோடு சாய்த்தன ஜே.சி.பி இயந்திரங்கள். பல ஆண்டுகள் தங்கள் பிள்ளைகளைப் போல பார்த்துப் பார்த்து வளர்த்த மரங்கள் சாய்க்கப்படுவதை தாங்கிக் கொள்ள முடியாத பெண்கள்,  ``அய்யோ என் புள்ளைங்களாம் போகுதே…" என்று கதறி அழுதனர். சிலர் மரங்களை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதனர். அதையடுத்து போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தியதும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்தது.

'சீமான் சொன்னதை நம்பி ஏராளமான பணம் கொடுத்து ஏமாந்தோம்' - கொளத்தூர் மணி வேதனை

திராவிடர் விடுதலை கழகம் தலைவர் கொளத்தூர் மணி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், " ஈழப் போராட்டம் ஆயுத போராட்டமாக மாறியபோது, அந்த போராளி குழுக்களுக்கு தமிழகத்தில் ஆயுதப் பய... மேலும் பார்க்க

"பெரியாரை இழிவுபடுத்தும் கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் செய்யும் சூழல் உள்ளது" - கனிமொழி எம்.பி

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் நடைபெற்றது.இந்தப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க துணைப் பொதுச் செயல... மேலும் பார்க்க

20 கிலோ தங்கம், 300 கேள்விகள்; தாம்பரம் ரூ.4 கோடி விவகாரத்தில் புதுச்சேரி பாஜக எம்.பி-யிடம் விசாரணை!

கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனையில் இருந்த பறக்கும் படையினர், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடியைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்தப் பணத்... மேலும் பார்க்க

'தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிடங்கள்!' - கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 37ஆவது கூட்டம் இன்று கூடியது. டெல்லியில் உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் பிற்பகல் 2:30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே... மேலும் பார்க்க

Mana Mitra: இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்... வாட்ஸ்அப் போதும்; ஆந்திர அரசின் புது திட்டம்

பொதுமக்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலையாமல் இருந்த இடத்திலிருந்தே அரசு சேவைகளைப் பெரும் வகையில், வாட்ஸ்அப் கவர்னன்ஸ் (WhatsApp Governance) என்ற முறையில் புதிய திட்டத்தை ஆந்திர அரசு இன்று (ஜனவரி 30) த... மேலும் பார்க்க