செய்திகள் :

ரூ. 7,132 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு: அமைச்சா் பி.கே. சேகா்பாபு

post image

தமிழ்நாட்டில் ரூ. 7,132 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா்.

தமிழ்நாடு முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் தற்போதுவரை 2,392 திருக்கோவில்களில் திருப்பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு திருக்குடமுழுக்குகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், ரூ.7,132 கோடி மதிப்புள்ள 7,400 ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி, 12,202 திருக்கோவில்களில் ரூ.5,515 கோடி செலவில் 23,234 திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோவை மத்திய சிறையில் மற்றொரு கைதி மா்ம மரணம்

திருத்தலங்களின் ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக, ரூ.1,770 கோடி செலவில் 19 கோவில் வளாகங்களில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முதல்வரின் வழிக்காட்டுதல்களால் திருக்கோயில்களில் திருப்பணிகள்

மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களின் உள்ளம் அறிந்து செயல்படும் முதல்வரின் நடவடிக்கைகளால் மக்கள் மகிழ்ச்சியோடு திருக்கோவில்களில் வழிபட்டு வருகிறார்கள் என்றாா்.

6.6 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய உயிரினத்தின் எச்சம் கண்டுபிடிப்பு!

டென்மார்க் நாட்டில் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய கடல் வாழ் உயிரினத்தின் எச்சம் (வாந்தி) படிமங்களாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தலைநகர் கோபன்ஹேகனின் தெற்கு பகுதியில் யூனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டீ... மேலும் பார்க்க

தவெகவில் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாருக்கு முக்கிய பதவி!

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் பதவியும், நிர்மல் குமாருக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு துணைப் பொதுச்செயலாளர் பதவியும் வழ... மேலும் பார்க்க

3-ஆம் கட்ட தவெக மாவட்ட நிர்வாகிகள் பட்டியல்!

தமிழக வெற்றிக் கழகத்தில் மூன்றாம் கட்டமாக, 19 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.தவெக தலைவர் விஜய் கடந்த ஜன.24 ஆம் தேதி முதல் கட்டமாக தமிழக வெற்றிக... மேலும் பார்க்க

ரூ.90,000க்கு விற்கப்பட்ட பெண் குழந்தை! போராடி மீட்ட பாட்டி!

மகாராஷ்டிர மாநில தாணேவில் பெற்றோரால் விற்கப்பட்ட பெண் குழந்தையை காவல் துறையினரின் உதவியோடு குழந்தையின் பாட்டி பத்திரமாக மீட்டுள்ளார்.தாணேவின் உல்ஹாஸ்நகர் பகுதியைச் சேர்ந்த விஷால் என்பவருக்கு கடந்த ஜன.... மேலும் பார்க்க

தில்லிக்கு இரட்டை என்ஜின் அரசு தேவை: பிரதமர் மோடி

தில்லிக்கு இரட்டை என்ஜின் அரசு தேவை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.தில்லியில் 2013-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி கட்சி இடையில் ஒா் ஆண்டு குடியரசுத் தலைவா் ஆட்சிக்கு பின்னா் 2015 முத... மேலும் பார்க்க

ஹிமாசலில் 2 கிலோ போதைப் பொருள் பறிமுதல்! 2 பேர் கைது!

ஹிமாசல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் 2 கிலோ அளவிலான ஹஷிஷ் எனும் போதைப் பொருள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பா மாவட்டத்தின் மதோலி பகுதியில் நூர்பூர் காவல் துறையினர் போதைப் பொருள் கடத்தலு... மேலும் பார்க்க