செய்திகள் :

ASER 2024: `தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்!' - ரவிக்குமார் எம்.பி கவலை

post image
விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி ரவிக்குமார் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில், "இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் நேரடியாக ஆய்வு செய்து பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், மாணவர்களின் கற்றல் திறன் ஆகியவற்றைப் பற்றிய அறிக்கையை ப்ராதம் ( PRATHAM) அமைப்பு நேற்று வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேலும் சீரமைக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

தமிழ்நாட்டில் நேரடியாக ஆய்வு செய்ததில் 14.4 % அரசுப் பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லையென்றும், குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தும் 7.9 % பள்ளிகளில் அருந்துவதற்குக் குடிநீர் இல்லையென்றும், மொத்தத்தில் 77.7 % பள்ளிகளில் குடிநீர் இல்லையென்றும் ஏசர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2.6% அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லையென்றும், கழிப்பறை இருந்தும் அதைப் பயன்படுத்தப்பட முடியாத நிலை 16% அரசுப் பள்ளிகளில் உள்ளதென்றும், ஒட்டுமொத்தத்தில் பயன்படுத்தக் கூடிய கழிப்பறைகள் 81.4% பள்ளிகளில் மட்டுமே உள்ளனவென்றும் கூறப்பட்டுள்ளது.

8% அரசுப் பள்ளிகளில் பெண்களுக்குத் தனியே கழிப்பறை இல்லையென்றும், தனி கழிப்பறைகள் இருந்த போதிலும் 3% பள்ளிகளில் அவை பூட்டப்பட்டு இருந்ததாகவும், பயன்படுத்த முடியாத நிலையில் 11.6% கழிப்பறைகள் இருந்ததாகவும் ஒட்டு மொத்தத்தில் 77.5% கழிப்பறைகள் மட்டுமே பெண்களுக்கு இருக்கின்றனவென்றும் ஏசர் அறிக்கைக் கூறுகிறது.

நூலக வசதி 13.3% அரசுப் பள்ளிகளில் இல்லையென்றும் நூலகம் இருந்தும் 22.4% பள்ளிகளில் நூலகத்தை மாணவர்கள் பயன்படுத்த முடியவில்லையென்றும், ஒட்டு மொத்தத்தில் 64.3% பள்ளிகளில் மட்டுமே மாணவர்கள் பயன்படுத்தக் கூடிய நிலையில் நூலகங்கள் இருக்கின்றனவென்றும் ஏசர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டிசம்பர் 2024 இல் வெளியான UDISE அறிக்கையில் தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் ஏறக்குறைய 100% பள்ளிகளிலும் குடிநீர், கழிப்பறை, நூலக வசதிகள் உள்ளனவென்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு மாறாக ஏசர் அறிக்கையின் விவரங்கள் உள்ளன.

UDISE அறிக்கை பள்ளி நிர்வாகத்தினர் தாமே போர்ட்டலில் பதிவு செய்யும் விவரங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படுகிறது. ஆனால், ஏசர் அறிக்கையோ 534 பள்ளிகளை நேரடியாக ஆய்வு செய்து அதன் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, ஏசர் அறிக்கையின் விவரங்களே ஒப்பீட்டளவில் உண்மைக்கு நெருக்கமாக இருக்கும். இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

ஏசர் அறிக்கையில் கவலைதரும் இன்னொரு தகவலும் உள்ளது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 14 வயது வரையிலான மாணவர் சேர்க்கை 2022 ஆம் ஆண்டு 75.7% இருந்ததென்றும் அது 2024 ஆம் ஆண்டில் 68.7 % ஆகக் குறைந்திருக்கிறதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை உயர்ந்தது. ஆனால் அது இப்போது சரியத் தொடங்கியுள்ளது. கட்டமைப்பு வசதிகளும், போதிய ஆசிரியர்களும் இல்லாவிட்டால் ஏழைப் பெற்றோர்கூட தனியார் பள்ளிகளிலேயே தமது பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.

தமிழ்நாடு அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த எதிர்வரும் நிதிநிலை அறிக்கையில் கூடுதல் நிதி ஒதுக்கவேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

திருப்பத்தூர் ஏரியின் அவலநிலையை சுட்டிக்காட்டிய விகடன்; தூய்மைப்படுத்தி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தையொட்டி அமைந்துள்ளது பெரிய ஏரி. மிகப்பெரிய பரப்பளவைக் கொண்ட இந்த ஏரி, மக்களின் மீன் பிடி தொழிலுக்கும் வேளாண் பாசன வசதிக்கும் பெரும் உதவியாக இருந்து வருகிறது.ஆனால்,... மேலும் பார்க்க

`மருத்துவப் படிப்பில் 1200 க்கும் மேற்பட்ட இடங்கள் பறிபோகும் அபாயம்' - அமைச்சர் மா.சுப்ரமணியன் வேதனை

மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு, 'நீட்' எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.முதுநிலை மருத்துவப் படிப்புகளில், மாநில ஒதுக்கீட்டு இடங்களில், வசிப்பிடத்தின் அடிப்படையில் உள் ஒதுக்கீடு, ... மேலும் பார்க்க

Trump: 'அரசு ஊழியர்களே, பணியில் இருந்து விலகலாம்; 8 மாத சம்பளம்..!' - எலான் மஸ்க் பாணியில் ட்ரம்ப்?

ஜனவரி 20, 2025... அமெரிக்க பிரதமராக பதவியேற்ற அந்த நொடியில் இருந்து பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் ட்ரம்ப். அதில் ஒன்று இப்போது, 'அமெரிக்க அரசு ஊழியர்களை பணியில் இருந்து விலக' சொல்வதாகும்... மேலும் பார்க்க

`டேக் ஆஃப்’ ஆகும் கோவை `மெட்ரோ ரயில்’ திட்டம் - சத்தி சாலையில் அதிகாரிகள் ஆய்வு

கோவை மாவட்டத்துக்கு கடந்த 2012-ம் ஆண்டே மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதுவரை அது செயல்படுத்தப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் அதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. அதன்படி க... மேலும் பார்க்க

Rajasthan: ``நிலத்திற்குள் செல்ல முடியவில்லை, ஹெலிகாப்டர் வசதி வேண்டும்!'' -விவசாயி வினோத மனு

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் மாவட்ட கலெக்டர் டினா தாபிக்கு வினோதமான கோரிக்கை மனு ஒன்று வந்துள்ளது. பார்மர் மாவட்டத்தை ஜோராப்புராவை சேர்ந்த மங்கிலால் என்ற விவசாயி தான் அந்த வினோத மனுவுக்கு சொந்தக... மேலும் பார்க்க

Ola, Uber: பிப்., 1-ம் தேதி ஓலா, உபர் ஆட்டோக்கள் திடீர் வேலை நிறுத்தம்; காரணம் இதுதான்!

ஓலா, உபர், ரேபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள்தான் பெருநகரங்களில் மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் கால் டாக்ஸி.இந்த ஓலா, உபர் போன்ற ஆன்லைன் டாக்ஸிகளால் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாக நீண்ட நாள்கள் பிரச்ன... மேலும் பார்க்க