செய்திகள் :

Live Budget 2025 : இன்று தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்... குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது!

post image

நிர்மலா சீதாராமனின் 8-வது பட்ஜெட்..!

2025- 2026-ம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை நிகழ்த்துவார். காலை 11 மணியளவில் தொடங்கும் இந்த நிகழ்வில், இரு அவை உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம், மக்களவையில் பிப்ரவரி 3, 4 ஆகிய இரு தினங்கள் நடைபெறும். இதற்கிடையில், நாளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட் தாக்கல் செய்வார். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

இந்த பட்ஜெட் தாக்கல் மீது மூன்றுநாள்கள் விவாதம் நடக்கும். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி 6-ம் தேதி விவாதங்களுக்கு பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 27 அமர்வுகள் கொண்ட இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்கட்ட அமர்வு 13-ம் தேதியுடன் முடிவடைகிறது. இரண்டாம்கட்ட அமர்வு மார்ச் 10-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதிவரை நடக்கும் எனக் கூறப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரை சிறப்பாக நடத்துவது தொடர்பாக நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

'உணவில் பாகுபாடு இருந்ததைக் கண்டு MGR கொந்தளித்தார்!' - Journalist Manaa Interview | Jayalalithaa

இந்த வீடியோவில், மூத்த பத்திரிக்கையாளரான திரு. மனா அவர்கள் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் ஆரம்ப கால ஆசைகளைப் பற்றியும், மேலும் முன்னாள் முதல்வரான எம்.ஜி.ஆர் மற்றும் நடிகர் சிவாஜி கணேச... மேலும் பார்க்க

TVK : 'தவெக பக்கம் ரூட்டை மாற்றும் ஆதவ் அர்ஜூனா?!’ - பரபரக்கும் பனையூர்

விசிக டு தவெக... ஆதவ் அர்ஜுனா!'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' நிறுவனத்தின் தலைவர், ஆதவ் அர்ஜுனா. இவர் கடந்த ஆண்டு ஜனவரியில் வி.சி.க-வில் இணைந்தார். அடுத்த மாதமே அவருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுத்து அழகு... மேலும் பார்க்க

அரிட்டாப்பட்டி: `சட்டமன்ற தீர்மானத்துக்கு பயந்து அல்ல; மக்களின் அன்புக்கு பயந்து..!’ - அண்ணாமலை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பல்லுயிர் பாரம்பரியத் தலமான அரிட்டாப்பட்டி உட்பட 11 ஊராட்சிப்பகுதிகள் பாதிக்கப்படும் வகையில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க வேதாந்தா குழும நிறுவனத்துக்கு ஏலம் விட்டது மத்திய... மேலும் பார்க்க

Rahul Gandhi: `காங்கிரஸின் அந்த தவறு... ஒப்புக்கொள்ள தான் வேண்டும்’ - ராகுல் காந்தி

ராகுல் காட்டம்`மோடியின் நவீன பதிப்பு கெஜ்ரிவால்’டெல்லியில் சட்டசபை தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்துவருகிறது. இது சம்பந்தமான நிகழ்ச்சி ஒன்றில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளதாவ... மேலும் பார்க்க

கடலூர்: `அய்யோ என் புள்ளைங்க போகுதே!’ - ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்திய அரசு... கதறித் துடித்த பெண்கள்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட வானமாதேவி, கொடுக்கன்பாளையம், தெத்தங்குப்பம், கட்டாரா சாவடி உள்ளிட்ட கிராமங்களில் அரசுக்கு சொந்தமாக 65.75 ஹெக்டேர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில் அப்பக... மேலும் பார்க்க

'சீமான் சொன்னதை நம்பி ஏராளமான பணம் கொடுத்து ஏமாந்தோம்' - கொளத்தூர் மணி வேதனை

திராவிடர் விடுதலை கழகம் தலைவர் கொளத்தூர் மணி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், " ஈழப் போராட்டம் ஆயுத போராட்டமாக மாறியபோது, அந்த போராளி குழுக்களுக்கு தமிழகத்தில் ஆயுதப் பய... மேலும் பார்க்க