``ஞானசேகரன் அலைபேசியில் யார் யாரிடம் பேசினார் என்ற விவரங்களை வெளியிடுவேன்" - அண்...
அண்ணா நினைவு நாள்: பிப். 3 முதல்வர் தலைமையில் அமைதிப் பேரணி!
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுகவின் முன்னாள் தலைவருமான அண்ணாதுரையின் நினைவு நாளையொட்டி, திமுக சார்பில் பிப். 3ஆம் தேதி அமைதிப் பேரணி நடைபெறவுள்ளது.
மறைந்த அண்ணாதுரையின் 56-ஆவது நினைவு நாள், வருகின்ற பிப்ரவரி 3 ஆம் தேதி அனுசரிக்கப்படவுள்ளது.
இதையும் படிக்க : ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை! புதிய உச்சம்!
இந்த நிலையில் சென்னை மாவட்ட திமுக வெளியிட்ட அறிக்கையில்,
“அண்ணாவின் 56வது நினைவு நாளினையொட்டி, முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருனாளர் டி.ஆர்.பாலு மற்றும் திமுக நிர்வாகிகள் பிப்ரவரி - 3, திங்கள்கிழமை காலை 7.00 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள்.
இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும்.
திமுக அமைச்சர்கள், நாடாளுமன்றம் - சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் அஞ்சலி செலுத்த வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.