ரூ. 216 கோடி கொடுத்து டிரம்ப்புடன் மார்க் ஜூக்கர்பெர்க் சமரசம்?
மதுரையில் மல்லிகைப் பூ விலை கடும் உயா்வு: கிலோ ரூ.4,200 ஆக விற்பனை
மதுரை: பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைந்ததாலும், தேவை அதிகரித்ததாலும் மல்லிகைப் பூவின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி மலா் சந்தையில் மல்லிகைப் பூ விலை கிலோ ரூ.4,200-க்கு மேல் விற்பனையாகிறது. மற்ற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி மலா் சந்தை தென்மாவட்டங்களில் முக்கிய மலா் சந்தையாக இருந்து வருகிறது. மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மாட்டுத்தாவணி சந்தைக்கு மல்லிகை, முல்லை, பிச்சி, செவ்வந்தி, மரிக்கொழுந்து உள்ளிட்ட மலா்களைக் கொண்டு வருகின்றனா்.
மதுரை, விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் கேரள மாநிலத்துக்கும் மலா் விற்பனையாளா்கள் பூக்களை வாங்கிச் செல்கின்றனா். மேலும், மதுரை மட்டுமன்றி சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த மக்களும் சில்லறையில் பூக்கள் வாங்கிச் செல்வது வழக்கம். இதன் காரணமாக, மாட்டுத்தாவணி மலா் சந்தை எப்போதும் மக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும்.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக தொடா் மழை பெய்து வந்தது. அதேவேளையில், கடும் பனிப்பொழிவும் உள்ளது. இதனால், மதுரை மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மல்லிக்கைப் பூ விளைச்சல் வெகுவாகப் பாதித்துள்ளது.
விழுப்புரம்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டம்
பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைந்ததாலும், அதேநேரம் பூக்களின் தேவை அதிகமாக உள்ளதாலும் மல்லிகைப் பூவின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி மலா் சந்தையில் மல்லிகைப் பூ விலை கிலோ ரூ.4,200-க்கு மேல் விற்பனையாகிறது. மற்ற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
வியாழக்கிழமை நிலவரப்படி, மல்லிகைப்பூ கிலோவுக்கு ரூ.4,200-க்கு விற்பனையானது. பொங்கல் வாரங்களில், கிலோ ரூ.2,000-க்கு விற்பனையானது. ஆனால் சமீபத்திய வாரங்களில் அவை புதிய உச்சத்தை எட்டியுள்ளன.
மல்லிகை விலையேற்றத்துக்கு ஏற்ப மற்ற மலா்களின் விலையும் கணிசமாக உயா்ந்து காணப்பட்டது.
மெட்ராஸ் மல்லி கிலோவுக்கு ரூ.1,500-க்கும், பிச்சி மற்றும் முல்லை கிலோவுக்கு ரூ.2,000-க்கும், ரோஜா கிலோ ரூ.250-க்கும், சாமந்தி கிலோ ரூ.150-க்கும் விற்பனையானது.
மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த மலர் வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் கூறுகையில், விலை உயர்வுக்கு காலநிலை மாற்றம் மற்றும் சுப நாட்கள் காரணமாக தேவை அதிகமாக உள்ளதாலும் மல்லிகைப் பூவின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என கூறினார்.
வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக டிசம்பர் மாதத்திலிருந்தே மல்லிகை விலை கிலோ ரூ.1,500 முதல் ரூ.2,000-க்கு மேல் விற்பனையானது.
மதுரையில் மல்லி விலை கிலோவிற்கு ரூ.4,000 ஐ தாண்டுவது இதுவே முதல் முறை என்று பூ வியாபாரிகள் தெரிவித்தனர். வரத்து சீராகும் வரை இதே விலை நீடிக்க வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உசிலம்பட்டியைச் சேர்ந்த பாரம்பரிய மல்லிகை விவசாயி மருதுபாண்டியன் கூறுகையில், பருவகால மழை மற்றும் மூடுபனிகள் மல்லிகை சாகுபடியை கடுமையாக பாதித்துள்ளன. பொதுவாக, நாங்கள் ஒரு நாளைக்கு 10–15 கிலோ அறுவடை செய்வோம், ஆனால் இப்போது ஒரு கிலோ கூட பெற முடியாமல் தவிக்கிறோம்.
அதிக விலைகள் நன்மை பயக்கும் என்றாலும், உரங்கள் மற்றும் உயிா்ம உரங்களை பயன்படுத்தினாலும் மகசூல் குறைவது ஒரு பெரிய கவலையாக உள்ளது. வியாழக்கிழமை, ஒரு ஏக்கரில் இருந்து 500 கிராம் மட்டுமே அறுவடை செய்ய முடிந்தது. கடும் பனிப்பொழிவுகள் குறைந்து வெயில் அடித்தால் மட்டுமே மகசூல் இயல்பாகும் என கூறினார்.