ஆல்பிரட் நோபல் `மரண வியாபாரி’ என்ற அடையாளத்தை துடைத்து எறிந்தது எப்படி?| My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்.
கடந்த சில மாதங்கள் முன்னர் ஒட்டுமொத்த உலகமும் யாருக்கு இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு? எந்த வகையான பங்களிப்பிற்கு வழங்கப்படும்? என ஆவலுடன் காத்திருந்தது. நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு பரிசு பெற்றவர்களின் பங்களிப்பு என்ன என்பதை உலகமே அறிந்து கொண்டது.
இதோ இன்றைய உலகம் LPG எனும் Liberalization , Privatization, Globalization தாராளமயம்,தனியார் மயம், உலகமயம் என விரைகிறது.
எலான் மஸ்க், அம்பானி, அதானி... `உலகப் பெரும் பணக்காரர் இவர்'... `இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் இவர்தான்' என பெரும் செல்வந்தர்கள் பறக்கிறார்கள்.
ஆனால் பல மில்லியன் கணக்கான சொத்துக்களை சொந்தமாக கொண்ட ஒருவர், நாளைய சமுதாயம் `டைனமைட்’ எனும் வெடி பொருளை கண்டுபிடித்த ஒரு மோசமான மனிதனாகவே தன்னை அறியும் என ஆழமாக யோசித்து தன் மொத்த சொத்தில் 94 சதவீத சொத்துக்களை வங்கியில் செலுத்தி நோபல் பரிசு என்ற பெயரில் ஒரு பரிசினை நிறுவியவர்.
ஸ்வீடன் நாட்டில் 1833- ம் ஆண்டு அக்டோபர் 21- ம் தேதி தம் பெற்றோருக்கு எட்டுக் குழந்தைகளில் ஒருவராக பிறந்த ஆல்பிரட் நோபல் சிறு வயதிலேயே தன் குடுத்தினருடன் வெடி பொருட்களை பெட்டிகளில் அடைத்து அனுப்பி வைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார். திரவ வடிவ கலவையாக இருந்த நைட்ரோ கிளிசரினை மிகவும் கவனமாக கையாள வேண்டும்.
மிகவும் சக்தி வாய்ந்த ஒரு வெடிபொருளாக இருந்து வந்தது திரவ வடிவ மற்றும் மிகவும் நிலையற்ற தன்மை உடையதாக இருந்து வந்ததால் பாதுகாப்பான வகையில் கையாள முடியாத சவாலான ஒன்றாக இருந்தது.
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி, பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம்... உலகமே ரயில் வண்டி ரயில் பாதைகள் சுரங்கம் அமைத்தல் போன்ற தொழில் புரட்சியில் நாலுகால் பாய்ச்சலில் இருந்து வந்த காலக் கட்டம் அது.
பாதுகாப்பு இல்லாத இந்த வெடிமருந்தினை கையாளுதல் கப்பல் போக்குவரத்து மூலம் கொண்டு செல்லுதல் என பல்வேறு தருணங்களில் ஏற்பட்ட வெடி விபத்துகள் மிகவும் அச்சமூட்டும் ஒன்றாக இருந்தது.
இதோ இந்த 21- ம் நூற்றாண்டிலும் கூட தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு தயாரிக்கும் விருதுநகர் மாவட்ட சிவகாசி பகுதியில் வெடி விபத்துகள் உயிரிழப்பு எனும் செய்திகளை கடந்து சென்று கொண்டு இருக்கிறோம்.
அப்போது பாதுகாப்பு இல்லாத ஆபத்தான திரவ வடிவிலான நைட்ரோ கிளிசரனை கையாளுவதும் பாதுகாப்பான வகையில் வெடி மருந்தாக பயன்படுத்துவதும் பெரும் சவாலாக இருந்தது. இத்தகைய ஆபத்து மிகுந்த நிலையற்ற திரவ வடிவிலான நைட்ரோ கிளிசரனை கையாளும் பணிகளில் ஆல்பிரட் நோபல் ஈடுபாட்டுடன் ஈடுபட்டு வந்த காலம் அது.
