விண்ணப்பித்துவிட்டீர்களா..?: செயில் நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணி!
உலகிலேயே முதன்முறையாக `குடித்துவிட்டு ட்ரோன் இயக்கிதற்காக ரூ.2.5 லட்சம் அபராதம்' - எங்கே?
குடித்துவிட்டு கார், பைக் என எந்த வாகனத்தையும் ஓட்டி ஃபைன் கட்டுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், ஸ்வீடனில் ஒரு குடிமகன் குடித்துவிட்டு ட்ரோன் இயக்கியதற்காக அபராதம் கட்டியுள்ளார், அதுவும் 2,52,194 ரூபாய்.
உலகிலேயே குடித்துவிட்டு ட்ரோன் ஓட்டியதற்காக ஒருவர் மீது அபராதம் விதிப்பது இதுவே முதன்முறை. சுவீடன் நாட்டில் ராத்விக் என்ற நகரில் நடந்த கார் நிகழ்ச்சியில் இவர் ட்ரோன் செலுத்தியிருக்கிறார்.
காவல்துறையினர் தங்களது கண்காணிப்புக்காக பணியில் இருந்தபோது, 55 வயது நபர் ஒருவர் ட்ரோன் இயக்குவதைக் கண்டறிந்துள்ளனர். அங்கு பார்வையாளர்கள் ட்ரோன் பறக்க கட்டுப்பாடு இருந்ததால் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரித்ததில் அவர் ஆல்கஹால் பருகியிருந்தது தெரியவந்துள்ளது. அவரது இரத்தத்தில் ஒவ்வொரு 1000 பங்குக்கும் 0.69 பங்கு ஆல்கஹால் இருந்துள்ளது.
ஸ்வீடன் சட்டத்தின்படி ஒரு நபர் வாகனம் ஓட்டும் போது, இரத்தத்தில் 1000 பங்குக்கு 0.2 பங்குக்கு அதிகமாக ஆல்கஹால் இருப்பது சட்டத்தை மீறுவதாகும். 1.0 பங்குக்கு அதிகமாக இருந்தால் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஆல்கஹால் பருகுவதில் மற்ற ஐரோப்பிய நாடுகளை விட ஸ்வீடன் தீவிரமான விதிகளைப் பின்பற்றுகிறது. இங்கிலாந்தில் வாகனம் ஓட்டும்போது 0.8 பங்குக்கு அதிகமாக ஆல்கஹால் கலந்திருப்பது சட்டத்தை மீறுவதாகும். ஸ்பெயின், ஃபிரான்ஸ், பெல்ஜியம் நாடுகளில் 0.5 பங்கு பருகுவது குற்றமாகும்.
ரோமானியா, ஹங்கேரியில் வாகனம் ஓட்டுகையில் துளிகூட இரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருத்தல் கூடாது.
Drone இயக்கியதற்கு அபராதமா - நீதிமன்றம் அளித்த விளக்கம்!
காவல்துறையினர் வந்ததும் அந்த நபர் அந்த தனது நண்பர்தான் ட்ரோனை இயக்கியதாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவரது நண்பர் அப்போது அருகில் இல்லாததால் அவர் மீது 32,000 ஸ்வீடிஸ் க்ரோனா அபராதம் விதித்துள்ளனர்.
நீதிமன்றத்திலும் குடித்துவிட்டு ட்ரோன் ஓட்டிய குற்றத்துக்காக இந்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. "இது ஒரு விமானம். சிறியதாக இருந்தாலும் அவதனை கீழே இருப்பவர் இயக்கினாலும், அது கீழே விழுந்து யாராவது காயமடைய வாய்ப்பு உள்ளது" என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.