Aadhav Arjuna : 'விஜய்யுடன் இணைந்த ஆதவ் அர்ஜூனா!' - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப...
NTK: ``சங்கியாக செயல்பட முடியாது அண்ணா..." - நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் கட்சியிலிருந்து விலகல்
நாம் தமிழர் கட்சியிலிருந்து மாவட்ட செயலாளர்கள் முதல் தொண்டர்களை வரை பலரும் தொடர்ச்சியாக விலகி மற்ற கட்சிகளில் இணைந்த வண்ணம் இருக்கின்றனர். அந்த வரிசையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன், கட்சியிலிருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். இது குறித்து, எக்ஸ் தளத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை ஜெகதீச பாண்டியன் வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், ``அண்ணா இதுபோல் ஒரு கடிதம் எழுதுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. காலம் பொல்லாதது என்னை இந்த நிலைமைக்குத் தள்ளியது நீங்கள்தான். தமிழ்நாட்டில் உள்ள முதலாளித்துவ கட்சிகளில் கூட, கட்சிக்குள் சிறிது ஜனநாயகம் இருக்கிறது. `ஆகச்சிறந்த ஜனநாயகத்தை கட்டி எழுப்புவோம்' என்ற முழக்கத்தோடு ஆரம்பித்த நமது கட்சிக்குள் எந்த ஜனநாயகமும் இல்லை.
மாவீரர் குடும்பத்துக்கே மரியாதை கொடுக்காத நீங்கள் எப்படி மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பீர்கள். வரலாறு தந்த மாபெரும் வாய்ப்பை தவற விட்டுவிட்டீர்கள் அண்ணா. ஒருகாலும் இந்த மண்ணில் அரசியல் மாற்றத்தை வலதுசாரி சிந்தனையோடு உங்களால் கொண்டு வரவே முடியாது.
இனிமேல் என்னால் வலதுசாரிகள் வழிகாட்டுதலில் நீங்கள் பேசும் அரசியலின் பெயரால் தமிழுக்கும் தமிழ் தேசியத்திற்கும் துரோகம் செய்ய முடியாது. சங்கியாகவும் செயல்பட முடியாது என்ற காரணத்தால் நான் உயிருக்கு உயிராக நேசித்து தொடங்கிய வளர்த்த கட்சியில் இருந்து கனத்த இதயத்தோடு விலகுகிறேன் அண்ணா." என்று ஜெகதீச பாண்டியன் குறிப்பிட்டிருக்கிறார்.