அப்படியாக ஒரு நாள் திரவ வடிவிலான நைட்ரோ கிளிசரின் ஒரு கலன் ஒன்றில் இருந்த ஒரு ஓட்டையின் வழியே வழிந்து கசிந்து கொண்டிருந்தது.
கசிந்து கொண்டிருந்த திரவ வடிவிலான நைட்ரோ கிளிசரினை கலனின் கீழிருந்த மணல் போன்ற மண் வெகு வேகமாக உறிஞ்சிக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட ஆல்பிரட் நோபல் திரவ வடிவிலான நைட்ரோ கிளிசரின் மற்றும் அந்த மணலை வெவ்வேறு விகிதங்களில் கலந்து இறுதியில் பாதுகாப்பாக கையாளும் வகையில், 1863-ல் வெடி மருந்தினை கண்டறிந்தார் அந்த பாதுகாப்பான வெடி மருந்துக்கு 'டைனமைட்' எனும் பெயரிட்டார். டைனமைட் கண்டு பிடிப்பிற்கு பிறகு உலகம் முழுவதும் சுரங்க தொழில் ஆழமான கிணறுகள் மலைகள் உடைப்பு போன்றவை வெகு வேகமெடுத்தது. இதன் மூலம் ஆல்பிரட் நோபல் அவர்களின் கண்டு பிடிப்புக்கு, காப்புரிமை மூலம் மில்லியன் கணக்கிலான வருமானம் கிடைத்தது.
ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ரஷ்யன் மற்றும் ஸ்வீடிஷ் மொழிகளை சரளமாகப் பேச எழுத தெரிந்தவராக விளங்கினார் ஆல்பிரட் நோபல். இடைவிடாத அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த ஆல்பிரட் நோபல் அவரது சகோதரர் எமில் நோபல் என்பவர் ஒரு வெடித் தொழிற்சாலை விபத்தில் மரணிக்க ஆல்பிரட் நோபல் இறந்தாக கருதி 'மரண வியாபாரி மரணமடைந்தார் ' எனும் தலைப்பில் அன்றைய செய்தி ஊடகங்கள் செய்தியை வெளியிட்டன.
இப்படியாக வெளிவந்த செய்தி ஆல்பிரட் நோபல் அவர்களின் மனதை மிகவும் வருந்தச் செய்தது. தன் வாழ்விற்கு பிறகு இந்த உலகம் தன்னை டைனமைட் எனும் வெடி மருந்தினை கண்டுபிடித்த ஒரு நபராகவே நினைவில் வைத்திருக்கும் என்ற சிந்தனை மிகுந்த வேதனையான ஒன்றாக தோன்றியது.
இத்தகைய அடையாளத்தை மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைத்தார் ஆல்பிரட் நோபல். அந்த தொடர்ச்சியான சிந்தனை மூலம் இந்த உலக வரலாற்றில் தனது பெயரை ஒரு மரண வியாபாரி என்ற அடையாளத்தை துடைத்து எறிந்து விட வேண்டும் என்று நினைத்தார்.
இத்தகைய யோசனையின் தொடர்ச்சியாக தன் கடைசி உயிலின் மூலம் தன் பெரும் சொத்தினை கொண்டு நோபல் பரிசை நிறுவினார். அதன் மூலமாகவே இன்று ஆண்டுதோறும் இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம் ,இலக்கியம் மற்றும் உலக அமைதி ஆகிய பிரிவுகளில் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இவரின் நினைவாக நோபெலியம் (Nobelium)என்னும் synthetic தனிமம் பெயரிடப்பட்டது. உலகின் முதல் பணக்காரர் இரண்டாம் பணக்காரர் என்ற போட்டி நிறைந்த இந்த LPG உலகில், கட்டுரையின் முதலில் குறிப்பிட்டவாறு,
"மனநிறைவு மட்டுமே உண்மையான செல்வம்."
எனும் ஆல்பிரட் நோபல் அவர்களின் சிந்தனைப்படி நோபல் பரிசாகவே வாழ்கிறார்.
- வீ.வைகை சுரேஷ்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...