செய்திகள் :

'புதிய கற்கால கருவிகள், இரும்புக் கால பாத்திரங்கள்...' - சென்னனூர் அகழ்வாய்வில் கிடைத்த சான்றுகள்

post image

"தமிழ்நாட்டிலிருந்து இந்தியாவின் வரலாறு எழுதப்பட வேண்டும். தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது" என்ற என முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார். இதை உறுதிப்படுத்தும் விதமாகப் பழைய கற்காலம், புதிய கற்காலம் என அனைத்துக் காலகட்டத்திலும் தமிழ்நாட்டில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்திருக்கிறது.

குறிப்பாக பையம்பள்ளி, வலசை, செட்டிமேடு, மயிலாடும்பாறை, மோளப்பாளையம் ஆகிய ஐந்து இடங்கள் புதிய கற்கால தளங்களாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தின், ஊத்தங்கரை தாலுகாவில் உள்ள சென்னனூர் புதிய கற்காலத்தின் கண்டுபிடிப்புகளுக்குப் புதையல் களமாகக் கருதப்படுகிறது. அகழ்வாராய்ச்சியில் சுமார் 1 மீட்டரிலேயே கற்கால படிவுகளின் குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

அகழ்வாராய்ச்சி பணிகள்
அகழ்வாராய்ச்சி பணிகள்

ஜூன் 2024-ல் இந்தப் பகுதியில் தொடங்கிய அகழ்வாராய்ச்சியில், இரண்டு இடங்களில் 11 அகழிகள் தோண்டப்பட்டிருக்கின்றன. இதிலிருந்து வெவ்வேறு கலாசார மட்டங்களின் 327 கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. நுண் கற்காலத்தைச் சேர்ந்த கல் கத்திகள், கையால் செய்யப்பட்ட மட்பாண்டங்கள், புதிய கற்காலத்தைச் சேர்ந்த எரிந்த பாத்திரங்கள் மற்றும் இரும்புக் காலத்தைச் சேர்ந்த கருப்பு மற்றும் சிவப்புப் பாத்திரங்கள் போன்ற கருவிகள் மீட்கப்பட்டுள்ளன.

மற்ற ஐந்து பகுதிகளில் சுமார் 10 - 15 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை எல்லாம், இங்கு ஒரு மீட்டர் ஆழத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. எனவே, மேலும், ஆழமாகத் தோண்டி அகழ்வாராய்ச்சி செய்தால், இன்னும் அதிக ஆச்சரியங்கள் நிகழலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

ஆல்பிரட் நோபல் `மரண வியாபாரி’ என்ற அடையாளத்தை துடைத்து எறிந்தது எப்படி?| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கோஹினூர் - ஒப்பற்ற வைரத்தின் சுருக்கமான வரலாறு | My Vikatan

இங்கிலாந்து ராணியாகக் கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் ஆட்சி புரிந்த இரண்டாம் எலிசபெத் 2022 இல் இறந்தபோது, கோஹினூர் வைரம் பற்றிய புகைச்சல் மீண்டும் பரவ ஆரம்பித்தது.இங்கிலாந்து அரசிடமிருந்து மீட்டு, கோஹினூர... மேலும் பார்க்க

175 ஆண்டுகள் பழமையான ஊட்டி போலீஸ் ஸ்டேஷன்... குழந்தைகள் பராமரிப்பு மையமாக மாறுகிறதா?

200 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரியில் குடியேறிய ஜான் சல்லிவன் உள்ளிட்ட ஆங்கிலேயர்கள், நவீன ஊட்டி நகரை நிர்மாணித்தனர். 'ஸ்டோன் ஹவுஸ்' எனப்படும் முதல் கல் பங்களா ஒன்றை எழுப்பியதுடன் பல்வேறு கட்டுமானங்களைய... மேலும் பார்க்க