உலகிலேயே முதன்முறையாக `குடித்துவிட்டு ட்ரோன் இயக்கிதற்காக ரூ.2.5 லட்சம் அபராதம்'...
வழிவிடு முருகன் கோயிலுக்கு சாலை வசதி செய்து தரக் கோரிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வழிவிடு முருகன் கோயிலுக்கு மதுரை-கொல்லம் 4 வழிச் சாலையிலிருந்து செல்லும் வகையில், வழி ஏற்படுத்தி தர வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
நத்தம்பட்டியில் பழைமை வாய்ந்த வழிவிடு முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் 4 வழிச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், இந்தப் பகுதியில் உள்ள வழிவிடு முருகன் கோயிலுக்கு அணுகு சாலை அமைக்கப்பட்டது. ஆனால், அந்தச் சாலையில் 2 கி.மீ. தொலைவுக்கு சுற்றி கோயிலுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, மதுரை-கொல்லம் 4 வழிச் சாலையிலிருந்து செல்லும் வகையில், வழி ஏற்படுத்தி தர வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.