செய்திகள் :

``டிரம்ப் பதவியேற்பு விழாவில் நீடா அம்பானி அணிந்த சேலை" -சுவாரஸ்யம் பகிரும் காஞ்சிபுரம் நெசவாளர்

post image
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினராக முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா அம்பானி கலந்துகொண்டிருந்தனர்.

அந்த நிகழ்ச்சிக்கு நீடா அம்பானி காஞ்சிபுரம் பட்டுபுடவையை அணிந்து சென்றிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்ந்திருந்தது. அந்தப் புடவையை மத்திய அரசின் ‘சந்த் கபீர்’ (நெசவாளர்களுக்கு வழங்கும் உயரிய விருது) விருதைப் பெற்ற காஞ்சிப்புரத்தின் நெசவாளர் கிருஷ்ண மூர்த்தி என்பவர்தான் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம். "கிட்டத்தட்ட 45 வருஷம் இந்தத் துறையில இருக்கேன். 15 வயசுல இருந்து இந்த வேலையை செஞ்சிக்கிட்டு இருக்கேன்.

அம்பானி - நீடா அம்பானி

நெசவிற்காக 2010-ல் தேசிய விருதும், 2018-ல் ‘சந்த் கபீர்’ விருதும் வாங்கி இருக்கேன். 2018-ல எனக்கு ஏன் விருது கொடுத்தாங்கனா, 114 டிசைன்கள் கொண்ட ஒரு பட்டுப்புடவையைத் தயாரிச்சிருந்தேன். டெக்ஸ்டைல் படிக்கும் மாணவர்கள் எல்லாம் வருவாங்க. அவர்களுக்கு காண்பிப்பதற்காக அந்தப் புடவையை தயாரிச்சிருந்தேன்.

யாழி, சிம்பம், மயில்கள், கோபுரங்கள் என மொத்தம் 114 டிசைன்கள் புடவையில் இருக்கும். அந்தப் புடவைக்காகதான் விருது கொடுத்தாங்க. ஹைதராபாத்தில் ரிலையன்ஸ் ஷோ ரூம் ஒன்று திறந்தாங்க. அந்த ஷோ ரூம்மினுடைய மேனேஜர்கள் நான் தயாரிச்ச இந்த புடவையைப் பார்த்திட்டு கடை திறப்பு விழாவுக்கு அழைச்சிருந்தாங்க.

டிசைன்
டிசைன்

என்னைய மாதிரி இருக்க நிறைய நெசவாளர்களையும் கூப்பிட்டிருந்தாங்க. அந்த ஷோ ரூம் திறப்பு விழாவுக்கு நீடா அம்பானி வந்திருந்தாங்க. நிறைய புடவைகள் அங்க இருந்துச்சு. நான் தயாரிச்ச புடவையும் அங்க வச்சுருந்தாங்க. அப்போ நீடா அம்பானி நான் தயாரிச்சப் புடவைய ஒரு 10 நிமிஷம் பார்த்திட்டு இருந்து ரொம்ப புடிச்சிருக்குனு மேனேஜர்களிடம் சொல்லிருக்காங்க. பிறகு அவுங்க என்னைய மேடம் கிட்ட அறிமுகப்படுத்தினாங்க.

அந்த சேலையை அவுங்களுக்கு கொடுத்திட்டேன். அதைத்தான் அவுங்க பதவியேற்பு விழாவில் கட்டிருக்காங்க. அதேபோல அவர்களின் மகன் திருமணத்திற்கு ஒரு சிவப்பு சேலை கட்டிருந்தாங்க. அந்த சேலைக்கும் நான்தான் டிசைன் செய்துக்கொடுத்தேன்.

கிருஷ்ண மூர்த்தி
கிருஷ்ண மூர்த்தி

வேறு ஒருத்தர் நெய்துக்கொடுத்தார். இந்த மாதிரி நேரடியாக இல்லாமல் ஆன்லைன் மூலமாக நிறைய சினிமா பிரபலங்கள் நான் டிசைன் செய்து நெய்த சேலையை வாங்கி இருக்கிறாங்க" என்று நெகிழ்வாகப் பேசினார்.

வகுப்பறையில் மாணவனைத் திருமணம் செய்தாரா பேராசிரியை? வைரலான வீடியோ - என்ன நடந்தது?

மேற்கு வங்க மாநிலம், மௌலானா அபுல் கலாம் ஆசாத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வகுப்பறையில், பேராசிரியை முதலாமாண்டு மாணவரைத் திருமணம் செய்வதுபோல பரவிய வீடியோவால், பல்கலைக்கழக நிர்வாகம் அந்த பேராசிரியையை ... மேலும் பார்க்க

Kumbh Mela: அதிகாலையில் மரண ஓலம்; பலி 30 ஆக அதிகரிப்பு... கும்பமேளா கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி?

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் நடந்து வரும் கும்பமேளாவில் நேற்று மிகவும் முக்கியமான நாள் ஆகும். மெளனி அமாவாசையான நேற்று மட்டும் 10 கோடி பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று ஏற்கெனவே எதிர்பார்த... மேலும் பார்க்க

Kumbh Mela: புனித நீராட கும்பமேளாவில் குவிந்த 5 கோடி பக்தர்கள்; கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி

உத்தர பிரதேச மாநிலம் பிரக்யஜ்ராஜ் நகரில் நடந்து வரும் மகா கும்பமேளாவின் பிரதான புனித நீராடல் நடைபெற்று வருகிறது. மெளனி அமாவாசையான இன்று நடைபெறும் இந்த புனித நீராடலுக்கு 'அம்ரித் ஸ்நான்' என்று சொல்வதுண... மேலும் பார்க்க

தவறுதலாக ராஜினாமா கடிதத்தை அனுப்பிய செல்ல பூனை; வேலை இழந்ததால் புலம்பும் பெண்!

வளர்ப்பு பூனை தவறுதலாக ராஜினாமா கடிதத்தை அனுப்பியதால் வேலையையும், ஆண்டு இறுதியில் கிடைக்கும் போனஸையும் இழந்துள்ளார் சீனாவைச் சேர்ந்த பெண்.சோகிங் நகரைச் சேர்ந்த 25 வயது பெண், 9 பூனைகளை வளர்த்து வந்துள்... மேலும் பார்க்க

`எதாச்சும் வித்தியாசமா கொண்டு வா' - 4-வது படிக்கும்போதே ஆசிரியரை ஆச்சரியப்படுத்திய Bill Gates!

உலகப் பணக்காரர்களில் ஒருவரான மைக்ரோசாஃட்டின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் (Bill Gates), இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தன்னுடைய புதிய புத்தகத்தை அறிமுகப்படுத... மேலும் பார்க்க

China: வேலை செய்வதாக நடிக்க ரூ.300 செலவழிக்கும் மக்கள்; அதிர்ச்சிப் பின்னணி; வேலையின்மையின் அவலம்

சீனாவில் வளர்ந்துவரும் வேலைவாய்ப்பின்மைக்கு இடையில், வேலை பார்ப்பது போலக் காட்டிக்கொள்வதற்கு மக்கள் பணம் செலவழித்து வருகின்றனர். வேலை இல்லாமையை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து மறைக்க விரும... மேலும் பார்க்க