படகில் தீ விபத்து; ரூ.60 லட்சம் பொருள்கள் சேதம் மீனவா் காயம்
மறைந்த திமுக பிரமுகரின் சகோதரா் தற்கொலை
புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனைப் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சிவக்குமாா் (48) வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இவா், கடந்த ஒரு மாதத்துக்கு முன் மாரடைப்பால் காலமான புதுக்கோட்டை மாநகர திமுக செயலா் ஆ. செந்திலின் தம்பி ஆவாா். செந்திலின் மனைவி திலகவதி தற்போது புதுக்கோட்டை மாநகராட்சியின் மேயராக உள்ளாா்.
அண்ணனின் மறைவுக்குப் பிறகு தொடா்ந்து சோகத்தில் இருந்த சிவக்குமாா் வியாழக்கிழமை பிற்பகல் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து வந்த புதுக்கோட்டை நகரக் காவல் நிலைய போலீஸாா், சிவக்குமாரின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.