செய்திகள் :

யமுனை விவகாரம்: கேஜரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்!

post image

யமுனை நதி விவகாரத்தில் கேஜரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹரியாணா அரசு, யமுனை நதியில் விஷத்தை கலப்பதாக தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தில்லிக்கு தண்ணீா் வழங்கும் யமுனை நதியில் ஹரியாணா மாநிலம் விஷத்தை வெளியேற்றுவதாகவும் அமோனியா எனப்படும் விஷம் கலந்திருப்பதை உறுதிப்படுத்தியதாகவும் கேஜரிவால் தெரிவித்திருந்தார்.

இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, ஹரியாணா முதல்வர் நைப் சிங் சைனி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதையும் படிக்க | ஒரு மணி நேரம் பேசிய குடியரசுத் தலைவர்! - உரையின் முழு விவரம்

இந்த நிலையில், விஷம் கலப்பதாக பொய் கருத்து தெரிவித்து தில்லி, ஹரியாணா மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியதாக கேஜரிவால் மீது ஹரியாணா அரசு சோனிபட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

மேலும்,  இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்கும்படி கேஜரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதன் அடிப்படையில் அவர், தேர்தல் ஆணையத்தில் ஆஜராகியுள்ளார்.

இதனிடையே தில்லியில் கேஜரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

யமுனை நதி விவகாரத்தில் காங்கிரஸ் இளைஞரணியினர், கேஜரிவாலுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களில் 5 மத்தியப் பிரதேச பக்தர்கள்!

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்துவரும் மகா கும்பமேளாவில் மௌனி அமாவாசை புனித நீராடலின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 30 பேரில் ஐந்து பேர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம... மேலும் பார்க்க

நீதி விசாரணைக் குழு பிராயாக்ராஜில் ஆய்வு!

மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க உத்தரப் பிரதேச அரசால் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட நீதி விசாரணைக்குழு ஆணையம் பிரயாக்ராஜ் சென்றடைந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜன.29 அன்று ... மேலும் பார்க்க

யாருக்கு வருமான வரிச் சலுகை? பிரதமர் மோடி சூசகமாக சொன்னது!

நாட்டில், நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களுக்கு வருமான வரிச் சலுகை அளிக்கப்படும் என்பதை, பிரதமர் மோடி சூசகமாகக் கூறியிருந்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று குடியரசுத் த... மேலும் பார்க்க

பொருளாதார வளர்ச்சி 6.8% வரை இருக்கும்: ஆய்வறிக்கை தாக்கல்

மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆண்டின் முதல் க... மேலும் பார்க்க

ஜிபிஎஸ் நோய்க்கு புணேவில் 3வது நபர் பலி!

மகாராஷ்டிரத்தின் புணே மாவட்டத்தில் ஜிபிஎஸ் நோய்க்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 36 வயது டாக்ஸி ஒட்டுநராக இருந்தவர் கட... மேலும் பார்க்க

தாணேவில் சட்டவிரோதமாகக் குடியேறிய 9 வங்கதேசத்தினர் கைது!

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் உள்ள சால் பகுதியில் சட்டவிரோதமாகக் குடியேறிய 9 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பிவாண்டியின் த... மேலும் பார்க்க