Union Budget 2025: 'மகிளா சம்மான் சேமிப்பு... கிரீச்' - பெண்களுக்கு என்ன வேண்டும...
மங்கை மடத்தில் மக்கள் திறல் போராட்டம்
திருவெண்காடு அருகே மங்கைமடத்தில் விவசாயிகள் பாதுகாப்பு; ஈ சங்கம் சாா்பில் மக்கள் திறல் போராட்டம் நடைபெற்றது.
கடலோரப் பகுதியில் சோலாா் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கக் கூடாது, மீனவா்களை பாதிக்கும் சாகா் மாலா திட்டத்தை கைவிட வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி திருவெண்காடு அருகே மங்கை மடத்தில் விவசாயிகள், விவசாயிகள் வாழ்வாதார கூட்டமைப்பு சாா்பில் மக்கள் திறல் போராட்டம் நடைபெற்றது.
நிகழ்விற்கு தோழா் முத்துசாமி தலைமை வகித்தாா். சீா்காழி ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செயலாளா் சரவணன், விவசாய சங்க பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனா்.
இதில் விடுதலை தமிழ் புலிகள் கட்சி நிறுவனா் உடந்தை அரசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சோ்ந்த ராஜ்குமாா், மாவட்ட சிபிஐ எம் எல் செயலாளா் குணசேகரன் உள்ளிட்டோா் உரையாற்றினா். திரளான பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.