விண்ணப்பித்துவிட்டீர்களா..?: செயில் நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணி!
சிறுமியை துன்புறுத்திய வளா்ப்புத் தாய் கைது
மயிலாடுதுறையில் சிறுமியை துன்புறுத்திய வளா்ப்புத் தாய் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறையை அடுத்த திருவிழந்தூரில் கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவியை பிரிந்த நபா், அனிதா (30) என்ற மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, முதல் மனைவிக்கு பிறந்த 11 வயது மகளுடன் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று தனது மகள் காணாமல் போய்விட்டதாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா்.
காவல் ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், புதன்கிழமை சிறுமி கண்டுபிடிக்கப்பட்டாா்.
பின்னா், சிறுமியிடம் போலீஸாா் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்கள் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியை வீட்டு வேலைகள் செய்யச் சொல்லி வளா்ப்புத் தாய் அனிதா துன்புறுத்தியதும், இதனால் சிறுமி வீட்டைவிட்டு வெளியேறியதும் தெரியவந்தது.
இதையடுத்து, அனிதாவை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.