செய்திகள் :

``ஞானசேகரன் அலைபேசியில் யார் யாரிடம் பேசினார் என்ற விவரங்களை வெளியிடுவேன்" - அண்ணாமலை அதிரடி

post image

மதுரை மாவட்டம், அ.வல்லாளப்பட்டியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்க வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும்போது, ``பாஜக, கொண்டு வராத ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்தது, மக்களின் கோரிக்கையை ஏற்று டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்தோம், டங்ஸ்டன் திட்டம் ரத்தானதன் வெற்றி மாலையை யாருக்கு வேண்டுமானாலும் போடலாம்.

அண்ணாமலை!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாதிக்கப்பட்ட சம்பவத்தில் ஞானசேகரன் யார் யாருடன் பேசினார் என்பது குறித்த தகவல்கள் என்னிடம் உள்ளன. ஆதாரங்களை ஒரு நாள் வெளியிடப் போகிறேன். வழக்கின் போக்கை தெரிந்து கொண்டு ஆதாரங்களை வெளியிடுவேன். ஞானசேகரன், குற்றம் செய்த பின்பு யார் யாரிடம் பேசினார் என்கிற ஆதாரம் என்னிடம் உள்ளது.

எப்.ஐ.ஆர் லீக் செய்தது யார் என விசாரிக்கவில்லை,  செய்தியாளர்களின் செல்போனை பறிமுதல் செய்தது தவறு, சிறப்பு புலனாய்வுக் குழு முறையாக விசாரிக்கவில்லையென்றால், ஞானசேகரனின் செல்போன் தகவல்களை வெளியிடுவேன்.

செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்றாலும் அவர்களுக்கு பாஜக சட்ட உதவிகளைச் செய்யும், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு திசை திருப்பப்படுகிறது.

அண்ணாமலை

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு செல்லாத முதலமைச்சர் அரிட்டாப்பட்டிக்கு வந்ததிலிருந்தே அவருடைய அரசியலை புரிந்து கொண்டேன். அவசர அவசரமாக பாராட்டு விழாவிற்கு வருவதற்கு வேகம் காட்டிய முதலமைச்சர் அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் ஏன் வேகம் காட்டவில்லை? ஞானசேகரன் திமுகவிலிருந்து இன்னும் நீக்கப்படவில்லை.  தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களில் தமிழக காவல்துறை தலைவர் கொடுக்கக்கூடிய செய்தி குறிப்புகள் முற்றிலும் பொய்யாக உள்ளது.

இ.சி.ஆரில் நடந்த சம்பவத்தில் காவல்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, பெண்களையே குற்றவாளியாக்குகிறது, தமிழகத்தில் நடைபெறும் கேடுகெட்ட செயல்களுக்கு காவல்துறை துணை போகக்கூடாது என உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்.

இசிஆரிலுள்ள என் வீட்டில் கொடியேற்ற முயற்சித்தபோது காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுத்ததுபோல பெண்களை துரத்தும்போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? குற்ற செயல்களில் திமுக அரசு கூறிய பொய்களை திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்க முயல்கிறது.

 செல்வப்பெருந்தகை கருப்புக்கொடி காட்டுவதால் அமித்ஷா பயந்து அகமதாபாத்துக்கு திரும்பிச் சென்று விடுவாரா? பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்டு அவர்களை காவல்துறை பயமுறுத்துகிறது, வேங்கைவயல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு செட்டப் செய்து ஆடியோவை வெளியிட்டு உள்ளனர். வேங்கை வயல் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தால் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து தருகிறோம். இவ்வழக்கில் சாதி மோதல் வரக்கூடாது என்பதற்காக அதே சமுதாயத்தைச் சேர்ந்த மூன்று பேரை குற்றவாளி ஆக்கி உள்ளீர்கள்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

NTK: ``சங்கியாக செயல்பட முடியாது அண்ணா..." - நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் கட்சியிலிருந்து விலகல்

நாம் தமிழர் கட்சியிலிருந்து மாவட்ட செயலாளர்கள் முதல் தொண்டர்களை வரை பலரும் தொடர்ச்சியாக விலகி மற்ற கட்சிகளில் இணைந்த வண்ணம் இருக்கின்றனர். அந்த வரிசையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கள்ளக்குறிச்சி த... மேலும் பார்க்க

TVK: 'முன்னாள் விசிக நிர்வாகி; இந்நாள் அதிமுக நிர்வாகி..!' - பரபரக்கும் பனையூர்!

தவெகவில் இணைவதற்காக அதிமுகவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர் CTR நிர்மல் குமார் பனையூர் அலுவலகத்துக்கு வருகை தந்திருக்கிறார். அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச்செயல... மேலும் பார்க்க

Union Budget 2025 : 'மகாலட்சுமியை பிராத்திக்கிறேன்...' - பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி பேச்சு

நாளை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அது குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் பிரதமர் மோடி. அதில், "நாளை தாக்கல் ஆக உள்ள பட்ஜெட் தேசிய வளர... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: பசியோடு காத்திருந்த மாணவர்கள்; 5 மணி நேரம் தாமதமாக வந்த அமைச்சர்; கொந்தளித்த பெற்றோர்

தஞ்சாவூர், அறிஞர் அண்ணாநூற்றாண்டுஅரங்கத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மனிதநேய வார நிறைவு விழாவும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும்உயர் கல்வித்துறைஅமைச்சர் செழியன் ... மேலும் பார்க்க

'உணவில் பாகுபாடு இருந்ததைக் கண்டு MGR கொந்தளித்தார்!' - Journalist Manaa Interview | Jayalalithaa

இந்த வீடியோவில், மூத்த பத்திரிக்கையாளரான திரு. மனா அவர்கள் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் ஆரம்ப கால ஆசைகளைப் பற்றியும், மேலும் முன்னாள் முதல்வரான எம்.ஜி.ஆர் மற்றும் நடிகர் சிவாஜி கணேச... மேலும் பார்க்க