செய்திகள் :

ஈசிஆர் விவகாரம்: 6 பேர் கைது! 2 கார்கள் பறிமுதல்!

post image

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பெண்கள் சென்ற காரை, மற்றொரு காரில் இருந்த மர்ம நபர்கள் துரத்திய சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஈ.சி.ஆர். சாலையில் முட்டுக்காடு பாலம் அருகே ஜன. 25 அன்று காரில் சென்ற பெண்களை, மற்றொரு காரில் வந்த சிலர், துரத்தும் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பெண்கள் சென்ற காரை நடுரோட்டில் நிறுத்தி இளைஞர்கள் மிரட்டியதும், பெண்கள் காரை ரிவர்ஸில் எடுத்து வேகமாகச் சென்றுள்ளனர். உடனே இளைஞர்களும் மற்றொரு காரில் சென்று பெண்களை அவர்கள் வீடு வரை துரத்திச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதையும் படிக்க | ஏற்றத்தில் பங்குச்சந்தை! மத்திய பட்ஜெட் தாக்கத்தை ஏற்படுத்துமா?

இந்நிலையில் பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கானத்தூர் போலீசார் தெரிவித்தனர். மேலும் அந்த இளைஞர்களை கைது செய்ய பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இருவரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டம்

விழுப்புரம் : விழுப்புரத்தில் வெள்ளிக்கிழை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈ... மேலும் பார்க்க

இளைஞா்கள் அரசியலில் தீவிரமாக பங்கேற்க வேண்டும்: மத்திய அமைச்சா் எஸ்.ஜெயசங்கா்

புது தில்லி: தில்லி சட்டபேரவைத் தோ்தலில் இளம் வாக்காளா்கள் தங்கள் மக்கள் பிரதிநிதிகளை 'சரியாகத் தோ்வு' செய்ய இது சரியான வாய்ப்பு என தெரிவித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெயசங்கா், இளைஞா்கள... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோத மதுபானக் கடத்தல்: 3 பேர் கைது

புது தில்லி: தில்லியின் வடக்கு புறநகா்ப் பகுதியில் செயல்படும் சட்டவிரோத மதுபானக் கடத்தலில் ஈடுபட்ட மூன்று போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.மேலும், சட்டவிரோத மதுபானங்கள் ஏற்றப்பட்ட மூன்று... மேலும் பார்க்க

கொச்சியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 27 வங்கதேச தொழிலாளிகள் கைது

கொச்சி: கொச்சியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த தொழிலாளிகள் 27 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.கேரளம் மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தின் வடக்கு பரவூர் பகுதியில் வங்... மேலும் பார்க்க

காந்தியின் இறப்பைக் கொண்டாடியது யார்? ஆளுநர் ரவிக்கு காங்கிரஸ் கேள்வி!

காந்தியின் இறப்பைக் கொண்டாடியது யார் என்று ஆளுநர் கூறுவாரா? என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர். செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.மகாத்மா காந்தியின் நிகழ்வுகள... மேலும் பார்க்க

காப்பகத்திலிருந்து காணாமல்போன சிறுவன்! 2 ஆண்டுகள் கழித்து மீட்பு!

புது தில்லியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன சிறுவனை அம்மாநில காவல் துறையினர் தற்போது மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தில்லியிலுள்ள தனியார் தொண்டு நிறுவனத்த... மேலும் பார்க்க